Friendship Day: சர்வதேச ஃப்ரெண்ட்ஷிப் தினம்..நட்பின் உன்னதத்தை போற்றும் வரலாற்று பின்னணி..ஓர் சிறப்பு பார்வை..
Friendship Day 2022: இன்றைய மாறி வரும் கால சூழலில் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கவும், ஒவ்வொருவர் வாழ்விலும் மிகப் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கும் நண்பர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள்.
Friendship Day 2022:
உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் நட்பு என்பது மிகவும், முக்கியமான ஒன்றாகும். நீ தேர்ந்தெடுக்கும் நட்போ உன்னையே காட்டும் என்பார்கள். ஆம், உன்னை யாரென்று தெரிந்து கொள்ள தேவைப்பட்டால், உன் நண்பனை அடையாளம் காட்டு என்பார்கள். அந்தளவு என்பது நட்பு என்பது புனிதமானது, வலிமையானது, ஆத்மார்த்தமானது. நம்முடைய பெற்றோருக்கு பின், உறவுகளுக்கு முன்பு நம்முடைய வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிப்பது நண்பர்கள் மட்டும் தான். அத்தகைய புனிதமான நட்பிற்கு நட்புக்கு எல்லையே கிடையாது.
Friendship Day 2022:
இன்றைய மாறி வரும் நவீன கால சூழலில், மன அழுத்தத்தைக் குறைக்க நம்முடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நோக்கி கடந்து செல்வதற்கு நட்பே உறுதுணையாக இருக்கிறது. இந்த நட்பைக் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30 சர்வதேச நண்பர்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நம் அன்றாட வாழ்வை உற்சாகமானதாக வைத்து கொள்ள நண்பர்கள் அவசியம். எனவே, நீங்கள் இந்த நாளில் பிரிந்து போன நண்பர்களை தேடி, நட்பு கொள்ளுங்கள். புதிய நபர்களைச் சந்தித்து நல்லுறவை பேணுங்கள்.
Friendship Day 2022:
ஜூலை 1958 ஆம் ஆண்டு 30 ஆம் தேதி உலக நட்பு அறப்போர் என்ற சர்வதேச சிவில் அமைப்பினால் இந்த நாள் முதன்முதலில் முன்மொழியப்பட்டது. இதையடுத்து, சர்வதேச நட்பு தினம் 2011 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. ஆனால், 1930ஆம் ஆண்டு அதற்கு முன்பு நண்பர்கள் தினத்தினை உருவாக்கியவர் ஜாய்ஸ் ஹால் என்பவராவார்.
Friendship Day 2022:
அந்த நாட்களில், முதல் உலகப் போர் விளைவுகளின் ஏற்பட்டு மோசமான வெறுப்பு, பகைமை, அழிவுகளை கடக்க நண்பர்கள் தினம் பற்றிய யோசனை உருவானது. இதையடுத்து, ஐக்கிய நாடுகளின் சபை ஜூலை 30ஐ நண்பர்கள் தினம் என்று அறிவித்தது. உலக அளவில் ஒற்றுமை மற்றும் நட்புறவு உறவுகளை வலுப்படுத்துவதற்காக நட்பு தின கொண்டாட்டங்கள் தொடங்கி இன்று வரை கொண்டாடப்பட்டு வருகின்றன.
Friendship Day 2022:
பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடனான உங்கள் உறவு பிறப்பு மற்றும் இரத்தத்தால் இணைக்கப்பட்டுள்ளது, ஆனால் நண்பர்களுடனான உங்கள் உறவு உங்கள் உணர்வுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. எனவே, இந்த நாளில் மக்களிடையே இனம், மொழி, கலாசாரம் வேறுபாடுகளை கடந்து, வாழ்த்து அட்டைகள், அன்பளிப்புகள், இணைய வழி செய்திகள் மற்றும் பூங்கொத்துகள் கொடுத்து கொண்டாடப்படுகிறது.