- Home
- Tamil Nadu News
- விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
விஜய் சொன்னபடி 12 மணிக்கு கரூர் வந்திருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அவர் அதை ஏற்க விரும்பவில்லை என திமுக குற்றசாட்டியுள்ளது.

கரூர் சம்பவம்
கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபம உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், சில நாட்களுக்கு விஜயிய்டம் சிபிஐ விசாரணை நடத்தியது. இப்படியாக கரூர் வழக்கு சூடுபிடித்துள்ள நிலையில், இந்த சம்பவத்துக்கு விஜய் மட்டுமே காரணம் என திமுக கரூரை மீண்டும் கையிலெடுத்துள்ளது.
விஜய் தான் முழு காரணம்
இது தொடர்பாக பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், ''கரூரில் நடந்த மரணங்கள், இந்த விபத்து, கூட்டத்திற்கு விஜய் தாமதமாக வந்ததால் மட்டுமே நடந்தது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை சுமார் ஒன்பது மணி நேரம் மக்களைக் காத்திருக்க வைத்துள்ளார்.
பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்
அதனால் உணவு, தண்ணீர் இல்லாமல், கொளுத்தும் வெயிலில் மக்கள் மயங்கி விழுந்தனர். சொன்னபடி 12 மணிக்கு வந்திருந்தால், பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் விஜய் அதை ஏற்க விரும்பவில்லை. வேறு எதையோ பேசுகிறார்'' என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விஜய் இந்த வழக்குக்காக விசாரனைக்கு ஆஜராகி விட்டு வந்த நிலையில், திமுக கரூர் விவகாரத்தை மீண்டும் கையிலெடுத்துள்ளது.
சிபிஐயிடம் தமிழக அரசை குறை சொன்ன விஜய்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கடந்த 12ம் தேதி ஆஜரானார். அவரிடம் காலை 11.30 மணி முதல் மாலை 3.45 வரை விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கரூர் பிரசார கூட்டத்துக்கு ஏன் தாமதமாக வந்தீர்கள்?
நீங்கள் பேசும்போது மக்கள் மயங்கி விழுந்தும் ஏன் பேச்சை நிறுத்தவில்லை? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் கேட்டுள்ளனர். இந்த விசாரணையின்போது, தமிழக அரசு தான் சம்பத்துக்கு முக்கிய காரணம் என கூறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன. விஜய்யிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

