ஜப்பானில் விநாயகர் கோயில் இருக்கா..? ஆச்சரியமூட்டும் உண்மைகள் இதோ!
ஜப்பானில் விநாயகர் பெருமானுக்கு கோயில் உள்ளது. எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயிலின் தெய்வம் இந்தியாவின் ஒரிசாவில் இருந்து வந்ததாக நம்பப்படுகிறது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த பல புத்த கோவில்கள் உள்ளது. இந்தக் கோயில்களில் ஒன்று இந்துக் கடவுளான விநாயகர் போலவே
சிலையும் வைக்கப்பட்டுள்ளது. 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலின் பெயர் மாட்சுச்சியாமா ஷோடன். இதில் வைக்கப்பட்டுள்ள விநாயகரின் சிலை ஜப்பானிய வடிவமாகும். நம்பிக்கை கொண்ட பௌத்தர்கள் இந்த சிலையை இன்று வரையும் வழிபடுகின்றனர்.
மதம் தொடர்பான தலைப்புகளில் ஆராய்ச்சி செய்யும் மக்கள், எட்டாம் நூற்றாண்டில் முதன்முறையாக ஜப்பானில் விநாயகப் பெருமானை வணங்கத் தொடங்கியதாக நம்பப்படுகிறது. அதுமட்டுமின்றி, புத்த மதத்தில் ஒரு கிளை உள்ளது. அதை பின்பற்றுபவர்கள் பௌத்தத்தை நம்புகிறார்கள் மற்றும் தாந்த்ரீக சக்திகளையும் வணங்குகிறார்கள். புத்த மதத்தின் இந்த கிளையானது இந்தியாவில் ஒரிசா வழியாக சீனாவையும் பின்னர் ஜப்பானையும் அடைந்ததாக சொல்லப்படுகிறது.
ஜப்பானில், விநாயகர் காங்கிடென் என்று அழைக்கப்படுகிறார். மேலும் ஒரு சக்திவாய்ந்த கடவுளாகவும் கருதப்படுகிறார். இங்கு விநாயகர் பல சிறப்பு வழிகளில் வணங்கப்படுகிறார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஜப்பானில் விநாயகப் பெருமானை மேல் நம்பிக்கை வைத்து அவரை வணங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள அதிகரித்துக்கொண்டே சென்றது. இது ஜப்பானிய பாரம்பரிய பொற்காலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது ஜப்பானில் நாட்டில் கிட்டத்தட்ட 250 மேல் விநாயகர் கோயில்கள் உள்ளன. ஆனால், அவை காங்கிடென், கணபாச்சி (கணபதி) மற்றும் பினாயக-டென் (விநாயக்) என வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.இருப்பினும், விநாயகப் பெருமானின் சிலையோ அல்லது படங்களோ கோவில்களில் காண முடியாது. ஆனாக், அவை அலங்கரிக்கப்பட்ட மரப்பெட்டிகளில் வைக்கப்பட்டு, தினமும் வழிபடப்படுகிறது. விசேஷ சமயங்களில் மட்டும் தான் விநாயகர் சிலையை வெளியில் எடுத்து, அனைவர் முன்னிலையிலும் வைத்து வழிபடுவார்கள்.
ஜப்பானில் உள்ள விநாயகப் பெருமானின் மிகப்பெரிய கோவிலுக்கு இகோமா மலையில் உள்ளது. இதற்கு ஹசான்-ஜி என்று பெயர். இந்த கோவிலானது, ஒசாகா நகருக்கு வெளியே தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயிலைப் பற்றி பல கதைகள் உள்ளன. மேலும் இந்த கோயில் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி, இங்கு ஏராளமான அன்னதானங்கள் வழங்கப்படுகின்றது.
இதில் சுவாரசியம் என்னவென்றால் இங்கிருக்கும் விநாயகர் கஷ்டங்களை நீக்கும் கடவுளாக கருதப்படுகிறார். மேலும் தாந்திரீக பௌத்தர்கள் எந்த வேலையையும் தொடங்குவதற்கு முன் அவரை வணங்குகிறார்கள். ஜப்பானியர் தொழிலதிபர்களும் இந்த விநாயகரை அதிகம் வழிபடுகின்றனர்..
ஜப்பானில் பின்பற்றப்படும் மதங்கள்:
ஜப்பான் நாட்டில் சிண்டோ என்னும் மதம்தான் பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப்படுகிறது. அதுபோலவே, புத்த மதமும் பரவிக் காணப்படுகிறது. ஆனால், கிறிஸ்தவ மதம் குறைந்த அளவிலும், இந்து மதம் மிகக் குறைந்த அளவிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.