- Home
- Sports
- Sports Cricket
- IND vs ENG 5th Test: இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள்! ஆல்ரவுண்டர் நீக்கம்! பிளேயிங் லெவன் இதோ!
IND vs ENG 5th Test: இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள்! ஆல்ரவுண்டர் நீக்கம்! பிளேயிங் லெவன் இதோ!
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.

IND vs ENG 5th Test! Indian Team Playing xi
மான்செஸ்டரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி போராடி டிரா செய்தது. 300க்கும் மேற்பட்ட ரன்கள் பின்னிலையில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி ரன் ஏதும் எடுக்காமல் 2 விக்கெட் இழந்தது. ஆனால் கேப்டன் சுப்மன் கில் (103 ரன்), ரவீந்திர ஜடேஜா (107 நாட் அவுட்), வாஷிங்டன் சுந்தர் (101 நாட் அவுட்) மற்றும் கே.எல்.ராகுல் (90) ஆகியோர் ஸ்பெஷல் இன்னிங்ஸ் விளையாடி தோல்வியின் பாதையில் இருந்து அணியை மீட்டு டிரா செய்தனர்.
இந்தியாவுக்கு மிக முக்கியமான டெஸ்ட்
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நாளை (ஜூலை 31) தொடங்குகிறது. இந்திய அணிக்கு 5வது டெஸ்ட் மிக முக்கியமானதாகும். ஏனெனில் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணியால் இந்த தொடரை டிரா செய்ய முடியும். மாறாக இந்த போட்டியில் டிரா செய்தால் கூட இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விடும்.
பும்ராவுக்கு பதில் யார்?
மிக முக்கியமான இந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5வது டெஸ்ட்டில் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என தகவல்கள் கூறுகின்றன. அவர் விளையாடாதபட்சத்தில் நான்காவது டெஸ்டில் விளையாடாத ஆகாஷ் தீப் மீண்டும் அணிக்கு திரும்புவார். இதேபோல் ரிஷப் பண்ட் காயம் காரணமாக வெளியேறியதால், துருவ் ஜூரல் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக பிளேயிங் லெவனில் இடம் பெறுவார்.
ஷர்துல் தாக்கூர் நீக்கம்
கடைசி போட்டியில் விளையாடிய ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக குல்தீப் யாதவ் ஆடும் லெவனில் இடம் பெறுவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளன. மேலும் நான்காவது டெஸ்டில் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் பிளேயிங் லெவனில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுலும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் களமிறங்குவார்கள். ஜெய்ஸ்வால் பார்ம் ஏற்ற, இறக்கமாக இருந்தாலும் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
சாய் சுதர்சனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?
கருண் நாயருக்கு பதிலாக 4வது டெஸ்ட்டில் அணியில் இடம்பிடித்த சாய் சுதர்சன், முதல் இன்னிங்ஸில் அரை சதம் அடித்தாலும், இரண்டாவது இன்னிங்ஸில் கோல்டன் டக்காகி வெளியேறினார். இருந்தாலும், சாய் சுதர்சனுக்கு கடைசி டெஸ்ட்டிலும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்களாக வாஷிங்டன் சுந்தரும், ரவீந்திர ஜடேஜாவும் தொடர்வார்கள். ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் போனால் முகமது சிராஜ் பாஸ்ட் பவுலிங் யூனிட்டுக்கு தலைமை தாங்குவார்.
இந்திய அணியின் பிளேயிங் லெவன்
5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: சுப்மன் கில் (கேப்டன்), கே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப் மற்றும் குல்தீப் யாதவ்.