MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • ரயில்வே வேலை தேடுபவர்களுக்கு சூப்பர் சான்ஸ்! ஜனவரி 29 கடைசி தேதி

ரயில்வே வேலை தேடுபவர்களுக்கு சூப்பர் சான்ஸ்! ஜனவரி 29 கடைசி தேதி

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மினிஸ்டீரியல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகளில் 312 காலிப் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு ஆன்லைனில் ஜனவரி 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

1 Min read
Author : Raghupati R
Published : Jan 15 2026, 01:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ரயில்வே வேலைவாய்ப்பு 2026
Image Credit : Google

ரயில்வே வேலைவாய்ப்பு 2026

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த முறை மினிஸ்டீரியல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. தேர்வாகும் நபர்களுக்கு ஆரம்பத்திலேயே சுமார் ரூ.20,000 சம்பளம் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. மொத்தமாக 312 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் ஆய்வக உதவியாளர் கிரேடு-3, பணியாளர் மற்றும் நலன்புரி ஆய்வாளர், இளநிலை மொழிபெயர்ப்பாளர் (இந்தி), தலைமை பணியாளர் மற்றும் நலன்புரி ஆய்வாளர், அறிவியல் உதவியாளர், பப்ளிக் பிராசிகியூட்டர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கும்.

23
ரயில்வே தேர்வு முறை
Image Credit : Getty

ரயில்வே தேர்வு முறை

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், தொடர்புடைய துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயது வரம்பை பார்க்கும் போது, ​​குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள், அதிகபட்சமாக 43 ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு முறை பல கட்டங்களில் நடைபெறும். அதாவது எழுத்துத் தேர்வு, சில பதவிகளுக்கு திறன் தேர்வு / தட்டச்சுத் தேர்வு, அதன்பின் ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை மூலம் இறுதித் தேர்வு செய்யப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்.. இனி Aadhaar OTP வேலை செய்யாது.. ஆர்பிஐ அப்டேட்
Related image2
பரீட்சை இல்லாமலே மத்திய அரசு வேலை! ரூ.1.30 லட்சம் வரை சம்பளம்.. அப்ளை பண்ண நீங்க ரெடியா?
33
312 ரயில்வே காலிப்பணியிடங்கள்
Image Credit : our own

312 ரயில்வே காலிப்பணியிடங்கள்

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். இதற்காக RRB-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று “RRB Ministerial & Isolated Recruitment 2026” என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். தேவையான ஆவணங்களை பதிவேற்றி சமர்ப்பித்த பிறகு கட்டணத்தை செலுத்த வேண்டும். பொது / OBC / EWS பிரிவினர் ரூ.450, மற்ற பிரிவினர் ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 29 என்பதால், இந்த வேலைவாய்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தொடர்வண்டிப் போக்குவரத்து
தேர்வு
தொழில்
வேலைவாய்ப்பு

Latest Videos
Recommended Stories
Recommended image1
வெளிநாட்டில் படிக்க ஆசையா? பணம் ஒரு தடையல்ல! - இந்திய மாணவர்களுக்கு ரூ. 75 லட்சம் 'ஸ்காலர்ஷிப்' - மெகா உதவித்தொகை!
Recommended image2
CUET PG 2026: எந்த ஊரில் உங்களுக்குத் தேர்வு? - 'சிட்டி சிலிப்' வெளியீடு! உடனே செக் பண்ணுங்க!
Recommended image3
ரிசல்ட் வந்துருச்சு! - மெட்ராஸ் யுனிவர்சிட்டி 2026 தேர்வு முடிவுகளைப் பார்ப்பது எப்படி? முழு விவரம்!
Related Stories
Recommended image1
வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்.. இனி Aadhaar OTP வேலை செய்யாது.. ஆர்பிஐ அப்டேட்
Recommended image2
பரீட்சை இல்லாமலே மத்திய அரசு வேலை! ரூ.1.30 லட்சம் வரை சம்பளம்.. அப்ளை பண்ண நீங்க ரெடியா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved