MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • skincare: பைசா செலவு செய்யாமல் வீட்டிலேயே ஈஸியா தயாரிக்கலாம் சுத்தமான கற்றாழை ஜெல்

skincare: பைசா செலவு செய்யாமல் வீட்டிலேயே ஈஸியா தயாரிக்கலாம் சுத்தமான கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல் நம்முடைய சருமத்தை பாதுகாக்க மிகப் பெரிய அரும் மருந்தாகும். ஆனால் கடையில் விற்கும் கற்றாழை ஜெல் கெமிக்கல் கலந்துள்ளதால் பக்க விளைவுகள் ஏற்படுகிறது. ஆனால் வீட்டிலேயே செலவு இல்லாமல் சுத்தமான கற்றாழை ஜெல்லை செய்து பயன்படுத்தலாம்.

2 Min read
Author : Priya Velan
Published : Jun 28 2025, 06:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கற்றாழை ஜெல் ஏன் இவ்வளவு நல்லது?
Image Credit : stockPhoto

கற்றாழை ஜெல் ஏன் இவ்வளவு நல்லது?

கற்றாழை ஜெல் என்பது இயற்கையின் ஒரு அற்புதம் என்றே சொல்லலாம். இது நம் சருமத்திற்கும், கூந்தலுக்கும் பல நன்மைகளைத் தருகிறது. கற்றாழை ஜெல் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. வெயில் பட்டு கருத்த சருமத்தை சரிசெய்யும், எரிச்சலைக் குறைக்கும், பருக்கள் வராமல் தடுக்கும். இதில் உள்ள சத்துக்கள் சருமத்தைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகின்றன. சொரியாசிஸ், எக்ஸிமா போன்ற சில சருமப் பிரச்சனைகளுக்கும் கற்றாழை ஜெல் ஒரு நல்ல தீர்வாக அமையும். இது சருமத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் அழற்சியைக் குறைக்கிறது. கூந்தலுக்கு கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தும்போது, முடி உதிர்வது குறையும், பொடுகுத் தொல்லை நீங்கும். கூந்தல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் மாறும். உச்சந்தலை வறண்டு போவதையும் தடுக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கற்றாழை ஜெல் செய்யத் தேவையான பொருட்கள்:
Image Credit : stockPhoto

கற்றாழை ஜெல் செய்யத் தேவையான பொருட்கள்:

வீட்டிலேயே கற்றாழை ஜெல் செய்வதற்கு புதிய, நல்ல தரமான கற்றாழை இலைகளைத் தேர்ந்தெடுங்கள். பழுத்த, பசுமையான இலைகளைப் பயன்படுத்துவது நல்லது. வைட்டமின் ஈ எண்ணெய் ஒரு இயற்கையான ப்ரிசர்வேட்டிவ் போல செயல்பட்டு, ஜெல்லை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்கும். மேலும், இது சருமத்திற்கும் மிகவும் நல்லது. சில வைட்டமின் ஈ மாத்திரைகளை பயன்படுத்தலாம். ஜெல்லை சேமித்து வைக்க சுத்தமான கண்ணாடி பாட்டில் அல்லது காற்று புகாத டப்பாவைத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

35
கற்றாழை ஜெல் தயாரிக்கும் முறை:
Image Credit : stockPhoto

கற்றாழை ஜெல் தயாரிக்கும் முறை:

கற்றாழை இலையை செடியின் அடியிலிருந்து கவனமாக வெட்டி எடுக்கவும். இலைகளை செங்குத்தாக ஒரு பாத்திரத்தில் வைக்கவும். இலைகளில் இருந்து 'அலாயின்' (Aloins) எனப்படும் இந்த திரவம் முழுவதும் வடிந்து போகும் வரை சுமார் 10-15 நிமிடங்கள் காத்திருக்கவும். திரவம் வடிந்த பிறகு, கற்றாழை இலையை தண்ணீரில் நன்கு கழுவி சுத்தம் செய்து பின்னர் ஒரு கூர்மையான கத்தியால் இலையின் மேல் தோலை நீக்கி ஜெல் பகுதியை மெதுவாக சுரண்டி எடுத்து அதை ஒரு பாத்திரத்தில் சேகரிக்கவும். பிறகு ஜெல்லுடன் சில வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்களில் இருந்து எண்ணெயைச் சேர்க்கவும் (சுமார் 1/4 கப் ஜெல்லுக்கு 1-2 கேப்ஸ்யூல்கள்). நன்கு கலக்கவும். தயாரிக்கப்பட்ட ஜெல்லை ஒரு சுத்தமான, காற்று புகாத கண்ணாடி பாட்டில் அல்லது டப்பாவில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைக்கவும்.

45
வீட்டிலேயே செய்த கற்றாழை ஜெல்லை எப்படிப் பயன்படுத்துவது?
Image Credit : stockPhoto

வீட்டிலேயே செய்த கற்றாழை ஜெல்லை எப்படிப் பயன்படுத்துவது?

தினமும் இரவு தூங்குவதற்கு முன், முகத்தை சுத்தமாக கழுவி, சிறிதளவு ஜெல்லை முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம். இது சருமத்தைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். மேக்கப் ரிமூவராகவும் பயன்படுத்தலாம்.

ஷாம்பு போடுவதற்கு முன், தலையில் கற்றாழை ஜெல்லை தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்து அலசலாம். அல்லது ஷாம்பு போட்ட பிறகு, கண்டிஷனருக்குப் பதிலாக சிறிதளவு ஜெல்லை பயன்படுத்தலாம்.

சிறிய தீக்காயங்கள், வெட்டுக்காயங்கள் அல்லது பூச்சிக்கடிகள் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட இடத்தில் சிறிதளவு ஜெல்லை தடவலாம். இது எரிச்சலைக் குறைத்து விரைவில் குணப்படுத்த உதவும்.

வெயில் பட்டு சருமம் சிவந்து போயிருந்தால் அல்லது அரிப்பு ஏற்பட்டால், கற்றாழை ஜெல்லை தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

ஆண்கள் ஷேவிங் செய்வதற்கு முன், ஷேவிங் ஜெல்லுக்குப் பதிலாக கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தலாம். இது சருமத்திற்கு மிருதுவான உணர்வைத் தரும்.

55
முக்கிய குறிப்புகள் மற்றும் சேமிப்பு:
Image Credit : stockPhoto

முக்கிய குறிப்புகள் மற்றும் சேமிப்பு:

நீங்கள் முதன்முறையாக கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் கையின் ஒரு சிறிய பகுதியில் தடவி, ஏதேனும் ஒவ்வாமை இருக்கிறதா என்று சோதித்துப் பாருங்கள்.

வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட கற்றாழை ஜெல் கெமிக்கல் இல்லாததால், அதை குளிர்சாதனப் பெட்டியில் (ஃபிரிட்ஜில்) மட்டுமே சேமிக்க வேண்டும்.

ஃபிரிட்ஜில் வைத்தால் சுமார் 1-2 வாரங்கள் வரை ஃப்ரெஷ்ஷாக இருக்கும். நிறம் மாறினாலோ அல்லது துர்நாற்றம் வந்தாலோ, அதை பயன்படுத்த வேண்டாம்.

ஒவ்வொரு முறையும் நீங்கள் பயன்படுத்தும் போது புதிய ஜெல்லை தயாரிப்பது சிறந்தது. சிறிய அளவில் தயாரித்து பயன்படுத்துவது நல்லது.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
முடி உதிர்தல் தடுப்பு
அழகு
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
நரைமுடியை மறைக்க இனி ஹேர் டை வேண்டாம்! வீட்டில் இருக்கும் தேயிலையை இப்படிப் பயன்படுத்திப் பாருங்க!
Recommended image2
Hair Tips: கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? நீங்கள் பயன்படுத்தும் சீப்புதான் காரணமா? இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க.!
Recommended image3
Black Milk : வைரலாகும் கருப்பு பால்! இத குடிச்சா MGR போல தகதகன்னு மின்னலாமா? அப்படி என்ன சிறப்பு இந்த பாலில்?
Related Stories
Recommended image1
skincare mistakes: சரும துளைகளை சரி செய்யணுமா? இந்த 5 தவறுகளை மட்டும் எப்போதும் செய்துடாதீங்க
Recommended image2
beauty tips: வாரத்திற்கு 3 முறை மஞ்சள்-சந்தனம் பேஸ்மாஸ்க் போட வேண்டும்...ஏன் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved