உங்க முகத்தை கலராகவும், ஜொலி ஜொலிப்பாக மாற்ற அரிசி மாவுடன் எந்தெந்த பொருட்களை கலந்து பயன்படுத்த வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
நாள் முழுவதும் வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் கண்ணாடியை பார்த்தால் நம்முடைய முகத்தை நமக்கே பார்த்து பிடிக்காது. ஏனெனில் தூசிகள், மாசு, வெயில் போன்ற அனைத்தாலும் முகம் கருப்பாக இருக்கும். முகம் இப்படி இருந்தால் மன கவலை தான் உண்டாகும். எந்த வேலையும் செய்யவே தோன்றாது. இந்த அனுபவம் உங்களுக்கும் இருக்கா? இதை எப்படி சரி செய்வது என்று தெரியவில்லையா?
பத்து நிமிடத்தில் உங்களது முகம் ஜொலி ஜொலிக்க ஒரு பொருள் இருக்கிறது. அது உங்களது முகத்தை ஜொலிக்க பண்ணுவது மட்டுமல்லாமல் கலராகவும் மாற்றும். அது வேற ஏதுமில்லைங்க அரிசி மாவு தான். அரிசி மாவுடன் சில பொருட்களை கலந்து ஃபேஸ் பேக்காக போட்டால் சருமம் கலராகவும், பளபளப்பாகவும் மாறும். அது எந்தெந்த பொருட்கள், அதை பயன்படுத்துவது எப்படி என்று இங்கு காணலாம்.
சருமத்திற்கு அரிசி மாவு நன்மைகள்;
இயற்கையான எக்ஸ்ஃபோலியேன்ட் - அரிசி மாவு சருமத்தில் படிந்திருக்கும் இறந்த சருமத்தை செல்களை அகற்ற பெரிதும் உதவும். மேலும் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
சருமத்தை பொலிவாக்கும் - அரிசி மாவில் இருக்கும் சேர்மங்கள், சூரிய ஒளியால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தை பாதுகாக்கும் மற்றும் சருமத்தை ஒளிரச் செய்யும்.
அழற்சி எதிர்ப்பு பண்புகள் - அரிசி மாவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் ஏற்படும் சிவத்தல், அரிப்பு மற்றும் பிற சரும எரிச்சலை குறைக்கும்.
எண்ணெயை உறிஞ்சும் - எண்ணெய் பசை சரும உள்ளவர்களுக்கு அரிசி மாவு மிகவும் நன்மை பயக்கும். இது சருமத்தில் தேங்கியுள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி முகப்பருவை தடுக்கும்.
முகத்திற்கு அரிசி மாவு ஃபேஸ் பேக்குகள் :
1. அரிசி மாவு மற்றும் பால் ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் அரிசி மாவு தேவையான அளவு பச்சை பால் சேர்த்து நன்றாக கலந்து அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு சூடான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தை சுத்தப்படுத்தும், ஈரப்பதமாக்கும் மற்றும் பிரகாசமாக்கும். அதுமட்டுமின்றி முகத்திற்கு பளபளப்பையும் கொடுக்கும்.
2. அரிசி மாவு மற்றும் தேன் ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க ஒரு கிண்ணத்தில் 2 அரிசி மாவு, ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் முகத்தை பளபளப்பாக்கும். தேன் சருமத்தை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைக்க உதவும்.
3. அரிசி மாவு மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க 2 ஸ்பூன் அரிசி மாவில் 2 ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிரிக்க குளிர்ந்த நீரும் முகத்தை கழுவ வேண்டும். தயிர் சருமத்தை சுத்தப்படுத்தும் மற்றும் அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்தும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தை பளபளப்பாக்கும்.
முக்கிய குறிப்பு:
- இந்த ஃபேஸ் பேக்குகளை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- இந்த ஃபேஸ் பேக் போடுவதற்கு முன் உங்களது முகத்தை நன்றாக சுத்தம் செய்ய மறக்காதீர்கள்.
- ஃபேஸ் பேக் போட்ட பிறகு சருமம் வறண்டு போகாமல் இருக்க மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள்.
- சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்.
