- Home
- Cinema
- தொலைக்காட்சி
- நீ கல்யாணம் பண்ணு... நாங்க டைவர்ஸ் பண்றோம்..! குணசேகரனை தில்லாக எதிர்க்கும் சிங்கப்பெண்கள் - எதிர்நீச்சல் 2
நீ கல்யாணம் பண்ணு... நாங்க டைவர்ஸ் பண்றோம்..! குணசேகரனை தில்லாக எதிர்க்கும் சிங்கப்பெண்கள் - எதிர்நீச்சல் 2
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷனுக்கு கல்யாணம் செய்தால், நாங்கள் டைவர்ஸ் செய்வோம் என சொல்லி ஆதி குணசேகரனுக்கே அதிர்ச்சி கொடுத்துள்ளார்கள் ரேணுகா மற்றும் நந்தினி.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷனுக்கும், அறிவுக்கரசிக்கும் கல்யாணத்தை நடத்தி முடிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு ஆதி குணசேகரனின் கேங் சுற்றும் நிலையில், அதை தடுத்து நிறுத்த ஜனனிக்காக ரேணுகா, நந்தினி ஆகியோர் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், ரேணுகாவை செல்போனில் தொடர்புகொண்ட தர்ஷன், என்னால் தான் இத்தனை பிரச்சனை, அதனால் நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என சொல்லி போனை கட் பண்ணிவிடுகிறார். இதனால் பதறியடித்துக் கொண்டு மண்டபத்துக்குள் வரும் ரேணுகா மற்றும் நந்தினி, அவனை மீட்க மாடிக்கு செல்கிறார்கள்.
தற்கொலைக்கு முயன்ற தர்ஷன்
அப்போது அவர்களை தடுக்கும் ஞானம், நீங்கெல்லாம் மேலே செல்லக் கூடாது என சொல்கிறார். பின்னர் தர்ஷன் தற்கொலை செய்துகொள்ள உள்ள விஷயத்தை சொன்னதும், கதிர், கரிகாலன், ஞானம் ஆகியோர் பதறியடித்துக் கொண்டு மாடிக்கு செல்கின்றனர். அங்கு கதவை உடைத்துக் கொண்டு கதிர் உள்ளே சென்று, தூக்கில் தொங்கிய தர்ஷனை காப்பாற்றி அவனுக்கு பளார், பளார் என அறைவிடுகிறான். இதையடுத்து தர்ஷனை கீழே அழைத்து வருகிறார்கள். அங்கு தர்ஷனுக்கும், அன்புக்கரசிக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டாம் என ரேணுகாவும், நந்தினியும் குணசேகரனிடம் கெஞ்சுகிறார்கள்.
டைவர்ஸ் பண்ணுவோம் என மிரட்டும் ரேணுகா
ஆனால் அறிவுக்கரசியோ, அவன் செத்தாலும் அவனை ஐஸ் பெட்டியில் வைத்து என் தங்கச்சி குடும்பம் நடத்துவா என கொச்சையாக பேச, அதைக்கேட்டு அனைவரும் முகம் சுழிக்கிறார்கள். இவர்களை பேசி புரியவைக்க முடியாததால், தடாலடி முடிவெடுக்கும் ரேணுகா, நீங்க கல்யாணம் பண்ணினாலும் அவன் சந்தோஷமா இருக்க மாட்டான். உங்க இஷ்டத்துக்கு நீங்க கல்யாணம் பண்ணுங்க, நாங்க அதுக்கப்புறம் டைவர்ஸ் பண்ணிக்கிறோம் என்று சொல்கிறார். இதைக்கேட்ட ஆதி குணசேகரன் ஆடிப்போகிறார். இப்படி கல்யாணம் நடக்குமா... நடக்காதா என்கிற பரபரப்பு ஓய்வதற்குள் மற்றொரு பிரச்சனை வருகிறது.
அரெஸ்ட் பண்ணப்படும் அறிவுக்கரசி
ஜனனி, ஜீவானந்தம், பார்கவி ஆகியோர் போலீஸ் உடன் மண்டபத்திற்கு எண்ட்ரி கொடுக்கிறார்கள். தர்ஷனின் கல்யாணம் நடைபெற ஐந்து நிமிடங்களே இருந்த நிலையில், அதை தடுத்து நிறுத்தும் போலீசார் அறிவுக்கரசியை மர்டர் கேஸில் அரெஸ்ட் பண்ண வந்திருப்பதாக சொல்கிறார்கள். அப்போது தான் கேமராமேன் கெவின் என்பவரை அறிவுக்கரசி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அனைவருக்கும் தெரியவருகிறது. போலீஸார் கல்யாணத்தை தடுத்து நிறுத்தியதால், தான் ஆதி குணசேகரனுக்காக தான் இதையெல்லாம் செய்தேன் என போட்டுக்கொடுக்கிறார் அறிவுக்கரசி. இதன்பின் என்னென்ன ட்விஸ்ட் நடந்தது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.