இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், அதிமுக, திமுக, சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:54 PM (IST) Jun 28
ஐஐடி மெட்ராஸ் ஜான்சிபார் வளாகத்தில் புதிய பி.எஸ் கெமிக்கல் பிராசஸ் இன்ஜினியரிங் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து நாட்டினரும் ஜூலை 5 வரை விண்ணப்பிக்கலாம்.
11:49 PM (IST) Jun 28
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) PhD சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு 2025-26 கல்வி ஆண்டிற்காக தொடங்கியுள்ளது. NET, JRF, அல்லது GATE மதிப்பெண்கள் மூலம் ஜூலை 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
11:40 PM (IST) Jun 28
200MP கேமரா கொண்ட சாம்சங் கேலக்ஸி S24 அல்ட்ரா போனின் விலை ரூ.50,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட்டில் சிறப்பு சலுகைகளுடன் இந்த ஃபோனை வாங்கலாம்.
11:35 PM (IST) Jun 28
2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த மொபைல் நம்பர் லொகேட்டர் ஆப்களைக் கண்டறியுங்கள்: Truecaller, Hiya, Mr. Number, CallApp மற்றும் Whoscall. தெரியாத அழைப்பாளர்களை அடையாளம் காணவும், ஸ்பேமைத் தடுக்கவும் மற்றும் இருப்பிட விவரங்களைப் பெறவும்.
11:03 PM (IST) Jun 28
திருநெல்வேலி மாவட்டம், வி.எம். சத்திரம் பீர்க்கன்குளம் குளத்தைத் தூர்வாரி, புனரமைக்கும் பணி இன்று அதிகாரப்பூர்வமாகத் துவக்கப்பட்டது.
10:56 PM (IST) Jun 28
நெல்லை மாநகரில் அதிகாலையில் டீக்கடைகளுக்கு விநியோகம் செய்யப்படும் பால் பாக்கெட்டுகளை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனஇந்த திருட்டுச் சம்பவங்கள் CCTV-யில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
10:55 PM (IST) Jun 28
2026க்குள் புதிய மின்சார, கலப்பின மற்றும் ICE-இயங்கும் மாடல்களை அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. வரவிருக்கும் மஹிந்திரா SUVகளின் கண்ணோட்டமும் அவற்றின் எதிர்பார்க்கப்படும் வெளியீட்டு காலவரிசையும் இங்கே.
10:25 PM (IST) Jun 28
ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானத்திற்கான சிறந்த முதலீட்டுத் திட்டங்கள் என்ன என்பதை அறிக. பாதுகாப்பு, லாபம் மற்றும் உங்கள் தேவைகளுக்கு ஏற்ற சிறந்த விருப்பங்கள் இங்கே.
10:00 PM (IST) Jun 28
டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் என்ற சாதனையை ரிஷப் பந்த் படைத்தார். அவரது சாகச கொண்டாட்டம் ரசிகர்களைக் கவர்ந்தது. அதே நேரத்தில் அவரது மருத்துவர் அந்த சாகசம் தேவையற்றது என்று கருதுகிறார்.
09:54 PM (IST) Jun 28
மாருதி சுஸுகி S-Presso கவர்ச்சிகரமான விலையில் புதிய அம்சங்கள் மற்றும் CNG வகையுடன் வருகிறது. சிறந்த மைலேஜ் மற்றும் ஸ்டைலான வடிவமைப்பு இதை நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு சிறந்த தேர்வாக ஆக்குகிறது.
09:38 PM (IST) Jun 28
நாட்டில் 90,000 4G டவர்களை செயல்படுத்துவதை BSNL நெருங்கி வருவதால், வாடிக்கையாளர்களுக்கு ரூ.400க்கு 400 ஜிபி டேட்டாவை வழங்க BSNL முடிவு செய்துள்ளது.
09:15 PM (IST) Jun 28
BSNL நிறுவனம் கவர்ச்சிகரமான சலுகைகளுடன் கூடிய ஃபிளாஷ் சேல் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது, ஆனால் தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
09:11 PM (IST) Jun 28
Pandian Stores 2 : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதிர் மற்றும் செந்தில் இருவரும் மீனா செய்த உதவியை பற்றி பேசிக் கொண்ட காட்சிகள் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
08:40 PM (IST) Jun 28
தமிழ்நாட்டின் மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், உதயசூரியன் போல ஒன்றிணைந்து எதிர்ப்போம் என்றும் கூறியுள்ளார்.
08:17 PM (IST) Jun 28
08:07 PM (IST) Jun 28
Amitabh Bachchan talk about Kalki 2 : கல்கி 2898 AD வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்ததை ஒட்டி அமிதாப் பச்சன் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்துள்ளார். கல்கி 2 பற்றிய குறிப்பையும் அவர் பதிவில் வெளியிட்டுள்ளார்.
07:29 PM (IST) Jun 28
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் ஆக்சியம்-4 மிஷன் குழு கேப்டன் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் உரையாடினார். இந்தியாவின் 140 கோடி மக்களின் இதயங்களுக்கு நெருக்கமாக சுபான்ஷு இருப்பதாக மோடி குறிப்பிட்டார்.
07:26 PM (IST) Jun 28
அரிசி உணவுகள் அதிகம் சாப்பிடுவதால் கார்போஹைட்ரேட்களின் அளவு அதிகரித்து, டயபடிக்சிஸ் போன்ற நோய்கள் வரும் என சொல்லப்படுகிறது. இவற்றை தடுக்க ஆரோக்கியம் தரும், பாரம்பரிய இந்த 5 வகையான அரிசி வகைகளை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
07:24 PM (IST) Jun 28
ஏர் இந்தியா விமானத்தில் குடிபோதையில் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
07:02 PM (IST) Jun 28
வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மறைவைத் தொடர்ந்து, சட்டப்பேரவை செயலகம் தொகுதியை காலியானதாக அறிவித்துள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
06:56 PM (IST) Jun 28
கற்றாழை ஜெல் நம்முடைய சருமத்தை பாதுகாக்க மிகப் பெரிய அரும் மருந்தாகும். ஆனால் கடையில் விற்கும் கற்றாழை ஜெல் கெமிக்கல் கலந்துள்ளதால் பக்க விளைவுகள் ஏற்படுகிறது. ஆனால் வீட்டிலேயே செலவு இல்லாமல் சுத்தமான கற்றாழை ஜெல்லை செய்து பயன்படுத்தலாம்.
06:48 PM (IST) Jun 28
காரின் AC-யைப் பயன்படுத்தும்போது எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்த சில எளிய வழிகள் உள்ளன. மேனுவல் கட்டுப்பாட்டை குறைந்த அல்லது நடுத்தர வேகத்தில் பயன்படுத்துவது, உகந்த வெப்பநிலையை பராமரிப்பது, வழக்கமான பராமரிப்பு ஆகியவை எரிபொருள் செலவைக் குறைக்கும்.
06:38 PM (IST) Jun 28
உங்கள் குழந்தைகள் வளர வளர அவர்களின் எலும்பும் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் காணலாம்.
06:38 PM (IST) Jun 28
மழைக்காலம் வந்தாலே வேலை செய்ய முடியாமல் சோம்பேறி தனமும், தூக்கமும் தன்னால் வந்து விடும். இந்த பிரச்சனை உங்களுக்கும் இருந்தால் இந்த 5 எளிமையான முறைகளை ஃபாலோ பண்ணி பாருங்க. டல்லடிக்காமல் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குவீர்கள்.
06:24 PM (IST) Jun 28
பள்ளிகளில் மத அடையாளங்களை கட்டாயப்படுத்துவது தவறானது என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அண்ணாமலை பேசுவது பிற்போக்குத்தனம் என்று அவர் கூறியுள்ளார்.
06:10 PM (IST) Jun 28
எந்த உணவுக் கட்டுப்பாடும் இல்லாமல், ஜிம்மிற்கு சென்று கஷ்டப்படாமல் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் வெறும் 21 நாட்களில் தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார் நடிகர் மாதவன். அந்த சீக்ரெட்டை ரசிகர்களுக்காக அவர் வெளிப்படையாக பகிர்ந்தும் உள்ளார்.
06:08 PM (IST) Jun 28
05:42 PM (IST) Jun 28
ஆனி மாத நவராத்திரியான ஆஷாட நவராத்திரியில் அம்பிகைக்கு முக்கியமான 5 மங்கள பொருட்களை படைத்து வழிபட்டால் அன்னை பராசக்தியின் அருள் முழுவதுமாக கிடைப்பதுடன், வாழ்க்கையில் அதிர்ஷ்டம், செல்வம், மகிழ்ச்சி ஆகியன பெருகிக் கொண்டே இருக்கும்.
05:42 PM (IST) Jun 28
2025 ஆம் ஆண்டின் நிலவரப்படி தமிழ்நாட்டின் பணக்கார கோயில்கள், அதன் சிறப்புகள், வருமானம் பற்றிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த தகவல்கள் பெரும்பாலும் சமீபத்திய அறிக்கைகள், ஊடக தகவல்களின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டவை.
05:40 PM (IST) Jun 28
இந்திய அணியின் பவுலிங் யூனிட் சரியாக செயல்படவில்லை என்று முகமது ஷமி குற்றம்சாட்டியுள்ளார். பும்ராவுக்கு மற்ற பவுலர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
05:34 PM (IST) Jun 28
உங்க முகத்தை கலராகவும், ஜொலி ஜொலிப்பாக மாற்ற அரிசி மாவுடன் எந்தெந்த பொருட்களை கலந்து பயன்படுத்த வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
05:10 PM (IST) Jun 28
அகமதாபாத் ஏர் இந்தியா விபத்து விசாரணையை வழிநடத்தும் அதிகாரிக்கு 'எக்ஸ்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்திலிருந்து கருப்புப் பெட்டிகள் மீட்கப்பட்டு, தரவு பகுப்பாய்வு நடைபெற்று வருகிறது.
05:10 PM (IST) Jun 28
இந்தியாவில் மினசார ஸ்கூட்டர்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் அதிக இடவசதியுடன் வரக்கூடிய 5 மின்சார ஸ்கூட்டர்களை தெரிந்து கொள்வோம்.
04:50 PM (IST) Jun 28
இன்றைய நவீன யுகத்தில் தூக்கமின்மை என்பது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தூங்காமல் இருந்தால் ஆயுளில் பல ஆண்டுகள் குறையும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
04:29 PM (IST) Jun 28
04:28 PM (IST) Jun 28
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் ஒரு பசுவைக் கொன்றதற்குப் பழிவாங்கும் விதமாக ஒரு புலி மற்றும் அதன் நான்கு குட்டிகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பசுவின் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
04:18 PM (IST) Jun 28
Kuberaa Overseas Box Office Collection Report குபேராவின் வெளிநாட்டுக் வசூல் விவரங்கள் பற்றி இந்த தொகு பார்க்கலாம்.
04:13 PM (IST) Jun 28
மும்பை சென்ற எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் காற்றழுத்தம் குறைந்ததால் 7 பயணிகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்ட்டது. அந்த விமானம் அவசரமாக தரையிறங்கியது.
04:09 PM (IST) Jun 28
பாஜக கூட்டணி குறித்து ராமதாஸ் கூறிய கருத்துக்களை மகன் அன்புமணி மறுத்துள்ளார். ராமதாஸின் கூற்றுகள் திமுகவின் சூழ்ச்சி என்றும், திமுகவே பாமகவின் உண்மையான எதிரி என்றும் அன்புமணி குற்றஞ்சாட்டினார்.
04:08 PM (IST) Jun 28
ஆரோக்கியமாக வாழ நாம் உண்ணும் உணவு, உடற்பயிற்சி ஆகியவை எந்த அளவு முக்கியமோ அதேபோல ஆடைகளும் மிக முக்கியமானது. சில வகையான ஆடைகள் அலர்ஜி, சரும பிரச்சனைகள், தொற்றுகள் மற்றும் உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தலாம். அது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.