- Home
- Cinema
- தொலைக்காட்சி
- அறிவுக்கரசி யாருன்னே எனக்கு தெரியாது; போலீசை பார்த்ததும் அந்தர் பல்டி அடித்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் 2
அறிவுக்கரசி யாருன்னே எனக்கு தெரியாது; போலீசை பார்த்ததும் அந்தர் பல்டி அடித்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் 2
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அறிவுக்கரசி கொலை செய்த குற்றத்திற்காக அவரை போலீசார் கைது செய்ய வந்த நிலையில், அடுத்து என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷனுக்கும் அறிவுக்கரசிக்கும் திருமணம் நடைபெற இருந்த நிலையில், தாலி கட்டும் நேரத்தில் மாஸாக மண்டபத்திற்குள் எண்ட்ரி கொடுத்த ஜனனி, திருமணத்தை தடுத்து நிறுத்துகிறார். ஜனனியை பார்த்ததும் ஆதி குணசேகரன், அறிவுக்கரசி மற்றும் கதிர் ஆகியோர் வெடவெடத்துப் போகிறார்கள். பின்னர் பார்கவியும் மணப்பெண் கோலத்தில் மண்டபத்திற்குள் மங்காத்தா பிஜிஎம் உடன் எண்ட்ரி கொடுக்க அனைவரும் ஷாக் ஆகிறார்கள். இதையடுத்து ஜீவானந்தமும் உள்ளே வருகிறார்கள். இதன்பின்னர் இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
சிக்கிய அறிவுக்கரசி
ஜனனி, ஜீவானந்தம், பார்கவி மூவரையும் பார்த்ததும் மண மேடையில் இருந்து கோபத்துடன் ஓடி வந்த அறிவுக்கரசி அவர்களுடன் அடிதடி சண்டையில் இறங்குகிறார். இந்த சமயத்தில் மண்டபத்திற்குள் வந்த போலீஸார், அவர்களை தடுத்து நிறுத்துகிறார்கள். ஜனனி, பார்கவி, ஜீவானந்தம் ஆகிய 3 கிரிமினல்களை பிடிச்சிட்டு போக தான் இங்க வந்தீங்களா என ஆதி குணசேகரன் கேட்க, அதற்கு அந்த போலீஸ் அதிகாரி, தாங்கள் அறிவுக்கரசியை மர்டர் கேஸில் கைது செய்ய வந்திருப்பதாக சொல்கிறார். கெவின் என்கிற போட்டோகிராபரை கொலை செய்த குற்றத்திற்காக அவரை கைது செய்ய வந்திருப்பதாக சொல்கிறார்.
ஆதி குணசேகரனுடன் சண்டைபோட்ட அறிவுக்கரசி
போலீஸ் தன்னை கைது செய்ய வந்திருப்பதை அறிந்த அறிவுக்கரசி, இனியும் இந்த கல்யாணம் நடக்காது என்பதால், அனைத்து உண்மைகளையும் போட்டுடைக்கிறார். இந்த ஆளுக்காக (குணசேகரன்) தான் கொலை செய்தேன். இந்த குடும்பத்துக்காக தான் கொலை செய்தேன் என சொல்கிறார். இதைக்கேட்டு கடுப்பான ஆதி குணசேகரன், இவ யாருன்னே எனக்கு தெரியாது, இவளுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, அவளை கொண்டு போங்க, என அந்தர் பல்டி அடிக்கிறார். இதைக்கேட்டு ஆடிப்போன அறிவுக்கரசி, குணசேகரனுக்காக என்னென்ன செய்தாரோ அதையெல்லாம் போட்டுடைக்கிறார்.
குணசேகரனை மிரட்டும் ஜனனி
அதன்படி கதிரை கைகாட்டி, இவன் அவனோட அண்ணிய கொலை பண்ண திட்டம் போட்ட விஷயத்தையும் சொல்லிவிடுகிறார். அதைக்கேட்டு நந்தினி, ரேணுகா, ஜனனி, சக்தி ஆகியோர் ஷாக் ஆகிறார்கள். பின்னர் ஆதி குணசேகரனி தனியாக ஒரு ரூமுக்குள் பேச அழைத்து செல்லும் ஜனனி, பார்கவிக்கும், தர்ஷனுக்கும் கல்யாணம் நடக்கலேனா போலீஸ் இங்க வரும் என மிரட்டுகிறார். ஆனால் ஆதி குணசேகரன் அதற்கு சம்மதிக்க மறுக்கிறார். ரூமுக்குள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடக்கிறது. இதன்பின்னர் என்ன நடக்கிறது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.