இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

10:23 PM (IST) Oct 09
சீனாவில் 82 வயது மூதாட்டி ஒருவர் 8 உயிருள்ள தவளைகளை விழுங்கினார். இதனால் அவருக்கு கடுமையான வயிற்றுவலி மற்றும் ஒட்டுண்ணித் தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
10:10 PM (IST) Oct 09
இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஓடிஐ கிரிக்கெட்டில் 28 ஆண்டு கால சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். ஆனால் நடப்பு உலகக்கோப்பையில் மந்தனாவின் பார்ம் மோசமாக உள்ளது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
09:55 PM (IST) Oct 09
கர்நாடக அமைச்சரவை, அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மாதந்தோறும் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கும் 'மாதவிடாய் விடுப்புக் கொள்கை 2025'-க்கு ஒப்புதல் அளித்துள்ளது.
09:27 PM (IST) Oct 09
திமுக அமைச்சர் துரைமுருகன் அரசு பள்ளிகளை அவமானப்படுத்தி விட்டதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக தலைவர்களின் ஆணவம் அழிவைத் தரும் என்று நயினார் காட்டமாக கூறியுள்ளார்.
09:04 PM (IST) Oct 09
Solar Energy Corporation of India Recruitment 2025 இந்திய சூரிய ஆற்றல் கழகத்தில் (SECI) மேலாளர், Supervisor உட்பட 22 மத்திய அரசு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு. B.E/B.Tech, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹2.6 லட்சம் வரை.
08:50 PM (IST) Oct 09
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, நடிகர் விஜய்யின் கரூர் பயணம் மற்றும் அதிமுக கூட்டணியில் தவெக இணைவது குறித்தும் கருத்து தெரிவித்தார். பின், திருமாவளவனைக் கடுமையாக விமர்சித்த அவர், கோவை மேம்பாலப் பெயர் சர்ச்சை குறித்தும் பேசினார்.
08:50 PM (IST) Oct 09
IWAI Recruitment 2025 இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தில் (IWAI) LDC, Surveyor உட்பட 14 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு. 12ஆம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹1,77,500 வரை. கடைசி நாள்: 05.11.2025 மத்திய அரசின் அட்டகாசமான வேலை!
08:48 PM (IST) Oct 09
கரூர் தவெக கூட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய வழக்கில் தவெக மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பாக தவெக உறுப்பினர் ஒருவர் ஏற்கெனவே சரணடைந்து இருந்தார்.
08:35 PM (IST) Oct 09
TN Rights Project Jobs 2025 தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் (DWDA) Block Coordinator, Specialist பதவிகள் உட்பட 1096 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10வது முதல் டிகிரி வரை கல்வி தகுதியுடன் ₹35,000 வரை சம்பளம் பெறலாம். எழுத்துத் தேர்வு இல்லை.
08:32 PM (IST) Oct 09
பீகாரில் 'இந்தியா கூட்டணி' ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு அரசு வேலை வழங்கப்படும் என ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்துள்ளார். இந்த சட்டம் 20 மாதங்களுக்குள் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
08:11 PM (IST) Oct 09
India Post Payments Bank Recruitment இந்திய அஞ்சல் வங்கி (IPPB) Executive பதவிக்கு 348 காலியிடங்களை அறிவித்துள்ளது. மாதம் ₹30,000 சம்பளம். பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
07:51 PM (IST) Oct 09
LPG Tanker Strike: தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரிகள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராடத்தை தொடங்கியுள்ளன. இதனால் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
07:50 PM (IST) Oct 09
93-வது இந்திய விமானப்படை தின கொண்டாட்டத்தில், 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் குறிவைக்கப்பட்ட பாகிஸ்தான் பகுதிகளின் பெயர்களில் உணவுகள் பரிமாறப்பட்டன. இந்த மெனு கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
06:59 PM (IST) Oct 09
காங்கிரஸ் திமுகவை விட்டு எங்கும் போகாது என்று தமிழக முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாக கூறியுள்ளார். கை நம்மை விட்டு எங்கும் போகாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
06:49 PM (IST) Oct 09
ஆண்களின் ஆரோக்கியத்திற்கு கிவி பழம் எவ்வளவு நம்மை பாய்க்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
06:40 PM (IST) Oct 09
பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதக் குழு, 'ஜமாத்-உல்-மோமினாத்' என்ற பெயரில் தனது முதல் மகளிர் பிரிவைத் தொடங்கியுள்ளது. மசூத் அஸாரின் சகோதரி சாதியா அசார் தலைமையில் இயங்கும் இந்தப் பிரிவு, ஆள் சேர்ப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறது.
06:16 PM (IST) Oct 09
WhatsApp WhatsApp செயலியில் Instagram-ஐப் போன்ற 'ஸ்டேட்டஸ் கேள்விகள்' அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டாவில் சோதனையில் உள்ளது. இது ஸ்டேட்டஸ் அப்டேட்களுக்கு ஊடாடும் மறையாக்கப்பட்ட பதில்களை அனுமதிக்கிறது.
06:16 PM (IST) Oct 09
நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர உதவும் சில பொருட்கள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
06:07 PM (IST) Oct 09
Gemini AI கூகிள் Gemini AI-யின் Nano Banana டூலைப் பயன்படுத்தி அட்டகாசமான ரெட்ரோ போலா ராய்டு போர்ட்ரெய்ட்ஸ்களை உருவாக்கலாம். விண்டேஜ் ஃபிலிம் லுக் கொண்ட 5 சிறந்த prompts இங்கே.
06:03 PM (IST) Oct 09
விஜய் வீடு வீடாக செல்லாமல், பாதிக்கப்பட்டவர்களை ஒரு மண்டபத்தில் சந்திக்கலாம். அக்டோபர் 13 அல்லது 14 அன்று செல்லலாம் என தேதி தேர்ந்தெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரூ.20 லட்சம் இழப்பீட்டை விஜய் தனிப்பட்ட முறையில் வழங்குவார் என்று அறிவித்துள்ளது.
05:52 PM (IST) Oct 09
Gemini AI: கூகிள் ஹோம் செயலியில் அசிஸ்டண்ட்டிற்குப் பதில் Gemini AI வந்துள்ளது. உரையாடல் கட்டுப்பாடு, ஸ்மார்ட் கேமரா எச்சரிக்கைகள் மற்றும் எளிதான ஆட்டோமேஷன் என 5 பிரம்மாண்ட மாற்றங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
05:51 PM (IST) Oct 09
குஜராத் பலன்பூரில், தனது ஸ்கூட்டரில் ஏற்பட்ட பழுது குறித்து பலமுறை புகார் அளித்தும் நிறுவனம் அலட்சியம் செய்ததால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் ஒருவர், ஷோரூமுக்கு வெளியே தனது ஸ்கூட்டருக்கு தீ வைத்தார்.
05:37 PM (IST) Oct 09
Zoho POS குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்டில் சோஹோ தனது புதிய POS சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒருங்கிணைந்த அம்சங்களுடன் Paytm, PhonePe-க்கு கடும் போட்டியாக களமிறங்கியுள்ளது.
05:35 PM (IST) Oct 09
மதுரையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி திறந்து வைத்தார். இந்த மைதானத்தின் சிறப்புகள் என்னென்ன? என்பது குறித்து பார்ப்போம்.
05:34 PM (IST) Oct 09
ஆப்கானியர்கள் எப்போதும் பாகிஸ்தானுக்கு எதிராகவே இருந்திருக்கிறார்கள். இது கடந்த காலத்தில் நடந்தது, இப்போது நடக்கிறது, எதிர்காலத்திலும் அவர்கள் அப்படியே இருப்பார்கள். ஆப்கானிஸ்தான் மக்கள் துரோகம் செய்துள்ளனர்’’ என அவர் குற்றம் சாட்டினார்.
05:20 PM (IST) Oct 09
Today Rasi Palan : அக்டோபர் 10, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:15 PM (IST) Oct 09
Today Rasi Palan : அக்டோபர் 10, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:06 PM (IST) Oct 09
Today Rasi Palan : அக்டோபர் 10, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:01 PM (IST) Oct 09
Today Rasi Palan : அக்டோபர் 10, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:57 PM (IST) Oct 09
Today Rasi Palan : அக்டோபர் 10, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:53 PM (IST) Oct 09
Today Rasi Palan: அக்டோபர் 10, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:47 PM (IST) Oct 09
2025 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு, ஹங்கேரிய எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 'சாடான்டாங்கோ' போன்ற அவரது படைப்புகள் உலகளவில் புகழ்பெற்றவை.
04:19 PM (IST) Oct 09
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை அரசு பள்ளிகளில் நடத்துவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது என்று அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அலுவலகங்களில் இந்த முகாமை நடத்துங்கள் என்று கூறியுள்ளார்.
04:19 PM (IST) Oct 09
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த ஸ்வேதா என்பவரை அவரது கணவர் பாரதி நடுரோட்டில் வாக்குவாதத்திற்குப் பிறகு கத்தியால் குத்திக் கொலை செய்தார். தப்பியோட முயன்ற பாரதியை பொதுமக்கள் பிடித்து போலீஸ் விசாரணை
04:12 PM (IST) Oct 09
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று நீலகிரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த 5 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
04:02 PM (IST) Oct 09
உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், லிவ்-இன் உறவுகளுக்கு எதிராக பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பட்டமளிப்பு விழா ஒன்றில் பேசிய அவர், பெண்கள் இதுபோன்ற உறவுகளிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
03:40 PM (IST) Oct 09
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷனை வெற்றிகரமாக கரம்பிடித்த பார்கவி, அவருக்கு எதிராக திரும்பியதால் குடும்பத்தினரே வாயடைத்துப் போய் உள்ளனர். அடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்காலம்.
03:32 PM (IST) Oct 09
உளவுத்துறை ஆதாரங்கள் இதை "உளவியல் போர் மற்றும் அடிப்படை ஆட்சேர்ப்புக்கு" பயன்படுத்தப்படும் என்று எச்சரிக்கின்றன. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என இந்திய உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
03:31 PM (IST) Oct 09
கணவர்கள் செய்யும் இந்த 5 செயல்கள் மனைவியை எரிச்சலடைய செய்யும். அந்த தவறுகளைக் குறித்து இங்கு காணலாம்.
03:26 PM (IST) Oct 09
MS Dhoni Arrives In Madurai: பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்க மகேந்திர சிங் தோனி மதுரை வந்தார். அவருக்கு ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பு கொடுத்தனர்.