நள்ளிரவில் பரபரப்பு வீடியோ வெளியிட்டு சவுக்கு சங்கர் அலறல்.. நடந்தது என்ன?
பிரபல யூடியூபரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர், தன் மீதும் தனது குழுவினர் மீதும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்றும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான. சவுக்கு சங்கர் சவுக்கு மீடியா என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அரசியல், ஊழல் தொடர்பான விஷயங்களை விவாதித்து வருகிறார். குறிப்பாக ஆளும் திமுக அரசுக்கு எதிரான விமர்சனம் மற்றும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவது மட்டுமல்லாமல் சர்ச்சையில் சிக்குவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வப்போது கைது செய்யப்படுவதும் நீதிமன்றம் சென்று ஜாமீனில் வெளியே வருவதுமா இருந்து வருகிறார்.
கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி சவுக்கு சங்கர் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக சினிமா தயாரிப்பாளர் அளித்த புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ள சமீபத்தில் நீதிமன்ற உத்தரவின் படி ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் சவுக்கு சங்கர் நள்ளிரவில் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Me and my team may be arrested anytime tonight or early morning tomorrow - Savukku Shankar https://t.co/alciTYW8p4
— Savukku Shankar (@SavukkuOfficial) January 14, 2026
அதில், எந்த நேரத்திலும் நானும் மாலதி மற்றும் சவுக்கு மீடியாவில் பணியாற்றக்கூடிய அத்தனை பேரும் கைது செய்யப்படுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இன்று இரவு சென்னை கோட்டூர்புர காவல் நிலையத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தென்சென்னை மாவட்ட செயலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு என்னவென்றால் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருக்கக்கூடிய ஆனந்தன் அவருடைய சாதியை பயன்படுத்தி சாதி ரீதியாகவும் நானும் எனது குழுவினரும் விமர்சனம் செய்து நிகழ்ச்சியை வெளியிட்டு சமூகத்திலே கலவரத்தை வெளியிட்டு விட்டோம் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரின் பேரில் ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு அதாவது எஸ்சி/எஸ்டி சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து தமிழக அரசு சவுக்கு மீடியாவில் நடத்த விடாமல் முடக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகிறது. இதுவரை ஏறக்குறைய 50 வழக்குகள் என் மீதும், சவுக்கும் மீடியா குழுவினர் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் உதவியோடு மீண்டும் மீண்டும் அந்த வழக்குகளை உடைத்துவெளியே வந்து கொண்டிருக்கிறோம். தொடர்ந்து வெளியே வந்த மக்களுக்காக பேசிக் கொண்டிருக்கிறோம். இப்போது கைது செய்யப்படுவதற்கான காரணம் பொங்கல் தினத்தை முன்னிட்டு நீதிமன்றங்களுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தான் மற்றும் மாலதி, தனது குழுவினரை கைது செய்ய உள்ளனர்.

