MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • ராகு பகவானின் கோபத்திற்கு ஆளாகும் 5 ராசிகள்.! ராகுவால் ஏற்படும் விபரீதங்கள்.! உங்க ராசி இருக்கா?

ராகு பகவானின் கோபத்திற்கு ஆளாகும் 5 ராசிகள்.! ராகுவால் ஏற்படும் விபரீதங்கள்.! உங்க ராசி இருக்கா?

Rahu Enemy Rashi List : ஜோதிடத்தில் ராகு பகவானுக்கு சில எதிரி ராசிகள் உண்டு. அந்த ராசிகளில் ராகு பகவான் அமரும் பொழுது ஏற்படும் விளைவுகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Mar 05 2026, 04:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
ராகு பகவானின் எதிரி ராசிகள்
Image Credit : Asianet News

ராகு பகவானின் எதிரி ராசிகள்

வேத ஜோதிடத்தில் ராகு பகவான் ஒரு நிழல் கிரகமாக அறியப்படுகிறார். பொதுவாக இவர் ஒருவரது ஜாதகத்தில் எந்த ராசியில் அமர்கிறாரோ அந்த ராசியின் அதிபதியைப் போலவும், அவருடன் சேரும் கிரகத்தை போலவும் செயல்படும் தன்மை உடையவர். இருப்பினும் கிரகங்களுக்கு இடையிலான நட்பு மற்றும் பகை அடிப்படையில் ராகுவுக்கு சில எதிரி ராசிகள் உள்ளன. அந்த ராசிகள் எவை என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
ராகுவின் பகை கிரகங்கள்
Image Credit : Asianet News

ராகுவின் பகை கிரகங்கள்

ராகு பகவானுக்கு மிக முக்கிய எதிரிகள் சூரியன் மற்றும் சந்திரன் ஆவார்கள். இதன் காரணமாகவே சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் ஏற்படுகிறது. செவ்வாய் கிரகணத்துடனும் ராகுவுக்கு பகை உண்டு. இந்த கிரகங்களின் ஆதிக்கத்தில் உள்ள ராசிகளே ராகுவுக்கு எதிரி ராசிகள் அல்லது பகை ராசிகள் என்று கருதப்படுகின்றன. அந்த வகையில் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு ஆகியவை ராகுவின் எதிரி ராசிகளாக கருதப்படுகின்றன.

37
மேஷம்
Image Credit : Pinterest

மேஷம்

மேஷ ராசியை செவ்வாய் பகவான் ஆட்சி செய்கிறார். இவருக்கும் ராகுவுக்கும் இயல்பிலேயே பகை உண்டு. ராகு மற்றும் செவ்வாய் இணைவது அங்காரக யோகம் போன்ற அசுப யோகங்களை உருவாக்குகிறது. மேஷ ராசியில் ராகு இருப்பது மிகுந்த கோபத்தையும், அவசரத்தையும் ஏற்படுத்தும். யோசிக்காமல் அவசர முடிவுகளை எடுப்பதால் தவறான பாதைக்கு வழிவகுக்கும். வாகனம் ஓட்டும் பொழுது விபத்துக்கள் அல்லது காயங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

47
கடகம்
Image Credit : stockPhoto

கடகம்

சந்திரன், ராகுவின் பரம எதிரியாக கருதப்படுகிறார். கடக ராசியில் ராகு அமரும் பொழுது அந்த ராசிக்காரருக்கு மனரீதியான குழப்பங்கள், தேவையற்ற பயம் போன்றவை ஏற்படலாம். முடிவெடுப்பதில் குழப்பம் அல்லது தாமதங்கள் ஏற்படும். தாயின் உடல் நலத்திலும் பாதிப்பு ஏற்படும். சந்திரன் மனதிற்கு காரகன் என்பதால் ராகு அங்கு அமரும்பொழுது மன அமைதி குறைவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

57
சிம்மம்
Image Credit : Pinterest

சிம்மம்

சூரியன் ஆத்ம காரகன் மற்றும் அதிகாரத்திற்கு உரியவர். அவர் ஆட்சி செய்யும் சிம்ம ராசியில் ராகு அமரும்போது பிதுர் தோஷம் போன்ற அமைப்புகளை ஏற்படுத்தலாம். தந்தை மகன் உறவில் விரிசல், அரசு வழியில் தடைகள், கௌரவ குறைச்சல், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுதல் போன்றவை ஏற்படக்கூடும். ராகு சூரியனின் ஒளியை மறைக்க முயல்வதால் சிம்ம ராசியானது பகை வீடாக கருதப்படுகிறது.

67
விருச்சிகம்
Image Credit : stockPhoto

விருச்சிகம்

ராகு பகவான் விருச்சிக ராசியில் நீச்சம் அடைகிறார். அதாவது இங்கு அவரது வலிமை பெரும்பாலும் குறைவாக இருக்கும். மேலும் விருச்சிகம் செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட வீடாகும். இந்த ராகு அமரும் பொழுது ஜாதகருக்கு தேவையற்ற கோபம், பகைகள் அல்லது விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ராகுவின் தந்திரமும், செவ்வாயின் வேகமும் இணைவது பல நேரங்களில் எதிர்மறையான விளைவுகளைத் தரக்கூடும்.

77
தனுசு
Image Credit : stockPhoto

தனுசு

தனுசு ராசியை குரு பகவான் ஆட்சி செய்கிறார். ராகு மற்றும் குருவின் சேர்க்கை சண்டாள யோகத்தை உருவாக்குகிறது. தனுசு ராசிக்காரர்களுக்கு ராகுவின் வருகை என்பது அறிவு ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிர்ஷ்டம் மற்றும் குடும்ப ஆதரவை இழக்க நேரிடலாம். கடின உழைப்புக்கான பலன்கள் தாமதமாகவே கிடைக்கலாம். சமூகத்தில் அவமரியாதை நிகழ்வுகள் நடக்கக்கூடும். இது வாழ்க்கையில் பெரும் அவமானங்களை சந்திப்பதற்கு வழிவகுக்கும்.

கவனிக்க வேண்டியவை

ராகு பகவான் ஜாதகத்தில் 3, 6, 11 ஆகிய இடங்களில் அமரும்பொழுது மிகப்பெரிய யோகங்களையும், எதிர்பாராத பண வரவையும் தரக்கூடியவர். ஒருவரது லக்னத்திற்கு ராகு சுபராக இருந்தால் அவை பகை வீட்டில் இருந்தாலும் பெரிய பாதிப்புகளை தருவதில்லை. ராகுவுக்கு சனி மற்றும் சுக்கிரன் நண்பர்களாக இருப்பதால் அவர்களின் வீடுகளான ரிஷபம், துலாம், மகரம் கும்பத்தில் ராகு சிறப்பான பலன்களைத் தருவார். ராகு தான் இருக்கும் வீட்டின் அதிபதி பலமாக இருந்தால் அந்த கிரகத்தின் நற்பலன்களையும் சேர்த்து வழங்குவார்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Trigrahi Yoga: நவராத்திரியில் உருவாகும் திரிகிரகி யோகம்.. இந்த ராசிகளுக்கு பணம், தொழிலில் நல்ல மாற்றம்!
Recommended image2
Lakshmi Yoga: ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருந்தால் என்ன நடக்கும்? யாருக்கெல்லாம் இந்த யோகம் அமையும்?
Recommended image3
Astrology: கடகத்தில் சங்கமிக்கும் குரு - செவ்வாய்.! எந்தெந்த நட்சத்திரங்களுக்கு ராஜ யோகம்?
Related Stories
Recommended image1
திருநள்ளாறு சனிப் பெயர்ச்சி 2026 பலன்கள்.! 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப்போகிறது? ஏற்றமும், ராஜயோகமும் பெறப்போகும் ராசிகள் யார்?
Recommended image2
Sani Peyarchi 2026: மார்ச் 6 முதல் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் சனி பகவான்.! 6 ராசிகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கப் போறாராம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved