- Home
- Astrology
- கன்னி ராசியில் சுக்கிரன்.. சொந்த வீடு, புது வாகனம் வாங்கப்போகும் 5 ராசிகள்.. அதிர்ஷ்ட மழை!
கன்னி ராசியில் சுக்கிரன்.. சொந்த வீடு, புது வாகனம் வாங்கப்போகும் 5 ராசிகள்.. அதிர்ஷ்ட மழை!
Venus Transit: சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம் மற்றும் தனுசு ஆகிய 5 ராசிகளுக்கு யோக காலமும், தொழில், நிதி நிலையில் நேர்மறையான மாற்றங்களும் உருவாகவுள்ளன.

சுக்கிர பெயர்ச்சி 2026
ஜோதிட சாஸ்திரத்தில் அசுரர்களின் குருவாகவும், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் மற்றும் செழிப்பின் காரகராகவும் திகழ்பவர் சுக்கிர பகவான். ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன், தற்போது தனது சொந்த வீடான துலாம் ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில், வரும் நவம்பர் 6-ஆம் தேதி சுக்கிரன் வக்ர நிலையிலேயே புதனின் சொந்த வீடான கன்னி ராசிக்குள் நுழைகிறார். அங்கு சுமார் 17 நாட்கள் வரை தங்கியிருக்கப் போகிறார். சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் 12 ராசிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களுக்கு யோக காலமாகவும், வாழ்க்கையில் நேர்மறையான திருப்பங்களை தருவதாகவும் அமையவுள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து கீழே காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்கு 4-ஆம் வீடான சுக ஸ்தானத்திற்கு சுக்கிரன் பெயர்ச்சியாகிறார். இதன் காரணமாக, உங்கள் வாழ்க்கையில் வசதி வாய்ப்புகளும் மகிழ்ச்சியும் பெருகும். நிலம், வீடு அல்லது புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தாயாரின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை தரும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு 2-ஆம் வீடான தன ஸ்தானத்திற்கு சுக்கிரன் செல்வதால், பொருளாதார ரீதியாக மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக உங்களை அலைக்கழித்த பணப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத தனவரவு உண்டாகி, சேமிப்பை உயர்த்த முடியும். வீண் செலவுகள் குறையும். குடும்பத்தினருடன் சுமுகமான உறவு நீடிக்கும். நிலுவையில் இருந்த பேச்சுவார்த்தைகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.
கன்னி
கன்னி ராசியின் லக்னமான 1-ஆம் வீட்டிற்கே சுக்கிரன் வருவதால், உங்கள் ஆளுமைத் திறனும் சுப பலன்களும் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்கள் வேலைக்கு உரிய அங்கீகாரமும், திறமையை நிரூபிக்க புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். பேச்சுத்திறமையால் காரியங்களைச் சாதகமாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய நண்பர்கள் மூலம் புதிய ஒப்பந்தங்களும் நல்ல லாபமும் கிடைக்கும். நிதி நிலைமை படிப்படியாக உயர்ந்து வலுப்பெறும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு 11-ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கவுள்ளார். இதனால் நீங்கள் ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும். தடையாகி நின்ற காரியங்கள் அனைத்தும் தடாலடியாக முடிவடையும். வருமானத்திற்கும் செலவிற்கும் இடையே சரியான சமநிலையைப் பராமரிப்பீர்கள். புதிய வருமான வழிகள் திறக்கும். மன உளைச்சல்கள் நீங்கி நிம்மதியும் தெளிவும் பிறக்கும்
தனுசு
தனுசு ராசிக்கு 10-ஆம் வீடான கர்ம ஸ்தானத்திற்கு சுக்கிரன் பெயர்ச்சியாவதால், தொழில் மற்றும் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய நட்பு வட்டாரம் உருவாகி, அதன் மூலம் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை குறைந்து நிம்மதி கூடும். தேவையில்லாத விரயச் செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிக்கத் தொடங்குவீர்கள். நிலுவையில் உள்ள முக்கியமான வேலைகள் சுலபமாக முடியும்.
பொறுப்பு துறப்பு
இங்கே வழங்கப்பட்டுள்ள ஜோதிடத் தகவல்கள், பலன்கள் மற்றும் கணிப்புகள் அனைத்தும் பொதுவான கணிப்புகளின் அடிப்படையில் மட்டுமே எழுதப்பட்டவை. இது முழுமையான அல்லது துல்லியமான தனிப்பட்ட கணிப்பு அல்ல. வாசகர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரிலும், சுய முடிவின் அடிப்படையிலும் மட்டுமே இத்தகவல்களைப் பின்பற்ற வேண்டும்.





