- Home
- Astrology
- மார்ச் 6 பாலசந்திர சங்கடஹர சதுர்த்தியுடன் கஜகேசரி யோகம்.! இந்த 6 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்.! பொற்காலம் ஆரம்பம்.!
மார்ச் 6 பாலசந்திர சங்கடஹர சதுர்த்தியுடன் கஜகேசரி யோகம்.! இந்த 6 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட்.! பொற்காலம் ஆரம்பம்.!
மார்ச் 6, 2026 வெள்ளிக்கிழமை அன்று சங்கடஹர சதுர்த்தியுடன் சந்திரன் மற்றும் குரு இணைவதால் கஜகேசரி யோகம் உருவாகிறது. இந்த நாள் 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும்.

மேஷம்
ஜோதிடப்படி, மேஷ ராசிக்காரர்களுக்கு மார்ச் 6 ஆம் தேதி உற்சாகமும், ஆற்றலும் நிறைந்த நாளாக இருக்கும். சங்கடஹர சதுர்த்தியுடன் கஜகேசரி யோகமும் இணைவதால் சுப பலன்கள் கிடைக்கும். வேலையில் உங்கள் கடின உழைப்பும் தலைமைப் பண்புகளும் பாராட்டப்படும். நிதி விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம்
மார்ச் 6 அன்று கஜகேசரி யோகத்தால் ரிஷப ராசியினரின் தன்னம்பிக்கை வலுவாக இருக்கும். முடிவுகளில் உறுதியாக இருப்பீர்கள். தொழில்முனைவோர் லாபம் ஈட்டுவார்கள். பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உடல்நலனில் சிறிது அக்கறை செலுத்துவது நல்லது.
மிதுனம்
ஜோதிடத்தின்படி, மார்ச் 6 அன்று மிதுன ராசியினரின் பேச்சு மற்றும் தகவல் தொடர்புத் திறன் மேம்படும். புத்திசாலித்தனமான முடிவுகளை எடுத்து வெற்றிகளைப் பெறுவீர்கள். வேலையில் புதிய வாய்ப்புகள் வரலாம். நிதி விஷயங்களில் சாதுர்யதான முதலீடுகளை செய்வீர்கள்.
கடகம்
மார்ச் 6 கடக ராசியினரின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். பழைய சர்ச்சைகள் மற்றும் தகராறுகள் முடிவுக்கு வரலாம். உங்கள் வேலையில் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் காணப்படும். நிதி நிலை மேம்படும். தேவையற்ற செலவுகள் ஏற்படும் என்பதால் பண விஷயங்களில் அதிக கவனத்துடன் இருக்கவும்.
சிம்மம்
மார்ச் 6 அன்று சிம்ம ராசியின் ஆளுமை திறன் உயர்வாகவும், செல்வாக்கு மிக்கதாகவும் இருக்கும். கஜகேசரி யோகத்தின் தாக்கத்தால் உங்கள் சமூக அந்தஸ்து உயரக்கூடும். யானை போன்ற பலமும், சிங்கம் போன்ற தைரியமும் கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகலாம். காதல் உறவுகள் திருமணத்தில் முடியும்.
துலாம்
ஜோதிடத்தின்படி, மார்ச் 6 ஆம் தேதி துலாம் ராசியினரின் காதல் மற்றும் திருமண உறவுகளுக்கு ஒரு நல்ல நாளாக இருக்கும். படைப்பாற்றல் மிக்க பணிகளில் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில், எதிர்காலத்தில் பலனளிக்கும் புதிய தொடர்புகளை ஏற்படுத்தலாம். குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

