- Home
- Cinema
- Power Star Srinivasan Case: ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.5 கோடியை சுருட்டிய சீட்டிங் ஜாம்பவான் பவர்ஸ்டார் சீனிவாசன் கைது!
Power Star Srinivasan Case: ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.5 கோடியை சுருட்டிய சீட்டிங் ஜாம்பவான் பவர்ஸ்டார் சீனிவாசன் கைது!
Power Star Srinivasan cheating case: ரூ.1000 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.5 கோடி வாங்கி மோசடி செய்த நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பண மோசடி வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது
நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். நடிகரும், தயாரிப்பாளருமான பவர்ஸ்டார் சீனிவாசன் லத்திகா என்ற படம் மூலமாக தயாரிப்பாளராகவும், நடிகராகவும் அறிமுகமானார். இந்தப் படம் தான் அவருக்கு பவர்ஸ்டார் என்ற பட்டத்தை பெற்று கொடுத்தது.
பவர்ஸ்டார் சீனிவாசன் பண மோசடி
உனக்காக ஒரு கவிதை என்ற படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான பவர் ஸ்டார் சீனிவாசன், இந்திரசேனா, நீதானா அவன், கண்ணா லட்டு தின்ன ஆசையா, ஒன்பதுல குரு, அழகன் அழகி, சும்மா நச்சுன்னு இருக்கு, ஆர்யா சூர்யா என்று பல படங்களில் நடித்துள்ளார்.
சீனிவாசன் கைது, பவர்ஸ்டார் சீனிவாசன் கைது
இந்த நிலையில் தான் ரூ.1000 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.5 கோடி பெற்றுக் கொண்டு மோசடி செய்த வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் இன்று டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பவர்ஸ்டார் சீனிவாசன்
இதற்கு முன்னதாக சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு யாபாரத்திற்கு ரூ.10 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.65 லட்சம் மோசடி செய்துள்ளார். இதே போன்று கோவாவைச் சேர்ந்தவர், மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று பலருக்கும் கடன் வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த சீனிவாசன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சீட்டிங் பேர்வளி பவர் ஸ்டார் சீனிவாசன்
அப்போது அவர் மீது கொலை மிரட்டல், நம்பிக்கை மோசடி, உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இப்படி பல வழக்குகள் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இப்போது புதிதாக ரூ.5 கோடி பெற்று மோசடி செய்த வழக்கில் பல ஆண்டுகளாக தலைமறைவாகி இருந்த நிலையில் இன்று டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் அவர் சிறுநீரக கோளாறு முற்றிய நிலையில் இருக்கும் நிலையில் உடல் நிலையை காரணம்காட்டி ஜாமீனில் வெளியில் வருவார் என்று கூறப்படுகிறது