திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், வரும் 21 ஆம் தேதி வரை விஐபி தரிசனத்தை ரத்து செய்து திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தொடர் விடுமுறை காரணமாக திருப்பதீ கோவிலுக்கு பக்தர்கள் படையெடுத்துள்ளனர். இதனால் இலவச தரிசனம் மூலம் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 48 மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க:முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்த சுதந்திர தின விழா பதக்கம்...! யார் யாருக்கு விருதுனு தெரியுமா..?
வார இறுதி விடுமுறை மற்றும் சுதந்திர தினம் என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமானதால், தங்குவதற்கு இடம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். மேலும் இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 20 மணி நேரம் முதல் 48 மணி வரை காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
வைகுண்டம் காம்பளக்ஸ் இருக்கும் 64 அறைகளும் நிரம்பியுள்ளதால், இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் 3 கிலோ மீட்டர் நீண்ட வரிசையில் காத்திருத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதுபோன்று ரூ.300 சிறப்பு கட்டண தரிசனத்திற்கு சுமார் 5 மணி நேரம் வரை காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க:பிடிஆரிடம் காலையில் சவால்.. இரவில் சமாதானம்.. மதுரை சரவணனின் மர்ம முடிச்சு
லட்சக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், திருப்பதில் லட்டு பிரசாதத்திற்குத் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் திருப்பதில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், வரும் 20 ஆம் தேதிவரை விஐபி தரிசனத்தை ரத்து செய்து தேவஸ்தானம் அறிவித்துள்ளது.