- Home
- Politics
- காங்கிரஸ் நனைந்த பஞ்சு மூட்டை... தூக்கியெறிய தயாரான ஸ்டாலின்..! திமுகவுக்கு நஷ்டம்... கதர் பார்ட்டிக்கு கஷ்டம்..!
காங்கிரஸ் நனைந்த பஞ்சு மூட்டை... தூக்கியெறிய தயாரான ஸ்டாலின்..! திமுகவுக்கு நஷ்டம்... கதர் பார்ட்டிக்கு கஷ்டம்..!
மொத்தத்தில் திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் பிரிந்து சென்றால் ஒரு சட்டமன்ற உறுப்பினராகக் கூட தகுதி இல்லாத கட்சியாக மாறிவிடும். ஆனாலும், இது திமுக கூட்டணிக்கும் பலவீனம்தான்.

காங்கிரஸ் சூலை கல் பிள்ளையார்
''காங்கிரஸ் கட்சி நனைந்த பஞ்சு மூட்டை. அதை நாம் தான் சுமக்க வேண்டும்'' என்று கூறியவர் கருணாநிதி. "காங்கிரஸ் சூலை கல் பிள்ளையார்'' என்றார் அறிஞர் அண்ணா. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால், காங்கிரஸின் வலிமை தமிழகத்தில் கணிசமாகக் குறையும். சட்டமன்ற உறுப்பினர்களே இல்லாத கட்சியாக மாறி விடும்.
காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்ததால் 2021 சட்டமன்றத் தேர்தலில் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அதில் 18 இடங்களில் வென்றது. தனித்து நின்றால், தமிழகத்தில் காங்கிரஸின் சொந்த வாக்கு வங்கி 4 சதவிகிதம் கூட தேறாது. கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டால், ஒரிரு தொகுதிகளை தவிர பல இடங்களில் டெபாசிட் இழக்கும். காங்கிரசை விட திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் செல்வாக்கு உள்ளன.
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் சிறுபான்மையினரின் வாக்குகளில் 10ல் 4 வாக்குகள் வேண்டுமானால் காங்கிரஸ் கட்சிக்கு செல்லும். சிறுபான்மை வாக்குகள் பிரிந்தால் திமுகவுக்கு சில இடங்களில் நஷ்டம். ஆனால் காங்கிரஸுக்கு பெரிய அளவில் பலவீனம்.
தவெகவின் வாக்கு வங்கி இன்னும் முழுமையாக தெரியவில்லை. தவெகவுடன் கூட்டணி அமைத்தால் காங்கிரஸ் இன்னும் தேய்ந்து போகும் அபாயம் உள்ளது. காங்கிரஸுக்கு தேர்தல் வெற்றி, எம்எல்ஏக்கள் எண்ணிக்கை, கட்சி அமைப்பு வலிமை ஆகியவை பெரிதும் பாதிக்கும். திமுக இல்லாமல் தமிழகத்தில் காங்கிரஸ் பலவீனமான நிலைக்குத் தள்ளப்படும்.
காங்கிரஸ் ஆதிக்கம்
2021 சட்டமன்ற் தேர்டதலில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வென்றது. வாக்கு சதவீதம் மொத்தத்தில் சுமார் 4.3% மட்டுமே. வட சென்னை புறநகர் பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், வேளச்சேரி, தென் மாவட்டங்களில் திருவாடணை, காரைக்குடி, சிவகாசி, நாங்குனேரி, தென்காசி, ஸ்ரீவைகுண்டம், கிள்ளியூர், குளச்சல், விளவங்கோடு மேற்கில் நீலகிரி போன்ற பகுதிகளில் வென்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் வென்றது. இதனால் சட்டமன்ற தொகுதி அளவில் காங்கிரஸ் செல்வாக்கு சுமார் கூட்டணி வாக்குகளுடன் 10-15 தொகுதிகளில் வலுவாக இருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் அனைத்துமே கூட்டணி பலம்.
தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு தமிழகத்தின் பிற பகுதிகளை விட ஒப்பீட்டளவில் வலுவானது. குறிப்பாக கிறிஸ்தவர், இஸ்லாமியர் வாக்குகள். நாடார் சமூக செல்வாக்கு ஓரளவுக்கு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு பத்மனாபபுரம் தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் ஆதிக்கம் உள்ளது. கன்னியாகுமரி தொகுதியில் சற்று குறைவு. கேரள எல்லைப்பகுதிகள் என்பதால் அங்கெல்லாம் காங்கிரஸுக்கு செல்வாக்கு இருக்கிறது. இந்தப்பகுதிகளில் மீணவர்கள், சிறுபான்மையினர், நாயர் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு செல்கிறது. அங்கெல்லாம், வாக்கு பெறுவதில், காங்கிரஸ் முதல் இடத்திலும், பாஜக இரண்டாம் இடத்திலும், திமுக 3ம் இடத்திலும், அதிமுக 4ம் இடத்திலும் உள்ளது.
மீண்டும் மீண்டும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள்
திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, தென்காசி மாவட்டம், விருதுநகர் மாவட்டம் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் திமுக கூட்டணி வலிமை, அக்கட்சி வேட்பாளரின் உள்ளூர் செல்வாக்கு காரணமாக வெற்றி பெற்றனர். இங்கு கிறிஸ்தவ நாடார்கள் வாக்குகள் அதிகம். ஆனால், இங்கு திமுக வேட்பாளர்களை நிறுத்தி இருந்தாலும் வெற்றி பெற்று இருப்பார்கள். காங்கிரஸ் நின்று வெற்றி பெற்ற தொகுதிகள் என்பதால் இதுபோன்ற தொகுதிகளே மீண்டும் மீண்டும் ஒதுக்கப்படுகிறது.
தென் மாவட்டங்களில் காங்கிரஸ் வாக்கு சதவீதம் ஓரளவிற்கே உள்ளது. தென் தமிழகத்தில் காங்கிரஸ் சில இடங்களில் வலுவாக இருந்தாலும், கூட்டணி மூலமே அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறது. அறந்தாங்கி தொகுதியில் 1977க்கு பிறகு 2006 சட்டமன்ற தேர்டலில் ஒரு முறை மட்டுமே திமுக போட்டியிட்டது. தொடர்ந்து திருநாவுக்கரசர், அவரது மகன் ராமச்சந்திரன் தான் வேட்பாளர்.
ஆனாலும் சென்றமுறை தியாகராயநகரில் அதிமுக சத்யநாராயணனை விட 137 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுகவின் கருணாநிதி வெற்றி பெற்றார். காட்பாடியில் அதிமுகவின் வி.ராமுவை விட 746 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுகவின் துரைமுருகன் வெற்றி பெற்றார். நெய்வேலியில் பாமக ஜெகனை விட 977 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுகவின் சுபா ராஜேந்திரன் வெற்றி பெற்றார். ஜோலார்பேட்டையில் அதிமுகவின் கே.சி.வீரமணியை விட 1091 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுகவின் தேவராஜ் வெற்றி பெற்றார்.
நூழிலையில் வென்ற திமுக
அந்தியூரில் அதிமுக சண்முகவேலை விட 1275 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுகவின் வெங்கடாச்சலம் வெற்றி பெற்றார். திருமயத்தில் அதிமுக பி.கே.வைரமுத்துவை விட 1382 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுகவின் ரகுபதி வெற்றி பெற்றார் தாராபுரத்தில் பாஜக எல்.முருகனை விட 1393 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுகவின் கயல்விழி வெற்றி பெற்றார்.
உத்திரமேரூரில் அதிமுகவின் சோமசுந்திரத்தை விட 1622 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுகவின் சுந்தர் வெற்றி பெற்றார். ராசிபுரத்தில் அதிமுக சரோஜாவை விட 1952 வாக்குகள் கூடுதலாக பெற்று திமுகவின் மதிவேந்தன் வெற்றி பெற்றார். ஆகையால், காங்கிரஸிடம் உள்ள சொற்ப வாக்குகளும் திமுகவுக்கு முக்கியம்.
காங்கிரஸ் கூட்டணி வலிமையால் தான் அதிக இடங்களில் செல்வாக்கு காட்ட முடிகிறது. ஆனால் திமுக சில தொகுதிகளில் காங்கிரஸ் இல்லாமல் திமுக பெரிய அளவில் வெல்ல முடியாது. ஆனாலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் தொகுதியை மீண்டும் திமுகவும், விளாவங்கோடு, கிள்ளியூர் தொகுதிகளை கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கினாலே திமுக கடும் போட்டியில் வெற்றி பெறலாம்.
காங்கிரஸில் திருச்சியில் சொல்லிக் கொள்கிற அளவுக்கு பெரிய அளவில் ஆட்கள் இல்லை. இப்போது காங்கிரஸில் கே.ஆர்.ராஜலிங்கம் என்பவரை மாவட்ட தலைவராக போட்டுள்ளார்கள். அவர் முத்தரையர். ஆனால் அந்த அளவுக்கு இங்கு காங்கிரஸுக்கு செல்வாக்கு இல்லை. பூத் கமிட்டி அமைக்கக்கூட ஆளில்லை.
நஷ்டம் காங்கிரசுக்கு தான்.
காங்கிரஸ், திமுக கூட்டணியை விட்டு போனால், மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்பு இருக்காது. காங்கிரசிற்கான காலம் முடிந்து விட்டது. பழைய ஆட்கள் இப்போது செயல்பாட்டில் இல்லை. காங்கிரஸுக்கு இருந்த வாக்கு வங்கி எல்லாம் முடிந்துவிட்டது. மதுரையை எடுத்துக் கொண்டால் மேலூர் பகுதிகளில் காங்கிரஸுக்கு ஓரளளவுக்கு வாக்குகள் உள்ளன. அங்கேயும் இப்போது அவர்களது செல்வாக்கு குறைந்து விட்டது. பரவலாக பகுதிக்கு 500 ஓட்டு, ஆயிரம் ஓட்டு, 5000 ஓட்டுகள் தான் அவர்களுக்கு இருக்கும்.
காங்கிரஸ், திமுக- அதிமுக கூட்டணியில் சேர்ந்து மட்டுமே சவாரி செய்து வந்தது. அவர்களுக்கு என்று தனிப்பட்ட செல்வாக்கு கிடையாது. கூட்டணிக்கு விழுந்த ஓட்டை வைத்து தான் அவர்களது வாக்கு வங்கியை அதிகமாக காட்டுகிறார்கள். அவர்கள் கூட்டணியில் இல்லாவிட்டால் நஷ்டம் காங்கிரசுக்கு தான்.
காங்கிரஸுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு தொகுதிகளில் வாக்குகள் இருக்கிறது. அதிலும் குறிப்பாக குளச்சல், விளவங்கோடு. பத்மநாதபுரம், நாகர்கோயில் பகுதிகளில் இருக்கிறது. கன்னியாகுமரியில் ஓரளவுக்குத்தான் காங்கிரசுக்கு வாக்கு சதவீதம் இருக்கிறது. இந்த பகுதிகளில் பாஜக முதலிடத்திலும் காங்கிரஸ் இரண்டாம் இடத்திலும் திமுக மூன்றாம் இடத்திலும் அதிமுக நான்காம் இடத்தில் இருக்கிறது. அதேபோல ராதாபுரம், நாங்குநேரி போன்ற பகுதிகளில் காங்கிரசுக்கு ஓரளவுக்கு மட்டுமே செல்வாக்கு இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறினால் குளச்சல், விளவங்கோடு, பத்மநாதபுரம், நாகர்கோவில், கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் நிச்சயமாக பாஜக கூட்டணி தேர்தல் பிரச்சாரத்திற்கு போகாமலேயே வெற்றி பெறும்.
கற்பனை செய்து பார்க்க முடியாத காங்கிரஸ்
காங்கிரஸ் ஒருவேளை தவெகவுடன் கூட்டணி அமைத்தால் திமுக கூட்டணியை இரண்டாம் இடத்திற்கு தள்ளப்படலாம். இரண்டாம் இங்கு தவெக- காங்கிரஸ் கூட்டணி சில தொகுதிகளில் வெற்றி பெறவும் வாய்ப்பு உண்டு. சில இடங்களில் திமுக மூன்றாம் இடம் இதற்கு தள்ளப்படலாம்.
திருநெல்வேலியில் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராபர்ட் ப்ரூஸ் வெற்றி பெற்றார். ஆனாலும் அங்கெல்லாம் காங்கிரசுக்கு ஓரளவுக்கு மட்டுமே செல்வாக்கு இருக்கிறது. அது காங்கிரஸ் பலத்தால் வெற்றி பெறவில்லை. திமுக கூட்டணி என்கிற ஒரே காரணத்தால் மட்டுமே வெற்றி பெற்றது.
விருதுநகர், சிவகாசி பகுதிகளில் காங்கிரஸுக்கு பூத் கமிட்டிக்குகூட ஆட்கள் கிடையாது. விருதுநகரில் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். அதற்கு காரணம் திமுக கூட்டணி மட்டுமே. இனி, திமுக கூட்டணி கிடையாது, கூட்டணி தொடர்ந்தாலும் அங்கு தாம் வேட்பாளராக போட்டியிட்டால் திமுகவினர் தோற்கடித்து விடுவார்கள் என்பதால் தான் தேர்தலில் இனி போட்டியிடப்போவதில்லை என மாணிக்கம் தாகூர் கூறியிருக்கிறார். காங்கிரஸுக்கு இங்கு அடிப்படையே இல்லை.
சிவகாசி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் நாடார் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு வாக்களித்தார்கள். அவரும் வென்றார். சிவகாசியில் காமராஜர் மீதான விசுவாசத்தால் பழைய ஆட்கள் வாக்களித்தார்கள். இப்போது நிலைமை இங்கு மாறி விட்டது. பழைய ஆட்களெல்லாம் இல்லை. பழைய ஆட்களைப்போலவும் இல்லை. சிவகாசியிலாவது ஒரு சிலர் காங்கிரஸுக்கு வாக்களிப்பார்கள். ஆனால், விருதுநகர் பகுதிகளில் காங்கிரஸுக்கு யாருமே வாக்களிக்க மாட்டார்கள். கூட்டணிக்காக காங்கிரஸுக்கு வாக்களித்தார்கள். காங்கிரஸ் திமுக கூட்டணியை விட்டுச் சென்றால் இனி அந்த வாக்குகளும் இனி விழாது. விஜய் கட்சியில் இளைஞர்கள் சிலர் மட்டுமே உள்ளனர். அவர்களை வைத்தும், காங்கிரஸ் கூட்டணியை வைத்தும் இந்தபகுதிகளில் வெற்றி பெறலாம் என கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.
செல்வாக்கில்லாத தலைவர்கள்
சிவகாசியில் அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி பெறும். அண்மையில் செந்தில் பாலாஜி பொதுமக்களுக்கு தூக்குவாளி கொடுத்துள்ளார். அருப்புக்கோட்டையில் காங்கிரஸ் கூட்டணி இல்லாமலேயே திமுக வேட்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் வெற்றி பெறுவார்.
சிவகங்கை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பாலும் போட்டியிடும். அதற்கு காரணம் ப.சிதம்பரம் குடும்பத்தின் செல்வாக்கு என்பார்கள். ஆனால், ப.சிதம்பரம் குடும்பத்திற்கு அப்படி தனிப்பட்ட செல்வாக்கெல்லாம் இல்லை. காங்கிரஸ் தலைமையின் செல்வாக்கால் கூட்டணி கட்சியிடம் அழுத்தம் கொடுப்பதால் மட்டுமே இந்த தொகுதியில் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து இங்கு போட்டியிட்டு வருகின்றனர். காரைக்குடி, சிவகங்கை பகுதிகளில் மட்டுமே அவரது முகம் அறியப்படுவதாக உள்ளது. அதை தாண்டி, மானாமதுரை, திருப்புவனம் போன்ற பகுதிகளில் அவரை பெரும்பாலானோருக்கு தெரியாது.
தகுதி இல்லாத கட்சியாக மாறிவிடும்
காரைக்குடி, திருப்பத்தூர் பகுதிகளாவது ஒரு சில காங்கிரஸார் உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தின் கடைக்கோடி பகுதிகளில் காங்கிரஸுக்கு ஆட்களே கிடையாது. மாவட்ட அளவில் காங்கிரஸ் தனித்து நின்றால் வாக்கு சதவீதம் குறைவாக இருக்கும். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சா. மாங்குடி வெற்றி பெற்றது கூட்டணி பலத்தால் மட்டுமே. மேலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பெரியபுள்ளான் 83,344 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் டி.ரவிச்சந்திரன் பெற்றது வெறும் 48,182 வாக்குகள் மட்டும்தான்.
மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஓரளவு உள்ளனர். அவர்கள் காங்கிரஸார் அளவுக்கு சமமாக உள்ளனர். என்.டி.ஏ கூட்டணியில் உள்ளனர்.
மொத்தத்தில் திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் பிரிந்து சென்றால் ஒரு சட்டமன்ற உறுப்பினராகக் கூட தகுதி இல்லாத கட்சியாக மாறிவிடும். ஆனாலும், இது திமுக கூட்டணிக்கும் பலவீனம்தான். ஆனால், தவெகவுடன் கூட்டணி அமைத்தாலும் திமுக கூட்டணிக்கு செல்லும் வாக்குகள் பிரியலாம். அது என்.டி.ஏ கூட்டணிக்கு பெரும் சாதகமாக மாறும்.
