- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சக்தி குணசேகரனின் தம்பியே இல்லையா? தீப்பறக்கும் திருப்பங்களுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்
சக்தி குணசேகரனின் தம்பியே இல்லையா? தீப்பறக்கும் திருப்பங்களுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரனின் பீரோவை திறந்து பார்த்த சக்திக்கு, அடுக்கடுக்கான உண்மைகள் தெரியவருகிறது. அது என்ன என்பதை பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷனுக்கு யாருடன் கல்யாணம் நடக்கும் என்பது ஒருபுறம் இருக்க, மறுபுறம் வீட்டில் ஏதேனும் ஆதாரம் சிக்குகிறதா என தேடச் சென்ற சக்திக்கு, பல உண்மைகள் தெரியவருகிறது. நேற்று, ஆதி குணசேகரன் தன்னுடைய தம்பிகளின் வாரிசுகள் பெயரில் எழுதி வைத்திருந்ததாக சொன்ன சொத்துக்கள் அனைத்தும் அவர் பெயரிலேயே இருப்பதை பார்த்து சக்தி ஷாக் ஆனார். இதைத் தொடர்ந்து ஆதி குணசேகரனின் பிரோவில் வேறு ஏதேனும் ஆதாரம் சிக்குகிறதா என்பதை தேடும் சக்தியின் கையில் மற்றுமொரு லெட்டர் சிக்குகிறது. அதில் என்ன இருந்தது என்பதை பார்க்கலாம்.
சக்திக்கு தெரிய வரும் உண்மை
சக்தியிடம் சிக்கியது பழைய காலத்து இன்லேண்ட் லெட்டர். சுமார் 30 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட லெட்டராக அது இருக்கக்கூடும். அந்த லெட்டரை எடுத்து படிக்கும் சக்திக்கு தூக்கிவாரிப் போடுகிறது. அப்படி அந்த லெட்டரில் என்ன இருந்தது என்பது சொல்லப்படாவிட்டாலும், அதில் ஆதி குணசேகரன் பல வருடமாக அனைவரிடமும் மூடி மறைத்த ஒரு உண்மை இருக்கிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. அந்த உண்மை சக்தியை பற்றியதாக கூட இருக்கலாம். இதனால் தான் அந்த லெட்டரை படித்ததும் சக்தி செம ஷாக் ஆகிறார். அந்த லெட்டர் தான் இனி மிகப்பெரிய ட்விஸ்டாக இருக்கப்போகிறது.
குணசேகரன் ஏமாற்றுகிறாரா?
யூகங்களின் படி, அந்த லெட்டர் மூலம் சக்தி, ஆதி குணசேகரனின் தம்பி இல்லை என்பது அவருக்கு தெரியவந்திருக்கலாம். சக்தியின் தந்தை மிகப்பெரிய பணக்காரராக இருக்கக்கூடும். அவரின் சொத்துக்களை அபகரித்து ஆதி குணசேகரன் அனுபவித்து வரும் விஷயம் சக்திக்கு தெரியவந்திருக்கும். இந்த உண்மையை சக்தி, கதிர் மற்றும் ஞானத்திடம் சொன்ன பின்னர், அவர்களும் ஆதி குணசேகரனை எதிர்க்க வாய்ப்பு இருக்கிறது. இத்தனை நாள் தன் தம்பிகளாக ஆதி குணசேகரன் பாசம் காட்டி வந்த கதிரும், ஞானமும் அவருக்கு எதிராக திரும்பவும் அதிக சான்ஸ் இருக்கிறது.
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அடுத்து என்ன?
லெட்டரில் உள்ள உண்மை மற்றும் சொத்து மேட்டர் ஆகியவற்றை எடுத்து சென்று ஆதி குணசேகனின் முகத்திரையை சக்தி கிழிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் ஜனனி, ஜீவானந்தம், பார்கவி ஆகியோர் லாரி ஏற்றி கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர்கள் என்ன ஆனார்கள்? ரெளடிகளின் சூழ்ச்சியில் இருந்து எஸ்கேப் ஆனார்களா? தர்ஷனுக்கு யாருடன் திருமணம் ஆனது? ஈஸ்வரியின் நிலைமை என்ன ஆனது? என அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இனி வரும் எபிசோடுகளில் விடை கிடைக்கும் என்பதால், இனி எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் செம ட்விஸ்டோடு இருக்க வாய்ப்பு உள்ளது.