ரயில் டிக்கெட்டில் 3% தள்ளுபடி.. ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. எப்படி பெறுவது?
அரசு அறிமுகப்படுத்தியுள்ள Rail One செயலியில் முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகளை டிஜிட்டல் முறையில் முன்பதிவு செய்தால் 3% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ரயில் டிக்கெட்டுக்கு 3% தள்ளுபடி
ரயில் பயணிகளுக்கான மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. அரசு சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Rail One என்ற புதிய செயலியில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 3% தள்ளுபடி வழங்கப்படுகிறது. பொதுமக்களுக்கு சிறிய நிவாரணமாகவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபர் 2026 ஜனவரி 14 முதல் தொடங்கியுள்ளது.
ரயில் ஒன் செயலி தள்ளுபடி
இந்த சலுகையை பெற, பயணிகள் முன்பதிவு செய்யப்படாத / பொது டிக்கெட்-ஐ Rail One செயலி மூலம் பதிவு செய்து, UPI, டெபிட்/கிரெடிட் கார்டு அல்லது வாலெட் போன்ற டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த வேண்டும். இதைச் செய்தால் டிக்கெட் கட்டணத்தில் 3% தள்ளுபடி உடனடியாக கிடைக்கும். மேலும் இந்த சலுகை ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலையை குறைக்கும் எனவும் கூறப்படுகிறது.
முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்
இந்த ஆஃபர் எத்தனை நாட்களுக்கு செல்லும் என்ற கேள்விக்கு ரயில்வே துறையிலிருந்து விளக்கம் வெளியாகியுள்ளது. நர்தர்ன் ரயில்வே தனது X (ட்விட்டர்) பதிவில், இந்த தள்ளுபடி 2026 ஜனவரி 14 முதல் ஜூலை 14 வரை செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பயணிகள் சுமார் 6 மாதங்கள் இந்த சலுகையை பயன்படுத்த முடியும். ஆனால் முக்கியமாக, இந்த தள்ளுபடி Rail One App மூலம் மட்டுமே கிடைக்கும். வேறு எந்த இணையதளம் அல்லது பிற செயலிகள் மூலம் பொதுத் டிக்கெட் பதிவு செய்தால் தள்ளுபடி வழங்கப்படாது எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ரயில் ஒன் சலுகை தேதி
அப்படியானால் Rail One என்ற செயலி என்ன? என்ற கேள்வி எழும். இது CRIS (ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம்) ஒரு “சூப்பர் ஆப்” ஆகும். இது IRCTC உடன் இணைக்கப்பட்டு செயல்படுகிறது. ரயில் டிக்கெட் பதிவு மட்டுமில்லாமல், இதில் PNR நிலை, Track Your Train, Coach Position, Rail Madad, உணவு ஆர்டர், ரீஃபண்ட் பதிவு போன்ற பல சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கின்றன. Rail One செயலியை Google Play Store மற்றும் Apple App Store ஆகிய அதிகாரப்பூர்வ ஸ்டோரிலிருந்து மட்டும் பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

