பிடிஆர் கார் மீது வீசப்பட்ட செருப்பு.. போராட்டத்தில் குதித்த திமுக - தமிழக முழுவதும் பரபரப்பு
அஞ்சலி நிகழ்ச்சியை முடித்துவிட்டு அங்கிருந்து பிடிஆர் சென்ற பொது கூட்டத்தில் இருந்த சிலர் அமைச்சரின் கார் மீது செருப்பை வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை விமான நிலையத்துக்கு வந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அரசின் சார்பில் முதலில் மரியாதை செய்த பிறகே, பாஜகவினர் மரியாதை செய்ய வேண்டும் என அமைச்சர் பிடிஆர், கூறியதால் பாஜகவினர் அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து இச்சம்பவம் நடந்துள்ளது. அஞ்சலி நிகழ்ச்சியை முடித்துவிட்டு அங்கிருந்து பிடிஆர் சென்ற பொது கூட்டத்தில் இருந்த சிலர் அமைச்சரின் கார் மீது செருப்பை வீசினர்.
மேலும் செய்திகளுக்கு..பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலை கதி? நாங்க யாருக்கு சிலை வைப்போம் தெரியுமா ? அண்ணாமலை அதிரடி
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காரில் வீசப்பட்ட செருப்பை அப்புறப்படுத்தினர். இதுதொடர்பாக அங்கு நின்றிருந்த சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அங்கு நின்று கோஷமிட்டவர்களையும் அப்புறப்படுத்தினர்.மதுரை பகுதியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..“ஜெயலலிதா இருந்திருந்தால்.. செருப்படி விழுது தலைவரே.!” குமுறும் திமுகவினர் !
இதற்கு ஏதிர்வினை ஆற்றும் விதமாக இணையதளத்தில் திமுகவினர் ஆவேசத்துடன் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மதுரையில் நிதியமைச்சர் பி.டி.ஆர் கார் மீது பாஜகவினர் தாக்குதல் - விரகனூர் பகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவபொம்மையை எரித்து திமுகவினர் போராட்டம் செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..அந்த வார்த்தை சொன்ன பிடிஆர்.. கடுப்பான பாஜகவினர் - வெளியான அதிர்ச்சி தகவல் !