இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:15 PM (IST) Jul 30
Sneha criticize Veerlakshmi : நடுரோட்டில் ஆட்டோ டிரைவர் உடன் ஏற்பட்ட வாக்குவாதம், மோதல் சம்பவத்திற்கு பிறகு தான் பப்ளிசிட்டிக்கா இப்படியெல்லாம் செய்வதாக பேசிய வீரலட்சுமியை மநீம மகளிர் அணி மாநில செயலாளர் சினேகா கடுமையாக விமர்சித்துள்ளார்.
10:54 PM (IST) Jul 30
கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளி சுர்ஜித்தின் தந்தையான சப் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
10:34 PM (IST) Jul 30
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாஜக அரசு மீட்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் சூளுரைத்தார். பயங்கரவாதிகளை நெற்றியில் சுட்டுக்கொன்றதாகவும், காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலையே முன்னிறுத்துவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
10:21 PM (IST) Jul 30
Radhika Sarathkumar Dengue Fever : நடிகை ராதிகா சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென்று அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
09:54 PM (IST) Jul 30
அழகப்பா பல்கலைக்கழகம் 2025 ஆம் ஆண்டுக்கான Ph.D. நுழைவுத் தேர்வை அறிவித்துள்ளது. கலை, அறிவியல், மேலாண்மை மற்றும் கல்விப் பிரிவுகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். NET/SET/GATE தகுதி பெற்றவர்களுக்கு விலக்கு உண்டு.
09:54 PM (IST) Jul 30
5 மாதங்களாக ஒரு போட்டியில் கூட விளையாடாத அபிஷேக் சர்மா டி20 தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்திருப்பது எப்படி? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
09:48 PM (IST) Jul 30
நிதி அறிவை மேம்படுத்த 5 முக்கிய புத்தகங்கள். பணம் நிர்வாகம், புத்திசாலித்தனமான முதலீடு மற்றும் மனநிலை மாற்றங்கள் மூலம் மற்றவர்களை விட நிதி ரீதியாக புத்திசாலியாக மாறுங்கள்.
09:42 PM (IST) Jul 30
முதல் முயற்சியிலேயே NEET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? பாடத்திட்டத்தைப் புரிந்துகொள்வது, அட்டவணை அமைப்பது, மாதிரித் தேர்வுகள் எழுதுவது மற்றும் சுய பாதுகாப்பு போன்ற அத்தியாவசிய குறிப்புகளை இந்த வழிகாட்டி வழங்குகிறது.
09:39 PM (IST) Jul 30
09:36 PM (IST) Jul 30
CAT 2025 தேர்வில் வெற்றி பெற்று சிறந்த IIM கல்லூரியில் சேர வேண்டுமா? தேர்வு முறை, பாடத்திட்டம், படிப்பு உத்திகள், மாதிரித் தேர்வுகள் மற்றும் WAT-PI தயாரிப்பு குறித்த நிபுணத்துவ வழிகாட்டி.
08:47 PM (IST) Jul 30
Sachana Namidass in Heart Beat 2 Tamil Web Series : ஹார்ட் பீட் 2 வெப் சீரிஸில் ரதியின் இளம் வயது ரதியாக பிக் பாஸ் பிரபலம் சாச்சனா நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
08:33 PM (IST) Jul 30
நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ரூ.500 நோட்டுகள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அவரது நடத்தை குறித்து கடும் கவலை தெரிவித்துள்ளனர். தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
07:56 PM (IST) Jul 30
ரேஷன் பொருட்களின் தரத்தை அதிகரிக்க தமிழ்நாடு அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
07:22 PM (IST) Jul 30
06:59 PM (IST) Jul 30
உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் தொடரில் பாகிஸ்தானுடன் அரையிறுதியில் விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்து விலகியுள்ளது.
06:55 PM (IST) Jul 30
பழைய சோறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும் என்று சமீபகாலமாக இணையத்தில் செய்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து மருத்துவர் சிவா சுந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக விளக்கம் அளித்துள்ளார்.
06:46 PM (IST) Jul 30
Karthigai Deepam 2 Serial Today Episode : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் சிவனாண்டி நான் ஜெயித்தால் உங்கள் அனைவருக்கும் குவாட்டர் தருவேன் என்று கூற அதை வைத்து சாமுண்டீஸ்வரி வாக்கு சேகரிக்கிறார்.
06:41 PM (IST) Jul 30
உங்களது முகத்தில் அடிக்கடி பருக்கள் வருகிறது என்றால் வேப்பிலையில் இந்த ஒரு பொருள் கலந்து பயன்படுத்துங்கள். உடனடி நிவாரணம் கிடைக்கும்.
06:12 PM (IST) Jul 30
தமிழ்நாடு பாஜகவில் விஜயதாரணிக்கு மீண்டும் எந்தவொரு பதவியும் வழங்கப்படாததால் அவர் அதிருப்தி அடைந்துள்ளார். அவர் திமுகவில் இணையப்போவதாக தகவல்கள் உலா வருகின்றன.
06:10 PM (IST) Jul 30
05:57 PM (IST) Jul 30
சில உணவுப் பொருட்களை கண்டிப்பாக நெய்யுடன் சேர்த்து சாப்பிடவே கூடாது. மறந்து போய் சாப்பிட்டால் அதனால் பெரிய அளவில் ஆபத்துக்களையும், பாதிப்புக்களையும் சந்திக்க வேண்டி இருக்கும். நெய்யுடன் சேர்க்க கூடாத உணவுகளின் லிஸ்ட் இதோ உங்களுக்காக...
05:54 PM (IST) Jul 30
05:42 PM (IST) Jul 30
சில ஆண்களுக்கு தாடி மற்றும் மீசை வளராமல் இருக்கும். இதற்கான முக்கிய காரணம் என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
05:39 PM (IST) Jul 30
மழை சீசன் துவங்கி விட்டாலே மூக்கடைப்பு பிரச்சனை ஊரில் பெரும்பாலானவர்களுக்கு வந்து விடும். இவற்றை வீட்டிலேயே சரி செய்வதற்கு மிக எளிமையான 5 வழிகளை தொடர்ந்து பின்பற்றினாலே போதும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் இது நிச்சயம் கை கொடுக்கும்.
05:37 PM (IST) Jul 30
Power Star Srinivasan cheating case: ரூ.1000 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.5 கோடி வாங்கி மோசடி செய்த நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
05:25 PM (IST) Jul 30
05:25 PM (IST) Jul 30
இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார். ஜோப்ரா ஆர்ச்சர் நீக்கப்பட்டுள்ளார்.
05:22 PM (IST) Jul 30
சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்கு வர இருப்பதால் பல ராசிகள் பலன்களைப் பெற உள்ளன. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
05:16 PM (IST) Jul 30
மனதில் நிலைக்கும் அளவிற்கு சுவையான டீ தயாரிக்க சரியான முறை எது என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கும் ரகசியம். நாயர் கடை சூப்பர் டேஸ்டான டீயை உங்கள் வீட்டில் தயாரிக்க பால், தண்ணீர் இரண்டில் எதை முதலில் சேர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
05:13 PM (IST) Jul 30
சர்வதேச நட்பு தின வாழ்த்துகள், வரலாறு குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
04:57 PM (IST) Jul 30
தொடர்ந்து லேப்டாப் பயன்படுத்துவதாலும், வாகனம் ஓட்டுவதாலும் அடிக்கடி கழுத்து வலி வருவதுண்டு. இதை கவனிக்காமல் விட்டால் கழுத்தில் இறுக்கம் ஏற்படலாம். இந்த வலியை எளிதாக குணப்படுத்த வீட்டிலேயே சூப்பரான கை வைத்தியம் இருக்கு.இதை செய்து பாருங்க.
04:41 PM (IST) Jul 30
சென்னையில் மாணவர் நிதின்சாய் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக கவுன்சிலரின் பேரன் சந்துரு கைது செய்யப்பட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலினின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து சந்துரு சரணடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
04:41 PM (IST) Jul 30
2026 தேர்தலில் வெற்றி பெறுவோம் என்றும், மக்களுடன் இணைந்து பணியாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
04:34 PM (IST) Jul 30
6-6-6 முறை என்பது பலவிதமான வாக்கிங் முறைகளில் ஒன்றாகும். இதை சமீப காலமாக பலரும் பின்பற்ற துவங்கி உள்ளனர். ஆனால் இந்த நடைபயிற்சி முறையை பின்பற்றி எப்படி உடல் எடையை குறைப்பதுடன், சரியான எடையை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
04:32 PM (IST) Jul 30
Saturn Mars Conjunction in Tamil : செவ்வாய் மற்றும் சனியின் சஞ்சாரம் இந்த 3 முக்கிய ராசிகளுக்கு பண கஷ்டத்தை ஏற்படுத்தும். அந்த ராசிகள் யார் யார் என்று பார்க்கலாம்.
04:18 PM (IST) Jul 30
கீழடி விவகாரத்தில் திமுக அரசுக்கு ஆதரவு கொடுப்போம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழர்களின் பெருமையை உலகுக்கு பறைசாற்றியது அதிமுக தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.
04:11 PM (IST) Jul 30
03:57 PM (IST) Jul 30
தினமும் ஸ்மார்ட்வாட்ச் அணிவதால் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியம் ஆகும். அப்படியில்லையென்றால் அது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
03:50 PM (IST) Jul 30
இசைஞானி இளையராஜா இசையில் உருவான பாடல் ஒன்றிற்கு கவிஞர் வாலி எழுதிய பாடல் வரிகள் கோவில் கல்வெட்டில் இடம்பெற்று இருக்கிறது.
03:45 PM (IST) Jul 30
இஸ்தான்புல்லில் இருந்து அண்டல்யா வந்த துருக்கிய ஏர்லைன்ஸ் போயிங் 777 விமானத்தில் தரையிறங்கும் கருவியில் இருந்து புகை வந்ததால் பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஹைட்ராலிக் பைப் கோளாறு காரணமாக புகை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.