MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது.. பாஜக அரசை விளாசிய முதல்வர் ஸ்டாலின்..

கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது.. பாஜக அரசை விளாசிய முதல்வர் ஸ்டாலின்..

திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் இந்தி பெயர் இடம் பெற்றதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரவித்துள்ளார். மேலும் பாஜகவின் கொட்டமும், ஆணவமும் அதிகரித்துள்ளதாக காட்டமாக விமர்சித்துள்ளார்.

1 Min read
Author : Velmurugan s
Published : Mar 04 2026, 03:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
மொழி ஒன்று, வரி வடிவம் மூன்று..?
Image Credit : Asianet News

மொழி ஒன்று, வரி வடிவம் மூன்று..?

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “பா.ஜ.க. அரசின் இந்தித் திணிப்பு: நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்!

இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பா.ஜ.க.!

'மொழி ஒன்று - வரிவடிவம் மூன்று' எனும் வகையில் இந்திப் பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான #HindiImposition செயலில் இறங்கியுள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23
தொடர்ந்து திணிக்கப்படும் இந்தி
Image Credit : Google

தொடர்ந்து திணிக்கப்படும் இந்தி

 திருச்சி மண்டல இரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் 'கர்தவ்ய த்வார்' என எழுதி வைத்துள்ளனர்.

 வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் (EPFO) ஏற்கெனவே 'பவிஷ்ய நிதி பவன்' என்ற பெயரைத் திணித்து விட்டனர்.

 குற்றவியல் சட்டங்களுக்கும் சமஸ்கிருதப் பெயரைத்தான் ஆங்கில வரிவடிவத்தில் எழுதுகின்றனர்.

ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் 'ஜல் சக்தி' ஆகிவிட்டது.

Related Articles

Related image1
காங்கிரஸ் நனைந்த பஞ்சு மூட்டை... தூக்கியெறிய தயாரான ஸ்டாலின்..! திமுகவுக்கு நஷ்டம்... கதர் பார்ட்டிக்கு கஷ்டம்..!
Related image2
எந்த அளவுக்கு போதை நடமாட்டம் இருக்கு பாருங்க ஸ்டாலின்! வெளிச்சம் போட்டு காட்டும் இரட்டை கொலை சம்பவம்! விடாத L.முருகன்
33
கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது
Image Credit : Asianet News

கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது

மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திலும் இதே வேலையைத்தான் காட்டினார்கள்.

 கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது. தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்!

 தமிழ், ஆங்கிலப் பெயர்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு, உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர்கள் இடம்பெற வேண்டும். இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணர வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மு. க. ஸ்டாலின்
நரேந்திர மோடி
மத்திய அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Government Employee Salary: மே மாதம் சம்பளம் தள்ளிப்போகிறதா? அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அதிர்ச்சி.. என்ன காரணம்?
Recommended image2
Power Cut in Tamilnadu: போட்டு பொளக்கும் கத்திரி வெயில்! மே 27ம் தேதி தமிழகம் முழுவதும் மின்தடை அறிவிப்பு!
Recommended image3
Holiday: தொடர் விடுமுறை! அரசு போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்! பயணிகளின் கவனத்திற்கு..!
Related Stories
Recommended image1
காங்கிரஸ் நனைந்த பஞ்சு மூட்டை... தூக்கியெறிய தயாரான ஸ்டாலின்..! திமுகவுக்கு நஷ்டம்... கதர் பார்ட்டிக்கு கஷ்டம்..!
Recommended image2
எந்த அளவுக்கு போதை நடமாட்டம் இருக்கு பாருங்க ஸ்டாலின்! வெளிச்சம் போட்டு காட்டும் இரட்டை கொலை சம்பவம்! விடாத L.முருகன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved