ஒன்று சேரும் ஓபிஎஸ் - சசிகலா? பதறும் எடப்பாடி பழனிசாமி..அதிமுகவில் மீண்டும் பரபரப்பு !
அதிமுக தலைமை அலுவலகம், இரட்டை இலை, அதிமுக யாருக்கு சொந்தம் என அதிகார மோதல்கள் வலுத்து வருகின்றது.
ஒருபக்கம் எடப்பாடி பழனிசாமியும், மற்றொரு பக்கம் ஓ.பன்னீர்செல்வமும் மாறி மாறி நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று கூறி வருகின்றனர். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகியோர் ஒன்றாக கரம் கோர்த்து களம் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதியும் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்ந்தெடுத்து அதனை கட்சியின் நிரந்தர சின்னமாக மாற்றும் வகையில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற மாயத் தேவர் காலமானார் என்ற செய்தி நேற்று வெளியானது. இந்நிலையில் மாயத்தேவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு இன்று வருகை தந்தார்.
மேலும் செய்திகளுக்கு..பூமிக்கடியில் ஒரு அணை.. வியக்கவைக்கும் நெல்லை அதிசய கிணறு - உருவானது எப்படி தெரியுமா?
அப்போது செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, 'புரட்சித்தலைவர் அதிமுகவை தொடங்கிய குறுகிய காலத்திலயே திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மாயத்தேவர் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டு இரட்டை இலை சின்னத்தில் சுயேச்சை நின்று வெற்றி பெற்றவர். கழகத்தின் முதல் வெற்றிக்கு சொந்தக்காரர். அவருடைய இழப்பு ஈடு செய்ய இயலாதது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்கிறேன். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு திமுகதான் காரணம்.
திமுகதான் பின்னால் இருந்து செயல்படுகிறது. அதிமுக பிளவுக்கு மத்திய அரசு காரணம் அல்ல. பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும். அதிமுக வெற்றி வாகை சூடும். அம்மாவின் ஆட்சியை உருவாக்குவோம். பிரிந்து இருக்கிற அதிமுகவை ஒன்று சேர்த்து 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம’ என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு..அதிமுகவின் முதல் எம்.பி.. இரட்டை இலையின் நாயகர் - யார் இந்த மாயத்தேவர் !