ஓசூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக ஷபீர் ஆலம் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். மேயர், நிலைக்குழுத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மாநகரின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு புதிய ஆணையரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஓசூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக ஷபீர் ஆலம் நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், மாநகர மேயர் மற்றும் நிலைக்குழு தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஓசூர் மாநகராட்சி ஆணையராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீகாந்த், கடந்த ஜனவரி மாதம் இடமாற்றம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, ஆவடி மாநகராட்சி துணை ஆணையர் மாரிச்செல்வி கூடுதல் பொறுப்பு ஆணையராகச் செயல்பட்டு வந்தார்.

புதிய மாநகராட்சி ஆணையர்:

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் (வளர்ச்சி) கூடுதல் ஆட்சியராகப் பணியாற்றி வந்த ஷபீர் ஆலம், ஓசூர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

அதனடிப்படையில், ஓசூர் மாநகராட்சி ஆணையராக ஷபீர் ஆலம் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை, மாநகர மேயர் சத்யா, பொது சுகாதாரக் குழுத் தலைவர் மாதேஸ்வரன், வரி விதிப்புக் குழுத் தலைவர் சென்னீரப்பா மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி ஊழியர்கள் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேயர் சத்யா கோரிக்கை:

அப்போது, மாநகரின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், அரசின் திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்தி மக்களுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டும் என்றும் மேயர் மற்றும் நிலைக்குழு தலைவர்கள் புதிய ஆணையரிடம் கேட்டுக்கொண்டனர்.