- Home
- Cinema
- தொலைக்காட்சி
- குணசேகரனின் ஃபிராடு வேலையை கண்டுபிடித்த சக்தி; ரூட் மாறும் எதிர்நீச்சல் தொடர்கிறது கதைக்களம்
குணசேகரனின் ஃபிராடு வேலையை கண்டுபிடித்த சக்தி; ரூட் மாறும் எதிர்நீச்சல் தொடர்கிறது கதைக்களம்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் குணசேகரன் சக்தியை மண்டபத்தில் இருந்து வெளியே துரத்திவிட்ட நிலையில், அவர் செய்த ஃபிராடு வேலையை கண்டுபிடித்து இருக்கிறார் சக்தி.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் தர்ஷனுடன் நந்தினியும், சக்தியும் வெளியே எஸ்கேப் ஆகி செல்ல முயன்ற நிலையில், மண்டபத்தின் வாசலிலேயே குணசேகரனிடம் கையும் களவுமாக சிக்கிவிடுகிறார்கள். இதையடுத்து தர்ஷனை பளார்... பளார்னு கன்னத்தில் அறைவிட்ட குணசேகரன், அவனை ரூமில் அடைக்க சொல்லி கதிருடன் அனுப்பி வைத்துவிட்டு, மறுபுறம் சக்தியிடம் நீ ஒரு ஆம்பளையா இருந்தா இந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்திப் பாருடா என சவாலும் விட்டிருந்தார். அதுமட்டுமின்றி சக்தி, ரேணுகா மற்றும் நந்தினி ஆகியோரை மண்டபத்தைவிட்டு வெளியே அனுப்பி விடுகிறார்.
ட்விஸ்ட்
இதன்பின்னர் ஆதி குணசேகரன் தங்களை துரத்திவிட்ட விஷயத்தை ஜனனியிடம் போன் போட்டு சொல்கிறார் சக்தி. அவர் தாங்கள் விடிவதற்குள் வந்துவிடுவோம் என கூறிவிட்டு காரில் குணசேகரன் மற்றும் பார்கவியை அழைத்துக் கொண்டு கிளம்புகிறார். ஆனால் வரும் வழியில் ஜனனி தான் ஓட்டி வரும் காரை ஒரு லாரி, வெகு நேரமாக சேஸ் பண்ணி வருவதை கண்டுபிடித்துவிடுகிறார். குணசேகரன் அனுப்பிய ஆளாக தான் இருக்கும் என சந்தேகப்படும் ஜனனி, அவர்களிடம் சிக்காமல் இருக்க காரில் படுவேகமாக செல்கிறார். அந்த லாரியும் விடாமல் துரத்தி வருகிறது. இதனால் அவர்களுக்கு என்ன ஆனதோ என்கிற பதற்றத்தில் ஆடியன்ஸ் இருக்க, தற்போது கதைக்களத்தின் ரூட்டை சற்று மாற்றி இருக்கிறார் டைரக்டர்.
சக்தி கையில் சிக்கும் ஆதாரம்
அதன்படி இன்றைய எபிசோடில், மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு வரும் சக்தி, நேராக ஆதி குணசேகரனின் ரூமிற்கு சென்று, அங்கு ஈஸ்வரியை அவர் தாக்கியதற்கான ஆதாரம் ஏதேனும் கிடைக்கிறதா என தேடுகிறார். அப்போது குணசேகரனின் பீரோவில் இருந்த ஃபைலில் சொத்துப் பத்திரங்கள் கொத்தாக இருப்பதை பார்க்கிறார் சக்தி. அவற்றை எடுத்து ஒவ்வொன்றாக படித்துப் பார்த்த அவர் அதிர்ச்சி அடைகிறார். இந்த சொத்துப் பத்திரத்தில் என்ன ட்விஸ்ட் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். அதில் ஆதி குணசேகரன் செய்த கோல்மால் வேலையை கண்டுபிடித்துவிடுகிறார் சக்தி.
குணசேகரன் செய்த கோல்மால் வேலை
சில மாதங்களுக்கு முன்னர் ஆதி குணசேகரன், தன் பெயரில் உள்ள சொத்துக்களை தன்னுடைய தம்பிகளின் வாரிசுகளின் பெயர்களில் எழுதி வைத்துவிட்டதாக கூறி இருந்தார். அதற்கான பத்திரம் அடங்கிய ஃபைலை ஞானத்திடம் ஒன்றும், கதிரிடம் ஒன்றும் கொடுத்திருந்தார். அப்போது சக்திக்கும் ஒரு ஃபைலை கொடுப்பார். ஆனால் சக்தி அதெல்லாம் தனக்கு வேண்டாம் என வாங்க மறுத்துவிடுவார். அவர் தன்னுடைய தம்பிகளுக்கு பிரித்து கொடுத்ததாக சொன்னது எதுவும் உண்மை இல்லை. அனைத்து சொத்துக்களும் ஆதி குணசேகரன் பேரில் தான் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து விடுகிறார் சக்தி.
சக்தியின் அடுத்த பிளான் என்ன?
அவர் செய்த இந்த ஃபிராடு வேலையை சக்தி, போட்டுடைத்தால், ஞானம் மற்றும் கதிருக்கும் தங்கள் அண்ணன் மீது இருக்கும் நம்பிக்கை உடைய வாய்ப்பு இருப்பதால், இந்த சொத்து விவகாரம் தர்ஷன் கல்யாணத்திற்கு முன் பூதாகரமாக வெடிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. புது ரூட்டுக்கு திரும்பி உள்ள கதைக்களத்தால் என்னென்ன கலவரம் நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.