காரின் AC-யைப் பயன்படுத்தும்போது எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்த சில எளிய வழிகள் உள்ளன. மேனுவல் கட்டுப்பாட்டை குறைந்த அல்லது நடுத்தர வேகத்தில் பயன்படுத்துவது, உகந்த வெப்பநிலையை பராமரிப்பது, வழக்கமான பராமரிப்பு ஆகியவை எரிபொருள் செலவைக் குறைக்கும்.
கோடை காலத்தில் காரில் AC இல்லாமல் பயணிப்பது கடினம். ஆனால், காரின் வேகத்திற்கும் AC பயன்பாட்டிற்கும் இடையே சரியான சமநிலையைப் பராமரிக்காவிட்டால், எரிபொருள் செலவு அதிகரிக்கும். சரியான முறையில் AC-யைப் பயன்படுத்துவதன் மூலம் எரிபொருளைச் சேமிக்கலாம்.
உங்கள் காரில் மேனுவல் AC கட்டுப்பாடு இருந்தால், குறைந்த அல்லது நடுத்தர வேகத்தில் பயன்படுத்துவது நல்லது. இது எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்தும். அதிக வேகத்தில் பயன்படுத்தும்போது, என்ஜின் அதிக சுமையை எதிர்கொள்ளும், இதனால் எரிபொருள் நுகர்வு அதிகரிக்கும்.
கேபினில் சரியான அமைப்புகளைப் பயன்படுத்துங்கள்
உங்கள் காரில் ஆட்டோ க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் இருந்தால், AC வெப்பநிலையை 24 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை வைத்திருப்பது நல்லது. இது கேபினில் வசதியான சூழலை உருவாக்கும் மற்றும் AC அமைப்பில் அதிக சுமையை ஏற்படுத்தாது. இதன் மூலம் எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்தலாம்.
AC-யைப் பயன்படுத்தும்போது எரிபொருளைச் சேமிப்பது எப்படி?
வழக்கமான பராமரிப்பு: AC-யை வழக்கமாக பராமரிப்பது குளிரூட்டும் செயல்திறனை மேம்படுத்தும் மற்றும் என்ஜின் சுமையைக் குறைக்கும்.
தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்துங்கள்: தேவைப்படும்போது மட்டும் AC-யைப் பயன்படுத்துங்கள். வெப்பநிலை சாதாரணமாக இருக்கும்போது, ப்ளோயரைப் பயன்படுத்தலாம். இது எரிபொருள் செலவைக் குறைக்கும்.
ரீசர்குலேஷன் பயன்முறை: காரின் உள்ளே ரீசர்குலேஷன் பயன்முறையைப் பயன்படுத்துவது, கேபினில் உள்ள குளிர்ந்த காற்றை மறுசுழற்சி செய்யும். இது விரைவாகக் குளிர்ச்சியை அளிக்கும் மற்றும் என்ஜின் சுமையைக் குறைக்கும்.
