- Home
- Cinema
- Netflix Pandigai : 2026-ல் ஒரு டஜன் தமிழ் படங்களை வாங்கிக் குவித்த நெட்பிளிக்ஸ்... என்னென்ன படங்கள் தெரியுமா?
Netflix Pandigai : 2026-ல் ஒரு டஜன் தமிழ் படங்களை வாங்கிக் குவித்த நெட்பிளிக்ஸ்... என்னென்ன படங்கள் தெரியுமா?
முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றாக நெட்பிளிக்ஸ் இருந்து வருகிறது. அதில் 2026-ம் ஆண்டு சூர்யா 47, தனுஷின் கர உள்பட ஒரு டஜன் படங்கள் நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆக உள்ளன. அதைப்பற்றி பார்க்கலாம்.

Netflix Bagged Tamil Movies in 2026
2026-ம் ஆண்டு பொங்கல் ஸ்பெஷலாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் தாங்கள் கைப்பற்றி உள்ள தமிழ் படங்கள் என்னென்ன என்பது குறித்த அப்டேட்டை வெளியிட்டு வருகிறது. இந்த லிஸ்ட்டில் தனுஷின் 2 படங்கள், சூர்யாவின் 2 படங்கள், ரவி மோகன் தயாரிக்கும் இரண்டு படங்கள் என மொத்தம் ஒரு டஜன் படங்கள் இடம்பெற்று உள்ளன. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சூர்யா 46
நடிகர் சூர்யாவின் 46-வது படத்தை நெட்பிளிக்ஸ் தான் கைப்பற்றி உள்ளது. இந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார். இப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு வர உள்ளது.
ரவி மோகன் தயாரிக்கும் படம்
நடிகர் ரவி மோகன் தன்னுடைய பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதில் தயாரிக்கும் முதல் படத்திற்கு ப்ரோ கோடு என பெயரிட்டு இருந்தார். ஆனால் நீதிமன்றம் தடை விதித்ததால் தற்போது அப்படம் டைட்டில் இன்றி தயாராகி வருகிறது. அப்படத்தையும் நெட்பிளிக்ஸ் கைப்பற்றி உள்ளது. இதனை கார்த்திக் யோகி இயக்குகிறார்.
டயங்கரம்
யூடியூப் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆன விஜே சித்து இயக்குனராக அறிமுகமாகும் படம் டயங்கரம். அப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதன் ஓடிடி உரிமையையும் நெட்பிளிக்ஸ் கைப்பற்றி உள்ளது.
கட்டா குஸ்தி
செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கும் படம் கட்டா குஸ்தி. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதன் ஓடிடி உரிமையையும் நெட்பிளிக்ஸ் கைப்பற்றி இருக்கிறது.
இதயம் முரளி
பராசக்தி படத்தை தயாரித்த ஆகாஷ் பாஸ்கரன் இயக்குனராக அறிமுகமாகும் படம் இதயம் முரளி. இப்படத்தில் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் கயாடு லோகர் நாயகியாக நடித்துள்ளார். இதனையும் நெட்பிளிக்ஸ் கைப்பற்றி இருக்கிறது.
மார்ஷல்
டாணாக்காரன் படத்தின் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கும் படம் மார்ஷல். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸ் கைப்பற்றி உள்ளது.
அன் ஆர்டினரி மேன்
யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் படம் அன் ஆர்டினரி மேன். இப்படத்தை ரவி மோகன் தான் இயக்குகிறார். இப்படம் மூலம் அவர் இயக்குனராகவும் அறிமுகமாகிறார். இப்படத்தின் ஓடிடி உரிமையையும் நெட்பிளிக்ஸ் கைப்பற்றி உள்ளது.
தனுஷின் டி55
நடிகர் தனுஷின் 55-வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். அமரன் வெற்றிக்கு பின்னர் அவர் இயக்கும் படம் இது என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமம் நெட்பிளிக்ஸ் வசம் சென்றுள்ளது.
வித் லவ்
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகும் படம் வித் லவ். இப்படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ளார். இப்படம் பிப்ரவரி மாதம் திரைக்கு வர உள்ளது. இதன் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் தட்டிதூக்கி உள்ளது.
சூர்யா 47
மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் சூர்யா 47. இப்படத்தை ழகரம் என்கிற தயாரிப்பு நிறுவனம் மூலம் சூர்யாவே தயாரிக்கிறார். இப்படமும் நெட்பிளிக்ஸ் வசம் சென்றுள்ளது.
கர
நடிகர் தனுஷின் 54-வது படம் கர. இப்படத்தை விக்னேஷ் ராஜா இயக்கி உள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸ் கைப்பற்றி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

