- Home
- Sports
- Sports Cricket
- பென் ஸ்டோக்ஸ்க்கு என்னாச்சு? 5வது டெஸ்ட்டில் திடீர் விலகல்! இங்கிலாந்து ஸ்டார் பவுலரும் அதிரடி நீக்கம்!
பென் ஸ்டோக்ஸ்க்கு என்னாச்சு? 5வது டெஸ்ட்டில் திடீர் விலகல்! இங்கிலாந்து ஸ்டார் பவுலரும் அதிரடி நீக்கம்!
இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார். ஜோப்ரா ஆர்ச்சர் நீக்கப்பட்டுள்ளார்.

India vs England 5th Test! Ben Stokes Ruled Out
இந்தியா, இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முதல் டெஸ்ட் மற்றும் 3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 2வது டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 4வது டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இந்நிலையில், இரு அணிகள் இடையிலான 5வது டெஸ்ட் போட்டி ஓவலில் நாளை தொடங்குகிறது. இந்திய அணி இந்த டெஸ்ட்டில் வெற்றி பெற்றால் தொடர் டிராவாகி விடும். அதே வேளையில் இங்கிலாந்து அணி இந்த போட்டியை டிரா செய்தாலே தொடரை கைப்பற்றி விடும்.
5வது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விலகல்
இந்நிலையில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இங்கிலாந்து துணை கேப்டன் ஆலி போப் 5வது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக அணியை வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் முழுவதும் காயத்தால் அவதிப்பட்டு வரும் பென் ஸ்டோக்ஸ் நான்காவது டெஸ்ட் போட்டியில் தோள்பட்டையில் காயம் அடைந்தார். இது கிரேடு 3 தசை கிழிப்பு என்று கண்டறியப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு அணிக்கு பெரும் பின்னடைவு
இந்தியா டெஸ்ட் தொடருக்குப் பிறகு இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுடன் ஆஷஸ் தொடரில் விளையாட உள்ளது. ஆகையால் அதன் முக்கியத்துவம் கருதி பென் ஸ்டோக்ஸ் 5வது டெஸ்ட்டில் ஓய்வு எடுத்துள்ளார். ஸ்டோக்ஸின் விலகல் இங்கிலாந்து அணிக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவாகும். ஏனெனில் பேட்டிங்கில் ஓரளவு சிறப்பாக விளையாடி வரும் அவர் பவுலிங்கில் கலக்கி வருகிறார். இரு அணியிலும் சேர்த்து இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (15 விக்கெட்டுகள்) வீழ்த்திய வீரர் அவர் தான்.
ஜோப்ரா ஆர்ச்சர் அதிரடி நீக்கம்
மேலும் 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் மொத்தம் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பென் ஸ்டோக்ஸ் காயத்தால் விலகியுள்ள நிலையில், அந்த அணியின் ஸ்டார் பவுலர் ஜோப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ் மற்றும் லியான் டாவ்சன் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக ஜேக்கப் பெத்தேல், குஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன் மற்றும் ஜோஷ் டங் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஜோஷ் டங் தவிர மற்ற 3 பேரும் இந்த தொடரில் புதிதாக விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன்
இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி பிளேயிங் லெவன்: ஆலி போப் (கேப்டன்), சாக் க்ரொலி, பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், குஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜோஸ் டங்.