Asianet News TamilAsianet News Tamil

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்த சுதந்திர தின விழா பதக்கம்...! யார் யாருக்கு விருதுனு தெரியுமா..?

2022ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

The Chief Minister of Tamil Nadu has announced awards to 15 people who have served well in the police force
Author
Chennai, First Published Aug 14, 2022, 10:51 AM IST

காவல் பதக்கம்- தமிழக அரசு

பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய காவல்துறையினருக்கு ஆண்டு தோறும் தமிழக அரசு சார்பாக விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்,  கீழ்கண்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2022-ம் ஆண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

1. திரு.பிரேம்ஆனந்த்சின்ஹா, இ.கா.ப.,கூடுதல் காவல் ஆணையாளர், சட்டம் மற்றும் ஒழுங்கு (தெற்கு), சென்னை பெருநகர காவல்.

2. திரு.க. அம்பேத்கார், காவல் ஆய்வாளர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, கடலூர்.

3. திரு.சு.சிவராமன்,சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், அடையாறு போக்குவரத்து காவல் நிலையம்,சென்னை பெருநகர காவல்.

4. திரு.வை. பழனியாண்டி,சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், இ2 மதிச்சியம் போக்குவரத்து காவல் நிலையம்,மதுரை மாநகரம்.

5. திரு.மா.குமார்,சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், ஜே-10 செம்மஞ்சேரி போக்குவரத்து காவல் நிலையம். தாம்பரம் காவல் ஆணையரகம்.

செருப்பு வீச்சு சம்பவத்தை தூண்டியதே டாக்டர் சரவணன் தான்... பாஜக பகீர் குற்றச்சாட்டு

The Chief Minister of Tamil Nadu has announced awards to 15 people who have served well in the police force

புலன் விசாரணை விருதுகள்

இதேபோன்று புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட 10 காவல்துறை அதிகாரிகள் 2022-ம் ஆண்டு சுதந்திரதினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்:

1. திரு. கோ. ஸ்டாலின். காவல்துறை துணை ஆணையாளர், தலைமையிடம், மதுரை மாநகரம்.

2. திரு.ச. கிருஷ்ணன், காவல் துணை கண்காணிப்பாளர், ஒருங்கிணைந்தகுற்ற அலகு குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை ,சேலம் மாநகரம்

3. திருமதி. மா. பிருந்தா, காவல் ஆய்வாளர், ரோஷனை காவல் வட்டம், விழுப்புரம் மாவட்டம்.

4. திருமதி அ.பிரபா, காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, நாமக்கல் மாவட்டம்.

5. திரு.வீ.சீனிவாசன், காவல் ஆய்வாளர், ஆர்-2 கோடம்பாக்கம் காவல் நிலையம், சென்னை மாநகரக் காவல்.

6. திருமதி. மா.சுமதி, காவல் ஆய்வாளர்,அனைத்து மகளிர் காவல் நிலையம், கொடைக்கானல்,திண்டுக்கல் மாவட்டம்.

7. திருமதி சி. நாகலெட்சுமி, காவல் ஆய்வாளர், கரியாப் பட்டினம் காவல் நிலையம், நாகப்பட்டினம் மாவட்டம்.

8. திரு. வெ.துளசிதாஸ். காவல் உதவி ஆய்வாளர், ட்டீ-12, பூவிருந்தவல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு, சென்ன பெருநகர காவல்.

9. திரு.ச.ல. பார்த்தசாரதி, காவல் உதவி ஆய்வாளர், குற்றப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, ஒருங்கிணைந்த குற்ற அலகு-1, சென்னை.

10. திரு. கா.இளையராஜா, காவல் உதவி ஆய்வாளர், அடையாறு மதுவ அமலாக்கப்பிரிவு, சென்னை.

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். மேற்கண்ட விருதுகள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

பிடிஆரிடம் காலையில் சவால்.. இரவில் சமாதானம்.. மதுரை சரவணனின் மர்ம முடிச்சு

Follow Us:
Download App:
  • android
  • ios