Friendship Marriage : ஜப்பானில் டிரெண்டாகும் இந்த திருமணத்தில் காதல் காமத்துக்கு மட்டும் 'நோ'.. ஏன் தெரியுமா?

நட்பு திருமணம் என்பது சட்டப்படி, இருவரும் திருமணம் செய்து கொண்டாலும், அவர்களுக்குள் காதல் மற்றும் செக்ஸ் என எதுவும் இல்லாத ஒரு வகையான உறவாகும். 

friendship marriage relationship trending in japan without love and sex among youngsters in tamil mks

நம்முடைய இந்திய நாட்டில் திருமணம் என்பது புனிதமான பந்தமாகக் கருதப்படுகிறது. மேலும், இங்கே இரண்டு பேரும் கலியாணம் கட்டிக்கிட்டு சேர்ந்து வாழ்வதாக சபதம் எடுக்கிறார்கள். ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் திருமணம் குடும்பம் மற்றும் உறவுகளுக்கு இடையில் சிக்கிக் கொள்ள விரும்பாததால், லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்கிறார்கள். 

ஆனால் அதையும் தாண்டி, இருவரும் ஒன்றாக இருக்க ஒரு புதிய வழியை கண்டுபிடித்துள்ளனர். அது வேறேதும் இல்லங்க "நட்பு திருமணம்" தான். இதன் கீழ் அவர்கள் கணவன்-மனைவியாக திருமணம் செய்து கொண்டாலும், ஒருவருக்கொருவர் விலகி தான் இருக்கிறார்கள்.. இந்த நட்பு திருமணம் கொண்டு வந்த நாடு வேறு ஏதும் இல்லைங்க அது 'ஜப்பான்' தான். மேலும், இந்த நாட்டு மக்கள் இந்தப் போக்கினை அதிக ஆர்வத்துடன் வரவேற்கின்றனர்.

திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் காட்டாதவர்கள், சமூகத்திற்கு பயந்து இதுபோன்ற முடிவை எடுப்பவர்கள் தான் நட்பு திருமணத்தை விரும்புகிறார்கள். நட்பு திருமணம் என்றால் என்ன..? அது ஏன் இவ்வளவு  பிரபலமாக உள்ளது என்பதை இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

இதையும் படிங்க:  ஜப்பானில் விநாயகர் கோயில் இருக்கா..? ஆச்சரியமூட்டும் உண்மைகள் இதோ!

நட்பு திருமணம் என்றால் என்ன? 
நட்பு திருமணத்தில், ஆண் பெண் இருவரும் பாரம்பரிய முறையில் திருமணம் செய்துகொண்டு சட்டப்பூர்வ கணவன் மனைவியாக வாழ்கின்றனர். ஆனால் இதில் எந்தவிதமான உறவுக்கும் இடமில்லை. அதாவது, உலக பார்வைக்கு அவர்கள் கணவன் மனைவியாக இருந்தாலும், அவர்களுக்குள் காதல் மற்றும் செக்ஸ் இருப்பதில்லை. அதுமட்டுமின்றி, இந்த திருமணத்தில் இருவரும் சேர்ந்து வாழ்வதா அல்லது பிரிந்து வாழ்வதா என்பது அவரவர் விருப்பமாகும். மேலும், அவர்கள் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள நினைத்தால், அவர்கள் அதை செயற்கையாக பெறலாம். 

அதுமட்டுமல்லாமல், இருவரும் திருமணம் செய்து கொண்டாலும், ஒருவர் அவருக்கு பிடித்த நபருடன்  உறவில் இருக்கலாம். அதை இன்னொருவர் தடுக்க அனுமதி இல்லை அல்லது இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் வேறொருவருடன் உறவில் இருக்கலாம். ஒருவகையில் இந்த நட்பு திருமணம் என்பது அறை தோழர்கள் போன்றதாகும்.

இதையும் படிங்க:   ஜப்பானில் மின்னல் வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்..ஆனால் பயணிகள் பயணிக்க அனுமதி இல்லை..ஏன் தெரியுமா?

தற்போது, இந்தப் போக்கு ஜப்பானில் மிகவும் பிரபலமாகிவிட்டது. அதன் 124 மில்லியன் மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் பேர் இந்த நட்பு திருமணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். மேலும், இதுகுறித்து வெளிவந்த ஒரு அறிக்கையில், ஜப்பானில் மார்ச் 2015 முதல் தற்போது வரை சுமார் 500 பேர் இந்த வகையான திருமணத்தை செய்துகொண்டுள்ளனர். மேலும், அவர்கள் வீடுகளையும் கட்டியுள்ளனர் மற்றும் சிலர் குழந்தைகளை கூட தத்தெடுத்து வளர்க்கின்றனர் என்று தெரிவித்துள்ளது.

யாரெல்லாம் நட்பு திருமணம் செய்கிறார்கள்? 
ஜப்பானில், 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தான் இந்த நட்பு திருமணம் செய்து கொள்கிறார்கள். அதுமட்டுமின்றி பாரம்பரிய திருமண முறையில் இருந்து தப்பிக்க முயற்சிப்பவர்களும், பாலியல் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்கள் மத்தியில் இது மிகவும் பிரபலமானது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios