அதிமுகவின் முதல் எம்.பி.. இரட்டை இலையின் நாயகர் - யார் இந்த மாயத்தேவர் !

அதிமுக முன்னாள் எம்.பி. மாயத்தேவர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.

AIADMK first MP Mayadevar passed away today at dindigul

மாயத்தேவர் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் வசித்து வந்தார்.  எம்ஜிஆர் 1972ஆம் ஆண்டில் அதிமுகவை தொடங்கியவுடன் முதன்முதலாக திண்டுக்கல்லில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சி வேட்பாளராக மாயத்தேவரை நிறுத்தினார். அவர் இரட்டை இலை சின்னத்தில் நின்று அமோக வெற்றி பெற்றார்.தொடர்ந்து ஒரே தொகுதியில் போட்டியிட்டு 1973-77, 1977-80, 1980-84 என தொடர்ந்து 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

AIADMK first MP Mayadevar passed away today at dindigul

மேலும் செய்திகளுக்கு..மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை ! இந்த தேர்வு எழுதினால் போதும்.. மாணவர்கள் விண்ணப்பிப்பது எப்படி?

இவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை பாராட்டி அன்றைய பாரத பிரதமர் இந்திரா காந்தி, இவரை தன்னுடைய ‘மூத்த மகன்’ என்றே அழைத்தனர். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தன்னுடைய ‘உடன் பிறந்த சகோதரர்’ என்று இவரை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.  எம்ஜிஆர் இவரை ‘பாராளுமன்றத்தின் சிங்கம்’ என்று அழைத்துள்ளார். 

மேலும் செய்திகளுக்கு..பூமிக்கடியில் ஒரு அணை.. வியக்கவைக்கும் நெல்லை அதிசய கிணறு - உருவானது எப்படி தெரியுமா?

AIADMK first MP Mayadevar passed away today at dindigul

கலைஞர் இவரை ‘பாராளுமன்றத்தின் பீரங்கி’ என்று அன்றைய கால கட்டத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பாராட்டியுள்ளார். 88 வயதான இவர் தனது இல்லத்தில் திடீரென மாரடைப்பு காரணமாக காலமாகியுள்ளார். சின்னாளப்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios