- Home
- Astrology
- Zodiac Signs : சந்திரன் உருவாக்கும் கௌரி யோகம்.! இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை தான்.!
Zodiac Signs : சந்திரன் உருவாக்கும் கௌரி யோகம்.! இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை தான்.!
ரிஷப ராசியில் சஞ்சாரம் செய்து வரும் சந்திரன் இன்று (ஜூலை 21) மங்களகரமான கௌரியோகத்தை உருவாக்குகிறார். இதன் காரணமாக ஐந்து ராசிகினருக்கு மகத்தான பலன்கள் கிடைக்க இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

கௌரி யோகத்தால் பலன் பெறும் ராசிகள்
மாதங்களில் ஆடி மாதம் சிறந்த மாதமாக கருதப்படுகிறது. இன்று விஷ்ணுவுக்கு உகந்த சர்வ ஏகாதசி நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் சந்திரனின் நகர்வானது மங்களத்தை உண்டாக்கும் கௌரியோகத்தை உருவாக்குகிறது. இதனுடன் சர்வாத்த சித்தயோகமும் இணைந்து இருக்கிறது. கௌரியோகம் என்பது ஒரு ஜாதகத்தில் சந்திரன் வலிமையுடன் இருக்கும் போது உருவாகும் சிறப்பு நிலையாகும். சந்திரன் தன் உச்ச ராசியான ரிஷபத்தில் இருக்கும்போது அல்லது ஆட்சி ராசியான கடகத்தில் வலிமையுடன் இருக்கும் பொழுது, சுப கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை நடக்கும் பொழுது இந்த யோகம் பலப்படும். இந்த யோகத்தால் ஐந்து ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம், மன தைரியம் ஆகியவை கிடைக்கப் பெற உள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ரிஷப ராசி
சந்திரன் தனது உச்ச ராசியான ரிஷப ராசியில் இருக்கும் பொழுது கௌரியோகத்தை உருவாக்குகிறார். இதனால் ரிஷப ராசியினர் அதிக பலனடைய உள்ளனர். இவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். பணியிடத்தில் நல்ல சூழல் ஏற்படும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். இவர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் ஏற்பட்ட தடைகளை கடந்து சாதிக்க இருக்கின்றனர். முன்பு செய்த முதலீடுகள் வழியாக எதிர்பாராத லாபம் கிடைக்க உள்ளது. இதன் காரணமாக வங்கியின் சேமிப்பு அதிகரிப்பதோடு, கடன் பிரச்சினைகளும் முடிவுக்கு வரவுள்ளது. தொழில் வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட உள்ளது. குடும்ப வாழ்க்கை மற்றும் காதல் வாழ்க்கையிலும் சிலருக்கு அனுகூலம் ஏற்படலாம். இந்த கௌரி யோகத்தால் சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகளும், வேலையில் பதவி உயர்வு, இன்னும் கூடுதல் சம்பளத்திற்கு புதிய வேலை என பல நன்மைகளை ரிஷப ராசியினர் அனுபவிக்க உள்ளனர்.
மிதுன ராசி
ரிஷப ராசியில் உண்டாகும் கௌரி யோகம் மிதுன ராசியினருக்கும் பலன்களை வழங்க உள்ளது. மிதுன ராசியினருக்கு நிதி மற்றும் பொருளாதார ரீதியாக பல பலன்கள் கிடைக்க உள்ளது. தொழிலில் செய்த முதலீடுகள் வருமானத்தை பன் மடங்காக பெருக உள்ளது. உள்ளூரில் செய்து வரும் தொழிலை வெளிநாட்டிற்கும் விரிவுபடுத்தும் வாய்ப்புகளும் கிடைக்கும். இதன் காரணமாக தொழில் வருமானம் பல மடங்குகளாக பெருகும். வேலைக்காக வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் அல்லது வெளிநாடு செல்ல நினைப்பவர்கள் அதன் பணிகளை இந்த தினத்தில் தொடங்கலாம். அலுவலகத்தில் வேலை பார்த்து வருபவர்களுக்கு நற்பெயர் மற்றும் புகழ் கிடைக்கும். மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு இந்த தினம் சிறந்த அனுபவங்களை கொண்டு வரும். அரசு பணிக்காக காத்திருப்பவர்களுக்கு கௌரி யோகம் நல்ல செய்தியை விரைவில் கொண்டு வந்து சேர்க்கும்.
சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்கள் பொதுவாகவே ஆளுமை மிக்கவர்களாக கருதப்படுகின்றனர். இவர்களுக்கு கௌரி யோகம் மேலும் பல சிறப்புகளை தரவுள்ளது. சிம்ம ராசியினரின் சிந்தனைகள், செயல்திட்டங்கள் பிறரால் மதித்து போற்றப்படும். குறிப்பாக அவர்கள் வேலை செய்யும் இடங்களில் அவர்களுக்கு எதிர்பாராத மாற்றங்கள் கிடைக்கும். அவர்களின் தனித்திறமைகள் பாராட்டப்படுவதோடு வெகுமதியும் கிடைக்கும். ஊக்கத்தொகை, உயர் பதவி மற்றும் பிற பலன்களை அவர்கள் பெற உள்ளனர். அரசியல் செல்வாக்கு உள்ள மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். சில புதியவர்களின் வரவால் உங்கள் தொழில் விரிவாக்கமும் நடைபெறும். அரசு ஒப்பந்தங்கள், டெண்டர்களுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். சமூக சேவை, பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வேலையில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். கடின உழைப்பிற்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
துலாம் ராசி
கௌரி யோகத்தால் வாழ்க்கையில் மாற்றங்களை சந்திக்க இருக்கும் மற்றொரு ராசியினர் துலாம் ராசியினர். இவர்கள் கௌரி யோகத்தின் பலனால் பல நாட்களாக காத்திருந்த செயல்கள் அனைத்தும் நிறைவேறும். வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். காதல் வாழ்க்கையில் வெற்றி உண்டாகும். புதிய தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு அதற்கு சாதகமான அறிகுறிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு சுப செய்திகள் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு உறவில் இணக்கமும், புரிதலும் அதிகரிக்கும். உங்கள் லட்சியத்திற்கு குடும்பத்தினர் ஒத்துழைப்பும் கிடைக்கும். எந்த ஒரு காரியத்திலும் நேர்மையுடனும் பொறுமையுடனும் அதன் சாதக பலன்களை அறிந்து எச்சரிக்கையுடன் செயல்பட்டால் செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
கும்ப ராசி
கும்ப ராசியினருக்கும் கௌரி யோகம் பல மகிழ்ச்சியை கொண்டு வரவுள்ளது கணவன் மனைவிக்கு இடையே நீண்ட நாட்களாக நீடித்து வரும் சண்டை குழப்பங்கள் முடிவுக்கு வரும். மனைவி, குடும்பம், குழந்தைகள் என அனைவர் வாழ்க்கையில் மகிழ்ச்சியில் பொங்கும். தொழில் வாழ்க்கையில் எதிர்பாராத பண வரவு காணப்படும். பொருளாதார நிலை உயரும். குடும்ப உறவுகள் மற்றும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முயற்சி செய்வீர்கள். ஜோதிடர்களின் கருத்துப்படி இந்த தினத்தில் தேவையற்ற செலவுகளை செய்தல் கூடாது. செலவை கட்டுப்பாட்டில் வைத்து, சிக்கனமாக செலவு செய்வது நல்லது. ஆரோக்கியம் அவ்வப்போது தடைபட்டாலும் கௌரி யோகத்தால் பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படாது. நிதிநிலைமை மேம்படும். பல வழிகளில் ஆதாயங்கள் கிடைக்கும் சமூகத்தில் செல்வாக்கு உயரும்.
(குறிப்பு: இந்த பலன்கள் பொதுவானவை. ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதக அமைப்புகள், திசா புத்தி மற்றும் கோட்சார கிரக நிலைகளைப் பொறுத்து பலன்களில் வேறுபாடுகள் இருக்கலாம். மேலும் துல்லியமான பலன்களுக்கு ஒரு அனுபவம் வாய்ந்த ஜோதிடரை அணுகுவது நல்லது.)