- Home
- Astrology
- Zodiac Signs: முடிவுக்கு வந்த செவ்வாய் கேது சேர்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் தான்.!
Zodiac Signs: முடிவுக்கு வந்த செவ்வாய் கேது சேர்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் தான்.!
ஜோதிடத்தின்படி செவ்வாய் மற்றும் கேது கிரகங்களின் சேர்க்கை பொதுவாக அசுபமானதாக கருதப்படுகிறது. இந்த சேர்க்கை முடிவுக்கு வருவது சில ராசிகளுக்கு நல்ல மாற்றங்களை கொண்டு வரும் எனக் கூறப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

முடிவுக்கு வரும் செவ்வாய்-கேது சேர்க்கை
ஜோதிட சாஸ்திரங்களின்படி கிரகங்களின் சேர்க்கை ஒருவரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இரண்டு கிரகங்கள் சேரும் பொழுது அல்லது பிரியும் பொழுது சில ராசிகளுக்கு யோகத்தையும், சில ராசிகளுக்கு மோசமான பலன்களையும் தரக்கூடும். அந்த வகையில் செவ்வாய் மற்றும் கேது கிரகங்களின் சேர்க்கை ஜூலை 29, 2025 முதல் முடிவுக்கு வருகிறது. செவ்வாய் தைரியம், ஆற்றல், கோபம், நிலம், சகோதர உறவுகள், விபத்துக்கள் ஆகியவற்றை குறிக்கும் கிரகமாகும். கேது ஞானம், ஆன்மீகம், மோட்சம், பிரிவினைகள், தடைகள், குழப்பம், விபத்துக்கள் ஆகியவற்றை குறிக்கும் கிரகமாகும். இந்த இரண்டு கிரகங்களும் சேரும்பொழுது சில நேர்மறை பலன்களையும், சில எதிர்மறை பலன்களையும் தரக்கூடும். இந்த சேர்க்கை முடிவுக்கு வரும் பொழுது அதன் எதிர்மறை விளைவுகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1.சிம்ம ராசி
செவ்வாய்-கேது சேர்க்கை முடிவுக்கு வருவதால் நன்மை பெறப்போகும் ராசிகளில் சிம்ம ராசி முதலிடம் பிடிக்கிறது. இந்த சேர்க்கை காரணமாக சிம்ம ராசிக்காரர்களுக்கு இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரவுள்ளது. வாழ்க்கை துணையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், பிரச்சனைகள் நீங்கி உறவு வலுப்பெறும். குடும்பத்தில் நல்லிணக்கம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தொழிலில் இதுவரை சந்தித்து வந்த தடைகள் விலகி, புதிய வாய்ப்புகள் உருவாகும். பணியிடத்தில் முன்னேற்றம் நடக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற நல்ல செய்திகள் தேடி வரும். உடல் நலத்தைப் பொறுத்தவரை ஆரோக்கியம் மேம்படும். மனரீதியான போராட்டங்கள் குறைந்து, அமைதியும் தெளிவும், பிறக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
2.துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய்-கேது சேர்க்கை முடிவுக்கு வருவது தனிப்பட்ட வாழ்க்கையிலும், நிதி ரீதியாகவும் சாதகமான மாற்றங்களை கொண்டு வரவுள்ளது. தொழிலில் ஏற்பட்ட நஷ்டங்கள் சரிசெய்யப்பட்டு வருமானம் இரட்டிப்பாக பெருகும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். நிதிநிலைமை சீராகும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். குழந்தைகளால் நல்ல செய்திகள் வந்து சேரும். குழந்தைகளின் கல்வி மற்றும் வளர்ச்சியில் முன்னேற்றத்தை காணலாம். நண்பர்கள் மற்றும் சமூக வட்டாரத்தில் நல்லுறவு ஏற்படும். சமூகத்தில் மரியாதை மேம்படும். புதிய தொடர்புகள் மூலம் வாழ்க்கையில் நன்மைகள் உண்டாகும்.
3. விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கேது சேர்க்கை முடிவுக்கு வருவது குஜ் யோகத்தை உருவாக்கி சிறப்பான பலன்களை தரவுள்ளது. விருச்சிக ராசிக்காரர்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் இனிதே முடியும். பயணங்கள் மூலம் நல்ல பலன்களையும், நிதி ஆதாயங்களையும் பெற வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி முன்னேற முடியும். திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பானதாக அமையும்.
4. கடக ராசி
கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் மற்றும் கேதுவின் சேர்க்கை முடிவுக்கு வருவதால் எதிர்பாராத நிதி நன்மைகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, வருமானம் பெருகும் வாய்ப்பு உள்ளது. நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். இந்த பயணங்களின் மூலம் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட வந்தவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் நீங்கி சுமூகமான சூழல் ஏற்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வாய்ப்பு உள்ளது.
(பொறுப்பு துறப்பு: மேற்குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் ஜோதிடர்களின் கருத்துக்களின் அடிப்படையிலானவை மட்டுமே. இந்த கணிப்புகள் பொதுவானவை. ஒருவரின் தனிப்பட்ட ஜாதக அமைப்பை பொறுத்து பலன்களில் மாற்றம் இருக்கலாம். எனவே உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால் அனுபவமிக்க ஜோதிடரை அணுகி ஆலோசனை மேற்கொள்வது நல்லது)