- Home
- Astrology
- Jan 16 Kadaga Rasi Palan: கடக ராசி நேயர்களே, கோடி புண்ணியம் தரும் குரு பார்வை.! தொட்டதெல்லாம் வெற்றி தான்.!
Jan 16 Kadaga Rasi Palan: கடக ராசி நேயர்களே, கோடி புண்ணியம் தரும் குரு பார்வை.! தொட்டதெல்லாம் வெற்றி தான்.!
January 16, 2026 Kadaga Rasi Palangal: ஜனவரி 16, 2026 கடக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

கிரக நிலைகள்:
கடக ராசி நேயர்களே, ராசிநாதன் சந்திர பகவான் ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். குரு பகவான் சாதகமான நிலையில் அமர்கிறார். சனி பகவான் பாக்கிய ஸ்தானத்திலும், ராகு கேது இரண்டு மற்றும் எட்டாம் இடங்களில் நிலை கொண்டுள்ளனர்.
பொதுவான பலன்கள்:
குருவின் பார்வையால் சுப நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட தடைகள் விலகும். நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். மனதில் புதிய உற்சாகமும், எதையும் சாதிக்கும் துணிச்சலும் பிறக்கும். ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்பட்டலாம் என்பதால் உணவு பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம். வெளிநாட்டு தொடர்புகள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும்.
நிதி நிலைமை:
இன்றைய தினம் நிதி வரவு சீராக இருக்கும். எதிர்பாராத இடங்களில் இருந்து பணம் கைக்கு வரும். இருப்பினும் ராகுவின் நிலை காரணமாக வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. பழைய கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். பழுதுபட்ட வாகனங்களுக்கு செலவுகள் வரலாம்.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு மனதிற்கு இதம் தரும். உறவினர்களிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். குழந்தைகளின் முன்னேற்றம் பெருமையடையச் செய்யும். திருமணம் முயற்சிகளில் இருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
பரிகாரம்:
இன்று விநாயகப் பெருமானை வழிபடுவது நல்லது. மாட்டுப் பொங்கல் என்பதால் பசுக்களுக்கு அகத்திக்கீரை அல்லது பழங்கள் வழங்கலாம். இயலாதவர்கள், ஏழை, யஎளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

