MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மார்ச் 07 முதல் 09ம் தேதி வரை.. மழைக்கு வாய்ப்பா? வானிலை மையம் சொன்ன முக்கிய அப்டேட்!

மார்ச் 07 முதல் 09ம் தேதி வரை.. மழைக்கு வாய்ப்பா? வானிலை மையம் சொன்ன முக்கிய அப்டேட்!

TN Weather Update: தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

2 Min read
Author : vinoth kumar
Published : Mar 04 2026, 03:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சுட்டெரிக்கும் வெயில்
Image Credit : our own

சுட்டெரிக்கும் வெயில்

தமிழகத்தில் இரவு நேரத்தில் குளிரும், பகல் நேரத்தில் வெயிலும் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் காலை 10 மணி முதல் மாலை 4 வரை வெளியில் செல்வதற்கே அஞ்சுகின்றனர். ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் வாட்டி வதைத்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதுவும் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் குடையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்றும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை எப்படி இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

25
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
Image Credit : Asianet News

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

அதாவது மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

Related Articles

Related image1
தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக கவுன்சிலர் நீக்கம்.. இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்
Related image2
சரணடைய 4 வாரம் அவகாசம் வேண்டும்! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஸ்வத்தாமன் பரபரப்பு மனு!
35
மழை பெய்யும் மாவட்டங்கள்
Image Credit : our own

மழை பெய்யும் மாவட்டங்கள்

இதன் காரணமாக இன்று முதல் 06ம் வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல் மார்ச் 07 முதல் 09 வரை மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

45
பனிமூட்டம் பற்றிய முன்னறிவிப்பு
Image Credit : our own

பனிமூட்டம் பற்றிய முன்னறிவிப்பு

நாளை மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள், தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். அதேபோல் நாளை மறுநாள் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என கணித்துள்ளது.

55
சென்னை வானிலை அப்டேட்
Image Credit : our own

சென்னை வானிலை அப்டேட்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
சென்னை வானிலை ஆய்வு மையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மலேசியாவில் திருவள்ளுவர் இருக்கை... திருச்சியில் ஏன் 'கர்த்தவ்ய துவார்'..? மோடிக்கு இபிஎஸ் வேண்டுகொள்..!
Recommended image2
கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது.. பாஜக அரசை விளாசிய முதல்வர் ஸ்டாலின்..
Recommended image3
Now Playing
மணல் கொள்ளை குறித்து பேசி விஜய்.. தி.மு.க மீது விஜய் அட்டாக்.! ஆவேசமாக பேசிய விஜய்..
Related Stories
Recommended image1
தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுக கவுன்சிலர் நீக்கம்.. இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்
Recommended image2
சரணடைய 4 வாரம் அவகாசம் வேண்டும்! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அஸ்வத்தாமன் பரபரப்பு மனு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved