குஷ்பூவுக்கு தமிழக பாஜகவில் முக்கிய பதவி! சரத்குமார், விஜயதாரணி கதை அம்பேல்!
பாஜக தமிழகத்திற்கான புதிய மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நயினார் நாகேந்திரன் தலைமையில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். விஜயதாரணி, சரத்குமார் போன்றோருக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை.

தமிழக பாஜக புதிய நிர்வாகிகள் நியமனம்
பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத்திற்கான புதிய மாநில நிர்வாகிகள் பட்டியல் இன்று (புதன்கிழமை) வெளியாகியுள்ளது. பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஒப்புதலுடன், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். புதிய நிர்வாகிகள் பட்டியலில் சரத்குமார், விஜயதாரிணி ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.
காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவிற்குத் தாவிய விஜயதாரணி தனக்கு கட்சியில் கௌரவமான பொறுப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதேபோல தனது சமத்துவ மக்கள் கட்சியையே பாஜகவில் ஐக்கியமாக்கிய நடிகர் சரத்குமாருக்கும் எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை.
புதிய மாநில துணைத் தலைவர்கள், செயலாளர்கள்
மாநில துணைத் தலைவர்கள்:
• திரு. எம். சக்கரவர்த்தி - மத்திய சென்னை கிழக்கு
• திரு. V.P. துரைசாமி Ex.MP - தென் சென்னை
• திரு. Dr.K.P. ராமலிங்கம் Ex.MP - நாமக்கல் கிழக்கு
• திரு. கரு. நாகராஜன் - சென்னை கிழக்கு
• திருமதி Dr. சசிகலா புஷ்பா Ex.MP - தூத்துக்குடி தெற்கு
• திரு. Dr.P. கனகசபாபதி - கோயம்புத்தூர் வடக்கு
• திரு. P. டால்பின். ஸ்ரீதர் - தென் சென்னை
• திரு. A.G. ரமேஷ் Ex.MLA - விழுப்புரம் தெற்கு
• திரு. R.C. பால் கனகராஜ் - மத்திய சென்னை மேற்கு
• திரு. R.N. ஜெயபிரகாஷ் - தென் சென்னை
• திரு. மா. வெங்கடேசன் - மத்திய சென்னை கிழக்கு
• திரு. K. கோபாலசாமி Ex.MLA - விருதுநகர் கிழக்கு
• திருமதி குமழி சுந்தர் - தென் சென்னை
• திரு. N. சுந்தர் - திருநெல்வேலி தெற்கு
மாநில பொதுச் செயலாளர்கள் (அமைப்பு):
• திரு. கேசவ விநாயகன் - மத்திய சென்னை கிழக்கு
மாநில பொதுச் செயலாளர்கள்:
• திரு. பொன். வி. பாலகணபதி - இராமநாதபுரம்
• திரு. பேராசிரியர் இராம. ஸ்ரீநிவாசன் - மதுரை கிழக்கு
• திரு. M. முருகானந்தம் - திருவாரூர்
• திருமதி. P. கார்த்தியாயினி Ex.Mayor - வேலூர்
• திரு. A.P. முருகானந்தம் - கோயம்புத்தூர் நகர்
மாநில செயலாளர்கள்:
• திரு. R. கார்த்திக் தயாகராஜன் Ex.Mayor - சென்னை கிழக்கு
• திரு. K. வெங்கடேசன் - திருப்பத்தூர்
• திருமதி. Dr. D. மலர்கொடி - திருப்புலூர் வடக்கு
• திருமதி. சுமதி வெங்கடேசன் - மத்திய சென்னை மேற்கு
• திருமதி. S. மீனாட்சி - செங்கல்பட்டு வடக்கு
• திரு. S. சக்திக்குமார் - மத்திய சென்னை கிழக்கு
• திருமதி. M. மீனாதேவி - கன்னியாகுமரி கிழக்கு
• திரு. வினோத். P. செல்வம் - மத்திய சென்னை கிழக்கு
• திரு. A. அஸ்வத்தாமன் - சென்னை கிழக்கு
• திருமதி. S. சூர்யபிரியா - சென்னை மேற்கு
• திருமதி. பிரமிளா சம்பத் - தென் சென்னை
• திரு. A. கௌதமி நரசிம்மபெருமாள் - மதுரை நகர்
• திரு. R. நந்தகுமார் - கோயம்புத்தூர் நகர்
• திரு. S. ரகுராமன் (எ) முரளி - விழுப்புரம் வடக்கு
• திரு. அமித்ரபிரன் ரெட்டி - தென் சென்னை
பொருளாளர் மற்றும் பிற நிர்வாகிகள்
மாநில பொருளாளர்:
திரு. S.R. சேகர் - கோயம்புத்தூர் நகர்
மாநில இளம் பொருளாளர்:
திரு. DR.M. சிவசுப்பிரமணியம் - பெரம்பலூர்
மாநில பிரிவுத் தலைவர்கள்:
இளைஞர் அணி: திரு. Dr.SG. சூர்யா - சென்னை கிழக்கு
மகளிர் அணி: திருமதி. புதுக்கோட்டை ஸ்ரீகாந்த் - புதுக்கோட்டை கிழக்கு
பிற்படுத்தப்பட்டோர் அணி (OBC அணி): திரு. வீர திருநாவுக்கரசு - மத்திய சென்னை கிழக்கு
தாழ்த்தப்பட்டோர் அணி (SC அணி): திரு. P. சம்பத்ராஜ் - செங்கல்பட்டு வடக்கு
பழங்குடியினர் அணி (ST அணி): திருமதி. A. சுமதி - ஈரோடு வடக்கு
விவசாய அணி: திரு. G.K. நாகராஜ் - கோயம்புத்தூர் வடக்கு
சிறுபான்மையினர் அணி: திரு. ஜான்சன் ஜேசு - கோயம்புத்தூர் தெற்கு
மேலும், மாநில அலுவலக செயலாளர், மாநில சமூக ஊடக அமைப்பாளர், மாநில தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர், மாநில தலைமை செய்தி தொடர்பாளர், மற்றும் மாநில ஊடக அமைப்பாளர் பதவிகளுக்கும் நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.