Asianet News TamilAsianet News Tamil

மெரினா அலையில் சிக்கிய சிறுவன்.. பதறிய பெற்றோர், ஓடிவந்த டிஜிபி சைலேந்திர பாபு - வைரல் வீடியோ !

கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை தக்க சமயத்தில் முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றியுள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு.

The boy who got caught in the wave in marina beach dgp sylendra babu giving first aid
Author
First Published Aug 14, 2022, 10:23 PM IST

உலகத்தின் இரண்டாவது நீண்ட கடற்கரையான சென்னை மெரினா கடற்கரை தான் சென்னை மக்களுக்கு பொழுதுபோக்கு தளமாக விளங்கி வருகிறது. ஒரே நாளைக்கு மட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். அதிலும், பண்டிகை தினங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் மெரினா கடற்கரையில் கூட்டம் அலைமோதுகிறது. 

The boy who got caught in the wave in marina beach dgp sylendra babu giving first aid

இங்கு வரும் மக்களுக்காகவே அலங்கார பொருட்கள், ஸ்நாக்ஸ், விளையாட்டு பொருட்கள், சிற்றுண்டி, குளிர்பானம், துரித உணவகம் என கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி கொண்டிருக்கின்றன.மெரினா கடற்கரையின் நட்சத்திர அந்தஸ்து பெற்ற இடம் என்றால் அதுதான் லைட்ஹவுஸ். சுமார் 150 அடி உயரம் கொண்ட இந்த கலங்கரை விளக்கத்தில் 10வது தளத்தில் நின்று பார்த்தால், கடற்கரை மற்றும் நிலப்பகுதியை சேர்ந்து 32 மைல் தொலைவு வரை காண முடியும்.

மேலும் செய்திகளுக்கு..“கஞ்சா பூ கண்ணாலே-னு பாட்டு வேற !” கார்த்தியின் விருமனுக்கு ப்ரோமோஷன் செய்யும் ஜெயக்குமார் !

குறிப்பாக காணும் பொங்கல் கொண்டாட்டத்தின் போது மெரினா கலை கட்டும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சம் மக்கள் மெரினா கடற்கரைகளில் ஒன்று கூடுகின்றனர். இங்கு வந்து உறவினர்களை சந்தித்து பேசி சிர்த்து, ஆடி மகிழ்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி தினமும் காலை, மாலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடைப்பயிற்சி மேற்கொள்வார்கள். 

வார விடுமுறையின் போது குடும்பம் குடும்பமாக மெரினா கடற்கரையில் வந்து விளையாடியும், அங்குள்ள உணவு கடைகளில் உணவருந்தியும் மகிழ்வார்கள். சென்னை மெரினா கடற்கரையில் கடல் அலையில் ஒரு சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு பெரிய அலை வந்ததில் சிறுவன் கடல் அலையில் சிக்கிக்கொண்டார்.

அப்போது அங்கிருந்த சிலர் அந்த பையனை மீட்க, அந்த வழியாக சென்றுள்ள தமிழக டிஜிபி சைலேந்திர பாபு முதலுதவி செய்தார். பிறகு அந்த சிறுவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டிஜிபி சைலேந்திர பாபுவின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். 

மேலும் செய்திகளுக்கு..தமிழ்நாட்டில் உங்க விளையாட்டு எடுபடாது.. சமூக விரோதிகளே ! பாஜகவை எச்சரிக்கும் மு.க ஸ்டாலின்

Follow Us:
Download App:
  • android
  • ios