இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வடகிழக்கு பருவமழை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, அரசியல், தங்கம் வெள்ளி விலை, சினிமா, ஜோதிடம், இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

09:24 AM (IST) Jan 15
ஈரான்-அமெரிக்கா பதற்றம் காரணமாக, ஈரான் தனது வான்வெளியை பகுதியளவில் மூடியுள்ளது. இதனால், ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமானங்கள் பாதுகாப்பு கருதி மாற்றுப் பாதைகளில் இயக்கப்படுகின்றன.
08:53 AM (IST) Jan 15
அய்யனார் துணை சீரியலில் பாண்டியன் புதிதாக தொடங்க உள்ள மெக்கானிக் ஷாப்பிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
08:46 AM (IST) Jan 15
ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2026-ல் இந்திய பாஸ்போர்ட் 80வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த முன்னேற்றத்தின் மூலம், இந்தியர்கள் இப்போது 55 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.
08:23 AM (IST) Jan 15
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 15, 16, மற்றும் 17, 2026 ஆகிய தேதிகளில் சென்னை மெட்ரோ ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் ரயில்களின் இயக்க இடைவெளி நேரத்திற்கு ஏற்ப மாறுபடும்.
07:36 AM (IST) Jan 15
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அன்புமணி ராமதாஸை 'டால்பின் அன்புமணி' என விமர்சித்து, விவசாயிகளின் துயரங்கள் குறித்து அவருக்கு எதுவும் தெரியாது. இனி வருங்காலங்களில் உண்மையினை ஆராய்ந்து அறிக்கை விடுவது இவருக்கும் நல்லது, கூட்டணிக்கும் நல்லது.