அந்த வார்த்தை சொன்ன பிடிஆர்.. கடுப்பான பாஜகவினர் - வெளியான அதிர்ச்சி தகவல் !

பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களில் ஒருவர் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன். 

Minister PTR Palanivel Thiagarajan who insulted the BJP members threw slippers on viral video

காஷ்மீரில் உள்ள ராஜௌரி மாவட்டத்திற்கு அருகே உள்ள இந்திய ராணுவ முகாமிற்குள் திடீரென புகுந்த 2 பயங்கரவாதிகள், முகாமில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் பயங்கரவாதிகளால்  3 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். அதேசமயம் முகாமிற்குள் நுழைந்த  2 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Minister PTR Palanivel Thiagarajan who insulted the BJP members threw slippers on viral video

பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களில் ஒருவர் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணன். மற்ற இரு வீரர்கள் ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.  இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடல் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது . மறைந்த  ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  மற்றும்  மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

மேலும் செய்திகளுக்கு..ஒன்று சேரும் ஓபிஎஸ் - சசிகலா? பதறும் எடப்பாடி பழனிசாமி..அதிமுகவில் மீண்டும் பரபரப்பு !

அப்போது ஏற்பட்ட சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்ததால், அங்கு பாஜகவினர் குவிந்திருந்தனர். பாஜகவினரின் கூட்டத்தைப் பார்த்த அமைச்சர் பிடிஆர், இவர்களுக்கு இங்கே என்ன வேலை என்று கேட்டதாக பாஜக தரப்பில் கூறப்படுகிறது. 

Minister PTR Palanivel Thiagarajan who insulted the BJP members threw slippers on viral video

இதனால் கடும் கோபமடைந்த பாஜகவினர் , ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட போது தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது செருப்பு வீசினர். மதுரை விமான நிலைய நுழைவு வாயிலில் நடந்த இந்தச் சம்பவத்தால் பரபரப்பு ஏற்ப்பட்டது. இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு..பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலை கதி? நாங்க யாருக்கு சிலை வைப்போம் தெரியுமா ? அண்ணாமலை அதிரடி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios