- Home
- Lifestyle
- International Friendship Day 2025 : உன் நட்புக்கு நன்றி! நண்பர்களை 'இப்படி' வாழ்த்துங்க!! அசந்துடுவாங்க!!
International Friendship Day 2025 : உன் நட்புக்கு நன்றி! நண்பர்களை 'இப்படி' வாழ்த்துங்க!! அசந்துடுவாங்க!!
சர்வதேச நட்பு தின வாழ்த்துகள், வரலாறு குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

International Friendship Day 2025
நண்பர்கள் இல்லாத வாழ்க்கை பாலைவனம் போன்றது. அதில் கொண்டாட்டங்களுக்கு பஞ்சம்தான். வாழ்நாளில் ஒரு நண்பரை கூட கொண்டிராதவர்கள் மன அழுத்தத்தை சந்திக்கக் கூடும். வாழ்க்கையில் மகிழ்ச்சியை பகிர மட்டுமின்றி சோகத்தை மேகம் போல கடந்து செல்லவும் நட்பு உதவும். இரத்த சொந்தமாக இல்லாவிட்டாலும் உயிரைக் கொடுக்கும் அளவுக்கு அன்பாக இருப்பவர்கள் நண்பர்கள். அவர்களை கொண்டாடவே நண்பர்கள் இந்த சர்வதே நட்பு தினம்.
ஒவ்வொரு நாடும் வெவ்வேறு தினங்களில் நட்பு தினத்தை கொண்டாடுகின்றன. ஐநா சபை ஜூலை 30ஆம் தேதியை சர்வதேச நட்பு தினமாக அங்கீகரித்துள்ளது. இந்தாண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி இந்தியா நட்பு தினத்தைக் கொண்டாடுகிறது. இதன் வரலாறு என்ன என்பதை இங்கு காணலாம்.
நட்பு தின வரலாறு
பராகுவேவை சேர்ந்த டாக்டர் ஆர்டெமியோ பிராச்சோ என்பவரால் நட்பு தினம் முதல்முதலாக முன்மொழியப்பட்டது. பராகுவே சிவில் அமைப்பு 1958 ஆம் ஆண்டு உலகளாவிய நட்பு தினத்திற்கு பரிந்துரையும் செய்யப்பட்டது. பல தசாப்தங்கள் உருண்டோடிய பின் 2011 ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதியை சர்வதேச நட்பு தினத்தை ஐ.நா. பொதுச் சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அமைதியை பரப்பவும், சமூக உறவை மேம்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
எப்படி கொண்டாடலாம்?
உங்களுடைய கொண்டாட்டங்கள் எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறது என்பது முக்கியமில்லை. உங்கள் நண்பரின் நேரத்தையும் அவர்கள் நட்பையும் மதிக்கும் ஏதேனும் ஒரு செயலை செய்வதை போதுமானது. உதாரணமாக உங்களுடன் அமர்ந்து பேசுவது உங்கள் நண்பருக்கு பிடித்தமான விஷயமாக இருந்தால், ஒரு நல்ல இடத்தில் அவருடன் நேரத்தை செலவு செய்யலாம். வீட்டில் எளிமையாக ஏதேனும் டீ பார்ட்டி ஏற்பாடு செய்து நண்பர்களை அழைத்து கொண்டாடலாம். எளிமையாக வாழ்த்து அட்டை வழங்கலாம்.
சர்வதேச நட்பு வாழ்த்துகள்!
1) வாழ்வில் யார் யாரோ வரலாம்; போகலாம். நீ என் வாழ்வில் வந்த வரம். மனமார்ந்த நட்பு தின வாழ்த்துகள்!
2) நீ எனக்கு ரத்த பந்தமாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் உலகின் தலைசிறந்த உறவு நீ நண்பா! உனக்கு என் நட்பு தின வாழ்த்துகள்!
3) நீ வராவிட்டால் நட்பென்றால் என்னவென தெரியாமலே இருந்திருப்பேன். உன் நட்புக்கு நன்றி!
4) உண்மையான நட்புக்கு அர்த்தமே நீதான். உனக்கு என் நட்பு தின வாழ்த்துகள்.
5) எந்த வார்த்தைக்குள்ளும் அடங்காத உறவிது. நட்பு தின வாழ்த்துகள் நண்பா!