- Home
- Cinema
- தொலைக்காட்சி
- இனி பேச்சே இல்ல... வீச்சு தான்; ஆதி குணசேகரனின் அடுத்த பிளான் என்ன தெரியுமா? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
இனி பேச்சே இல்ல... வீச்சு தான்; ஆதி குணசேகரனின் அடுத்த பிளான் என்ன தெரியுமா? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷனை வெற்றிகரமாக கரம்பிடித்த பார்கவி, அவருக்கு எதிராக திரும்பியதால் குடும்பத்தினரே வாயடைத்துப் போய் உள்ளனர். அடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்காலம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த தர்ஷன் - பார்கவியின் திருமணம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தர்ஷனுக்கு அன்புக்கரசி உடன் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்கிற கனவோடு இருந்த ஆதி குணசேகரன், இந்த சவாலில் ஜனனியிடம் தோற்றுப்போனதால் கடுப்பாகி வீட்டுக்கு சென்று ரூமுக்குள் தஞ்சமடைந்தார். மறுபுறம் ஞானம், அவர்கள் வீட்டுக்கு வந்தால் வெட்டிப் போடுவேன் என வீரவசனம் பேச, அதை மாடியில் இருந்தவாரு கேட்டுக்கொண்டிருந்தார் ஆதி குணசேகரன். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
சண்டைபோட தயாராகும் ஜனனி
திருமணம் முடிந்த கையோடு, தர்ஷனையும், பார்கவியையும் கோவிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு பேசும் ஜனனி, தற்போது இந்த சவாலில் தோற்றுப் போனதால் அவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். நாமும் இதில் முழுமையாக ஜெயிக்க வில்லை. அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என பேசுகிறார். நம்ம இந்த கல்யாணத்தை நடத்தி முடித்ததால் திருப்தியடைந்து உட்கார்ந்துவிட முடியாது என கூறும் ஜனனி, அவங்களும் நம்மை சும்மா விடமாட்டாங்க. நேராக சென்று வீட்டிலேயே இருந்து அவர்களுக்கு எதிராக சண்டையிட்டால் தான் நம்மால் அவர்களை ஜெயிக்க முடியும் என கூறுகிறார் ஜனனி.
பார்கவி கொடுத்த ட்விஸ்ட்
அப்போது அன்புக்கரசியை பற்றி ஜீவானந்தத்திடம் ஃபீல் பண்ணி பேசும் பார்கவி. அந்த பெண்ணோட இந்த நிலைமைக்கு யார் காரணம் என கேட்க, அதற்கு அவர், அன்புக்கரசியில் இந்த நிலைக்கு அவங்க அக்கா தான் காரணம் என சொல்கிறார் ஜீவானந்தம். அதற்கு பார்கவி, அந்த பெண் செய்த தப்புக்கு தண்டனை அனுபவித்துவிட்டால், ஆனால் அவளை கல்யாணம் செய்துகொள்வதாக சொல்லி ஏமாற்றிய தர்ஷனுக்கு என்ன தண்டனை என கேட்கிறார். அவரின் இந்த கேள்வியால் அனைவரும் ஷாக் ஆகிப்போனார்கள். கல்யாணம் முடிந்த உடனே தர்ஷனுக்கு எதிராக பார்கவி திரும்பி உள்ளது யாரும் எதிர்பாராத ட்விஸ்ட் ஆக உள்ளது.
குணசேகரனின் அடுத்த பிளான்
மறுபுறம் வீட்டில் தான் தோற்றுப் போனதை நினைத்து கண்ணீர்விட்டு அழுகிறார் ஆதி குணசேகரன். அவரை கதிர் மற்றும் ஞானம் சமாதானப்படுத்த வர, அப்போது அவர்களிடம் ஈஸ்வரியை தாக்கியதை பற்றி சொல்கிறார் குணசேகரன். அவர்களும் உங்கள் பக்கம் தான் நியாயம் இருப்பதாக கூறி அவருக்கு ஜால்ரா தட்டுகிறார்கள். தம்பிகளின் ஆதரவால் நம்பிக்கையடைந்த குணசேகரன், ஜனனியையும், அறிவுக்கரசியையும் சும்மா விடக் கூடாது என சொல்கிறார். அநேகமாக அவர்களை தீர்த்துக்கட்ட குணசேகரன் பிளான் போட வாய்ப்பு உள்ளது. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.