- Home
- Astrology
- Zodiac Signs: 18 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் தரித்திர யோகம்.. இந்த 5 ராசிகளை தரித்திரம் பிடிக்க போகுது.!
Zodiac Signs: 18 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் தரித்திர யோகம்.. இந்த 5 ராசிகளை தரித்திரம் பிடிக்க போகுது.!
ஜோதிட சாஸ்திரங்களின்படி தரித்திர யோகம் என்பது ஒரு அசுப (தீய) யோகமாக கருதப்படுகிறது. சிம்ம ராசியில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த யோகம் உருவாக உள்ளது. அதன் விளைவுகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

18 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்ம ராசியில் தரித்திர யோகம்
ஜோதிடத்தில் கிரகங்களின் சேர்க்கை என்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த கிரகங்கள் ஒன்றோடு ஒன்று சேரும் பொழுது சில யோகங்கள் உருவாகின்றன. இந்த யோகங்கள் தற்காலிகமானது தான் என்றாலும், அவை சில ராசிகளுக்கு நன்மையையும், சில ராசிகளுக்கு மோசமான பலன்களையும் தருகின்றன. அந்த வகையில் சூரியன் ஆகஸ்ட் மாதம் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்கு சஞ்சரிக்க உள்ளார். ஆனால் சிம்ம ராசியில் ஏற்கனவே கேது சஞ்சாரம் செய்து வருகிறார். சூரியன்-கேது ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் 18 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்ம ராசியில் தரித்திர யோகம் உருவாக உள்ளது. இந்த யோகம் குறித்தும், அதனால் 5 ராசிகளுக்கு ஏற்பட உள்ள விளைவுகள் குறித்தும் பார்க்கலாம்.
தரித்திர யோகம் என்றால் என்ன?
சூரிய கிரகமானது தந்தை, அதிகாரம், புகழ், கௌரவம், தலைமைத்துவம், ஆன்மா ஆகியவற்றை குறிக்கும் ஒரு கிரகமாகும். இது ஒருவரின் சுயமரியாதை மற்றும் ஆற்றலின் காரணியாகும். கேது ஒரு மாயையான கிரகம். இது நிழல் கிரகம் என்று அறியப்படுகிறது. இது ஆன்மீகம், மோட்சம், தனிமை, தடங்கல்கள், விபத்துகள், கடந்த கால கர்ம வினைகள், எதிர்பாராத நிகழ்வுகளை குறிக்கும். சிம்ம ராசி சூரியனின் சொந்த வீடாகும். இந்த வீட்டில் சூரியன் வலிமையாக இருப்பார். ஆனால் கேதுடன் சூரியன் இணையும் பொழுது சில எதிர்மறை விளைவுகளைத் தரலாம். சூரியன் கேதுவின் இணைவால் உருவாகும் ‘தரித்திர யோகம்’ ஒருவரின் வாழ்க்கையில் எதிர்பாராத தடங்கல்கள், நிதி இழப்புகள், உடல் நலக் கோளாறுகள் ஆகியவற்றை ஏற்படுத்தலாம். ஒரு வகையில் பித்ரு தோஷம் அல்லது சாபங்கள் சார்ந்த தாக்கங்களையும் குறிக்கலாம். எனவே ஐந்து ராசி காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
மேஷம்
மேஷ ராசியின் 5-வது வீட்டில் சூரியன் கேது சேர்க்கை நிகழ உள்ளது. எனவே இந்த ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் ஏற்படலாம். இதயம் தொடர்பான பிரச்சனைகளை கொண்டவர்கள் வழக்கத்தை விட கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பிணிகளும் இந்த சமயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இதே காலத்தில் மிதுன ராசியில் குரு மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாக்கியிருப்பதால் சில நன்மைகளையும் மேஷ ராசியினர் பெற இருக்கின்றனர். எனவே இது குறித்த அதிக அச்சம் தேவையில்லை. தரித்திர யோகத்தின் விளைவுகளை தவிர்க்க கேதுவின் மந்திரங்களை உச்சரிக்க ஜோதிடர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 4-வது வீட்டில் சூரியன் கேது சேர்க்கையால் தரித்திர யோகம் உருவாக இருக்கிறது. இதன் காரணமாக இந்த ராசியினர் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். குறிப்பாக இவர்களின் தாயாரின் உடல் நிலையில் கவனம் கொள்ள வேண்டும். பணிபுரியும் இடத்தில் மன அழுத்தம் அதிகரிக்கலாம். குடும்பத்தினர் உடல் நிலை குறித்த கவலைகள் அதிகரிக்கலாம். வேலை செய்யும் இடத்தில் சில பிரச்சனைகள், தடங்கல்களை சந்திக்கலாம். எனவே ஒவ்வொரு விஷயத்திலும் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சிலருக்கு நிதிநிலை பிரச்சனைகளும் ஏற்படலாம். இருப்பினும் கவனத்துடன் செயல்பட்டால் நிதிநிலை மேம்படும்.
கடகம்
கடக ராசியின் இரண்டாவது வீட்டில் கேது சூரிய சேர்க்கையால் தரித்திர யோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் கடக ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். குறிப்பாக இதயம், கண் சார்ந்த பிரச்சினை இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். வெளியூர் பயணங்கள் செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மேலும் கடக ராசி காரர்களுக்கு லக்ன வீட்டில் புதன் சுக்கிரன் இணைவதால் லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இதன் காரணமாக தரித்திர யோகத்தின் விளைவுகள் சற்று குறைக்கப்பட்டு, சில நன்மைகளும் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் கேது மற்றும் சூரியன் இணைவதால் தரித்திர யோகம் உருவாகிறது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்ம ராசியில் இந்த யோகம் உருவாகிறது. இதன் காரணமாக சிம்ம ராசிக்காரர்களுக்கு சில ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். எந்த வேலையைத் தொடங்கினாலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். தரித்திரத்தின் யோகம் சிம்ம ராசிக்கு மோசமான பின் விளைவுகளைத் தரலாம். இதை தவிர்ப்பதற்கு பௌர்ணமி அல்லது வெள்ளிக்கிழமைகளில் குலதெய்வ வழிபாடு நடத்துவது, பைரவர் வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானை வணங்குதல், காயத்ரி மந்திரத்தை ஜெபித்தல், விநாயகர் வழிபாடு இந்த விளைவுகளில் இருந்து தப்பிக்க உதவும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு ஒன்பதாவது வீட்டில் தரித்திர யோகம் உருவாகிறது. இதன் காரணமாக இவர்கள் வாழ்க்கையில் சில மோசமான விளைவுகளை சந்திக்கலாம். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இதயம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கலாம். சமூகத்திலும் சில மதிப்பு, மரியாதை சற்று குறையலாம். எனவே இந்த காலத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும் அம்மன் வழிபாடு, பைரவர் வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். நவக்கிரகங்களுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வரலாம். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி கனகதாரா ஸ்தோத்திரம் ஜெபிப்பது இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட வழிவகுக்கும்.
(மேற்கூறப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் மற்றும் ஜோதிடர்களின் கருத்துக்கள் அடிப்படையிலானவை மட்டுமே. இதன் நம்பகத் தன்மைக்கு உத்திரவாதம் கிடையாது. இதற்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. இந்த தகவல்களை வெறும் தகவல்களாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஜோதிடப் பலகன்கள் என்பது பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகம், தசா புத்தி, கிரக நிலைகள் ஆகியவற்றைப் பொறுத்து பலன்கள் மாறுபடலாம். எனவே ஒரு நல்ல அனுபவமிக்க ஜோதிடரை அணுகி உங்கள் ஜாதகத்தை பரிசோதிப்பது, சரியான பரிகாரங்களை அறிந்து கொள்வது ஆகியவை சிறந்த வழிகளாகும்)