பானையில் இருந்து தண்ணீர் குடித்த 9 வயது பட்டியலின சிறுவனை ஆசிரியர் ஷாயில் சிங் சரமாரியாக தாக்கியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பானையில் இருந்து தண்ணீர் குடித்த 9 வயது பட்டியலின சிறுவனை ஆசிரியர் ஷாயில் சிங் சரமாரியாக தாக்கியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வரும் இந்திர குமார் பட்டியலின மாணவர் என கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜுலை 20ம் தேதி பள்ளி சென்ற மாணவர் இந்திர குமார் வகுப்பிலிருந்த பானையில் குடிநீர் எடுத்துக் குடித்துள்ளார்.

இதையும் படிங்க;- எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. ஆத்திரத்தில் இருந்த கணவர் என்ன செய்தார் தெரியுமா?

அதன்பின்னர் தான் அப்பானை வகுப்பு ஆசிரியரின் பானை என்பது மாணவனுக்குத் தெரிந்துள்ளது. இதை அறிந்த இந்திர குமாரின் ஆசிரியர் ஷாயில் சிங் சிறுவன் என்றுகூட பாராமல் மாணவனைக் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால், படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்தார். 

இதுதொடர்பாக ஆசிரியர் ஷாயில் சிங் மீது கொலை மற்றும் எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்புப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த தகவலை அறிந்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெல்லோட் இந்திர குமார் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் அரசு நிவாரண உதவி அளித்துள்ளார். இவ்வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு குற்றவாளிக்கு விரைவில் தண்டனை பெற்றுத்தரப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;- நடுரோட்டில் போதையில் தள்ளாடிய பள்ளி மாணவிகள்.. கரூரில் அதிர்ச்சி சம்பவம்..!