Pongal 2026 : தமிழ் சினிமா பிரபலங்களின் தரமான பொங்கல் செலிபிரேஷன் போட்டோஸ் இதோ
ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், அருண் விஜய் உள்பட தமிழ் சினிமா பிரபலங்கள் தங்கள் இல்லங்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Tamil Cinema Celebrities Pongal Celebration
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் பொங்கல் பண்டிகையும் ஒன்று. பொங்கலன்று புதுத் துணி உடுத்தி, வீட்டில் பொங்கல் வைத்து வழிபடுவார்கள். அந்த வகையில், திரைப்பிரபலங்களும் பொங்கல் திருநாளை தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியோடு கொண்டாடி உள்ளனர். தமிழ் சினிமா பிரபலங்கள் பொங்கல் கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வாணி போஜன்
சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் வாணி போஜன். தற்போது சினிமாவில் கலக்கி வரும் இவர், பொங்கல் ஸ்பெஷலாக பட்டுச் சேலையில் நடத்திய போட்டோஷூட் இது.
திவ்ய பாரதி
பேச்சிலர், கிங்ஸ்டன் போன்ற படங்களில் நாயகியாக நடித்து பேமஸ் ஆனவர் திவ்ய பாரதி. அவர் பொங்கலுக்காக நடத்திய பிரத்யேக போட்டோஷூட் புகைப்படம் தான் இது.
அனிகா சுரேந்திரன்
குட்டி நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் அனிகா சுரேந்திரன். அவர் பொங்கல் ஸ்பெஷலாக பாரம்பரிய உடையணிந்து போட்டோஷூட் நடத்தி இருக்கிறார்.
மாளவிகா மோகனன்
நடிகை மாளவிகா மோகனனின் பொங்கல் ஸ்பெஷல் கிளிக் இது. இவர் நடித்துள்ள ராஜா சாப் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் ஓடுகிறது. இதில் பிரபாஸுக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார்.
சந்தானம்
நடிகர் சந்தானம் தன்னுடைய இல்லத்திலேயே பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாடி இருக்கிறார். வேஷ்டி சட்டையில் ஜம்முனு காட்சியளிக்கிறார் சந்தானம்.
அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன்
அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் இருவரும் 2024-ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடி, மகிழ்ச்சியோடு பொங்கல் கொண்டாடிய அழகிய கேண்டிட் கிளிக் இது.
அதுல்யா ரவி
டீசல் படத்தின் நாயகி அதுல்யா ரவி, மஞ்சள் நிற புடவை அணிந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடி இருக்கிறார். அவர் இன்ஸ்டாவில் பகிர்ந்த புகைப்படம் இது.
கார்த்தி
நடிகர் கார்த்தி பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை அணிந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடி இருக்கிறார். இந்த பொங்கலுக்கு கார்த்தி நடித்த வா வாத்தியார் திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ளது.
அருண் விஜய்
நடிகர் அருண் விஜய் தனது தந்தை விஜயகுமார், மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் பொங்கல் பண்டிகையை பாரம்பரிய முறைப்படி கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
ரஜினிகாந்த்
பொங்கல் பண்டிகையை தனது போயஸ் கார்டன் இல்லத்தில் கொண்டாடிய ரஜினிகாந்த், தன்னை காண வந்த ரசிகர்களுக்காக வீட்டின் வெளியே வந்து நன்றி தெரிவித்து இருக்கிறார்.
சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய ஃபேமிலியோடு பொங்கல் பண்டிகையை கொண்டாடி உள்ளார். பொங்கல் ஸ்பெஷலாக தன்னுடைய மகன்கல் குகன், பவன், மகள் ஆராதனா மற்றும் மனைவி ஆர்த்தி ஆகியோருடன் போட்டோஷூட்டும் நடத்தி உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

