- Home
- Astrology
- Jan 16 Simma Rasi Palan: கொடி கட்டி பறக்கப்போகும் சிம்ம ராசி.! ஆனாலும் ஒரு ட்விஸ்ட் இருக்கு.!
Jan 16 Simma Rasi Palan: கொடி கட்டி பறக்கப்போகும் சிம்ம ராசி.! ஆனாலும் ஒரு ட்விஸ்ட் இருக்கு.!
January 16, 2026 Simma Rasi Palangal: ஜனவரி 16, 2026 சிம்ம ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

கிரக நிலைகள்:
சிம்ம ராசி நேயர்களே, ராசிநாதன் சூரியன் புதனுடன் இணைந்து புதாதித்ய யோகத்தை உருவாக்குகிறார். செவ்வாய் மற்றும் சனி பகவானின் பார்வைகள் உங்கள் ராசியில் விழுவதால் ஓரளவுக்கு நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியும்.
பொதுவான பலன்கள்:
நீண்ட நாட்களாக இருந்த மந்த நிலை நீங்கி, செயல்களில் வேகம் கூடும். சூரிய பகவானால் எதிர்ப்புகள் விலகும். வழக்குகளில் சாதகமான சூழல் நிலவும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சு வார்த்தைகள் தாமதமாகலாம், ஆனால் முடிவுகள் சாதகமாக இருக்கும்.
நிதி நிலைமை:
திருப்திகரமான பண வரவு இருந்தாலும் கேது பகவானின் நிலை காரணமாக எதிர்பாராத செலவுகளும் ஏற்படலாம். பங்குச்சந்தை மற்றும் வணிகங்களில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. நிலுவையில் இருந்த சிறு சிறு கடன்களை திருப்பி செலுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
தனிப்பட்ட வாழ்க்கை:
கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சந்திரனின் நிலை காரணமாக பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும்.
பரிகாரம்:
மாட்டுப் பொங்கல் தினம் என்பதால் சூரிய பகவானையும், நந்தி பகவானையும் வணங்கலாம். நந்திக்கு பாலபிஷேகம் செய்து வழிபடலாம். பசுக்களுக்கு அகத்திக்கீரை அல்லது பழங்கள் வழங்குவது தோஷங்களை குறைக்கும். ‘ஓம் நமச்சிவாய’ மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

