- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- face masks: எப்போதும் இளமையாகவும், முகம் பளபளப்பாகவும் இருக்க வைக்கும் 5 fask mask ஐடியாக்கள்
face masks: எப்போதும் இளமையாகவும், முகம் பளபளப்பாகவும் இருக்க வைக்கும் 5 fask mask ஐடியாக்கள்
எப்போதும் இளமை தோற்றத்துடனேயே காட்சி அளிக்க வேண்டும். முகம் பளிங்கு மாதிரி பளபளப்பாக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? அதற்கு இந்த 5 ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தி பாருங்கள். இவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் பயன்படுத்தி வந்தாலே நல்ல பலன் கிடைக்கும்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
வாழைப்பழம் மற்றும் தேன் மாஸ்க் :
வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் A, B, மற்றும் E ஆகியவை ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்பட்டு, ஃப்ரீ ரேடிக்கல்ஸ் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன. பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து, மென்மையாக்குகின்றன. தேன் சருமத்தை மிருதுவாக்கி, பளபளப்பை அதிகரிக்கும்.
ஒரு கிண்ணத்தில் வாழைப்பழத்துடன் தேனை சேர்த்து நன்றாக மசித்து பசை போல தயார் செய்யவும். இந்த மாஸ்க்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் சீராகப் பூசி 15-20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவவும்
பப்பாளி மற்றும் முட்டை வெள்ளைக்கரு மாஸ்க் :
பப்பாளியில் உள்ள பப்பைன் (Papain) என்ற என்சைம் இறந்த சரும செல்களை நீக்கி, புதிய செல்கள் உருவாகத் தூண்டுகிறது. இதனால் சருமம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் மாறும். முட்டை வெள்ளைக்கரு சரும துளைகளை சுருக்கி, மெல்லிய கோடுகளை குறைக்க உதவும்.
பப்பாளி துண்டுகளுடன் முட்டை வெள்ளைக்கருவை சேர்த்து நன்றாக மசித்துக்கொள்ளவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் மெதுவாக மசாஜ் செய்து கழுவவும்.
காபி, யோகர்ட் மற்றும் கோகோ பவுடர் மாஸ்க் :
காபியில் உள்ள காஃபின், சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, சருமத்தை புத்துணர்ச்சியடையச் செய்யும். இது வீக்கத்தைக் குறைக்கவும், சருமத்தை இறுக்கமாக்கவும் உதவும். யோகர்ட் சருமத்தை மென்மையாக்கி, இறந்த செல்களை நீக்க உதவும். கோகோ பவுடர் ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் சருமத்தை பளபளப்பாக்க உதவும்.
காபி தூள் - 1 தேக்கரண்டி,தயிர் - 1 தேக்கரண்டி மற்றும் கோகோ பவுடர் - 1/2 தேக்கரண்டி இவை அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த மாஸ்க்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து, மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
அவகேடோ மற்றும் பாதாம் எண்ணெய் மாஸ்க் :
அவகேடோ வைட்டமின் E, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்தது. இது சருமத்திற்கு ஆழமான ஈரப்பதத்தை அளித்து, கொலாஜன் உற்பத்தியைத் தூண்டும். பாதாம் எண்ணெய் வைட்டமின் E நிறைந்தது, இது சருமத்தை மென்மையாக்கி, சுருக்கங்களைக் குறைக்க உதவும்.
அவகேடோவுடன் பாதாம் எண்ணெயை சேர்த்து நன்றாக கலந்து, பசை போல தயார் செய்யவும்.இந்த மாஸ்க்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் சீராகப் பூசி 20-25 நிமிடங்கள் கழித்து, மிதமான வெந்நீரில் கழுவவும்.
வெள்ளரி, கற்றாழை மற்றும் புதினா மாஸ்க் :
இந்த மாஸ்க் சருமத்திற்கு உடனடி புத்துணர்ச்சியையும், குளிர்ச்சியையும் அளிக்கிறது. வெள்ளரி சருமத்தை ஆற்றுப்படுத்தும் மற்றும் நீரேற்றமாக வைத்திருக்க உதவும். கற்றாழை ஒரு சிறந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் சருமத்தை குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டது. புதினா சருமத்திற்கு புத்துணர்ச்சியூட்டி, சுத்தப்படுத்தும்.
வெள்ளரி, கற்றாழை ஜெல் மற்றும் புதினா இலைகளை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து, சாற்றை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். இந்த சாற்றை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவவும்.