- Home
- Astrology
- Zodiac Signs: சொந்த ராசியான சிம்மத்துக்கு செல்லும் சூரியன்.! ஆகஸ்ட் மாதம் ஜாக்பாட் அடிக்க உள்ள 5 ராசிகள்.!
Zodiac Signs: சொந்த ராசியான சிம்மத்துக்கு செல்லும் சூரியன்.! ஆகஸ்ட் மாதம் ஜாக்பாட் அடிக்க உள்ள 5 ராசிகள்.!
சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்கு வர இருப்பதால் பல ராசிகள் பலன்களைப் பெற உள்ளன. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சிம்மத்துக்கு செல்லும் சூரியன்
கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசிகளை மாற்றிக் கொள்கின்றன. அவை குறிப்பிட்ட ராசிக்கு வரும் பொழுது சில ராசிக்காரர்கள் நேர்மறையான பலன்களையும், சில ராசிக்காரர்கள் எதிர்மறையான பலன்களையும் பெறுகின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் சுமார் ஆகஸ்ட் 17 அல்லது 18-ஆம் தேதிகளில் சூரியன் சிம்ம ராசிக்குள் நுழைவது வழக்கம். சிம்மம் சூரியனின் ஆட்சி வீடு என்பதால் இந்த சஞ்சாரம் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், பல ராசிகளுக்கு சிறப்பான பலன்களை அள்ளித் தரக்கூடியதாகவும் அமைய உள்ளது. சூரியனின் சஞ்சாரத்தால் பலன் பெற உள்ள ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இது மிகவும் சுபமான நிலையைக் குறிக்கிறது. இதன் காரணமாக இத்தனை நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்து வந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க இருக்கிறது. திருமணம், வேலை, குடும்ப உறவில் சிக்கல் இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரலாம். பூர்வீக சொத்துக்கள் கிடைக்காமல் நிலுவையில் இருந்த வழக்குகள் தீர்ந்து சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு அங்கீகாரமும் புகழும் அதிகரிக்கலாம்.
கடக ராசி
கடக ராசிக்காரர்களுக்கு சூரியனின் இந்த பெயர்சியானது அற்புதமான பலன்களை அளிக்க உள்ளது. நீண்ட காலமாக கிடப்பில் கடந்த பணிகள் முடிவுக்கு வருவதால், மன நிம்மதி கிடைக்கும். நிதிநிலை அதிகரிக்கும். இதனால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்துடன் நேரம் செலவிடுவதால் அவர்களுடனான நெருக்கம் மேலும் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிப்பதால் வெற்றியை நோக்கிய பயணம் விரைவாகும். கடந்த காலத்தில் செய்ய முடியாத சாதனைகளை செய்வதற்கான கதவுகள் திறக்கப்படும். எதிர்பாராத பணவரவால் மகிழ்ச்சி ஏற்படும். இத்தனை நாட்களாக உடல் ஆரோக்கியத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் சரியாகி ஆரோக்கியம் மேம்படும்.
சிம்ம ராசி
சிம்ம ராசியின் அதிபதி சூரியன் என்பதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு இது பொற்காலமாக அமைய உள்ளது. சிம்மராசிக்காரர்களுக்கு வாழ்க்கை மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் அங்கீகாரம், புகழ், மதிப்பு கிடைக்கும். தொழில் செய்து வருபவர்களுக்கு பெரும் முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரித்து, நிதி நிலைமை மேம்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். நல்ல வேலையில் அமரும் காலம் நெருங்கியுள்ளது. திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமண சம்பந்தம் முடியும். கூட்டாக தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடையலாம். உடல் நலனைப் பொறுத்தவரை ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் இதுவரை நிலவி வந்த சிறு சிறு பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.
தனுசு ராசி
தனுசு ராசிக்கு சூரியன் ஒன்பதாவது வீடான பாக்கியஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இது அதிர்ஷ்டம் மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு உகந்த காலமாகும். குடும்பத்தின் உடல் நலனில் அக்கறை கொள்வீர்கள். தந்தையின் உடல்நலம் மேம்படும். தந்தை மூலம் ஆதாயங்கள் கிடைக்கும். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. உயர் கல்வி தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத ஆதாயம் மற்றும் அதிர்ஷ்டம் உண்டாகும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகள் வெற்றிகரமாக நிறைவடையும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலும் சிறப்பான பலன்கள் கிடைக்க உள்ளது.
மிதுன ராசி
மிதுன ராசிக்கு சூரியன் மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இதன் காரணமாக தன்னம்பிக்கை அதிகரிக்கும். தைரியமாக புதிய முயற்சிகளை மேற்கொள்ள தூண்டும். சகோதரர்களுடன் உறவு மேம்படும். அவர்களின் ஆதரவு கிடைக்கும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம். இந்த பயணங்கள் லாபகரமானதாக அமையும். எழுத்து, கலை தகவல் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல காலமாக இருக்கும். சூரியன், சிம்ம ராசிக்கு செல்லும் பொழுது பொதுவாக அனைவருக்குமே தன்னம்பிக்கை, தலைமைத்துவம், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அரசு தொடர்பான காரியங்கள் எளிதில் முடிவடையும். தந்தையுடன் உறவில் மேம்பாடு இருக்கும்.
பொறுமை அவசியம்
சூரியன் பொதுவாக அக்னி கிரகம் என்பதால் சில சமயங்களில் கோபம், அகங்காரம், அதிகாரப் போக்கு ஆகியவை அதிகரிக்கலாம். எனவே பொறுமையுடனும், அமைதியுடனும் செயல்பட வேண்டியது அவசியம். மற்றவர்களுடன் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். மேற்குறிப்பிடப்பட்ட தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் பொதுவான ஜாதகப் பலன்கள் மட்டுமே. ஒவ்வொருவருடைய ஜாதகம், கிரகங்களின் நிலை, தசா புக்தி ஆகியவை வேறுபடும் என்பதால் உங்கள் ராசிக்குரிய சரியான பலன்களை அறிந்து கொள்ள உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தையும், கிரகங்களின் நிலையும் ஒரு அனுபவம் மிக்க ஜோதிடமும் கலந்தாலோசிப்பது நல்லது.