MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • வசமாக சிக்கிய சந்திரகலா! கார்த்திக் கையில் கிடைத்த அந்த வீடியோ ஆதாரம் - இனி தப்பிக்கவே முடியாது:Karthigai Deepam Serial Update!

வசமாக சிக்கிய சந்திரகலா! கார்த்திக் கையில் கிடைத்த அந்த வீடியோ ஆதாரம் - இனி தப்பிக்கவே முடியாது:Karthigai Deepam Serial Update!

Karthik Finds Evidence Against Chandrakala : கார்த்திகை தீபம் சீரியலில் கோயிலுக்கு சொந்தமான புதையல் நகைகளை திருடியது சந்திரகலா தான் என்பதை கார்த்திக் கண்டுபிடித்துவிட்டார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Mar 10 2026, 03:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Karthik Finds Evidence Against Chandrakala
Image Credit : Zee Tamil Serial

Karthik Finds Evidence Against Chandrakala

கார்த்திகை தீபம் சீரியலானது நாளுக்கு நாள் என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாத வகையில் பல சுவாரஸ்யமான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. கோயிலுக்கு சொந்தமான புதையல் நகைகளை திருடுவதில் ஆரம்பித்து மகளிர் தினம் கொண்டாட்டம் வரையில் சீரியலில் வெளியான காட்சிகள் ரசிகர்களை கொண்டாட செய்தது. உதாரணத்திற்கு மகளிர் தினத்தை முன்னிட்டு சாமுண்டீஸ்வரி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதில் லேப்டாப், ஆட்டோ மற்றும் பண உதவிகளை செய்தார்.

25
Karthigai Deepam Serial Today Episode 10th March 2026
Image Credit : Zee Tamil Serial

Karthigai Deepam Serial Today Episode 10th March 2026

சாமுண்டீஸ்வரியின் நல திட்டங்களை கெடுக்கும் வகையில் சந்திரகலா பல திட்டங்களை வகுத்தார். அதில் முக்கியமான ஒன்று தான் லேப்டாப் வண்டியை கணவரை வைத்து கடத்தி சென்றார். பின்னர் கார்த்திக்கிற்கு என்ன நடந்தது என்பதை மயில்வாகனம் சொல்லவே உடனடியாக கார்த்திக் ஆக்‌ஷனில் இறங்கினார். எப்படியோ லேப்டாப் சப்ளை செய்த குடோனுக்கு சென்று டிரைவர் நம்பரை வாங்கி பின்னர் அவரை தேடி சென்றார்.

35
கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்
Image Credit : Zee Tamil You Tube

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்

பின்னர் வேன் டிரைவரை கண்டுபிடித்து என்ன நடந்தது என்பது பற்றி கேட்டார். அப்போது டிரைவர் எல்லா உண்மைகளையும் சொல்லவே, கார்த்திக் கடத்தப்பட்ட வேனை கண்டுபிடித்து விழா நடக்கும் இடத்திற்கு கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது, சிவனாண்டி தனது ரௌடிகளுக்கு போன் போட்டு வீட்டிற்கு சென்று ரேவதியை வைத்து கார்த்திக்கை பிளாக் மெயில் செய்ய சொன்னார். ரௌடியும் அப்படியே செய்யவே, சுவாதிக்கு கார்த்திக் ஐடியா கொடுக்க, அதைவே வைத்து ரௌடிகளை விரட்டியடித்தார்.

45
Chandrakala caught red-handed in Karthigai Deepam
Image Credit : Zee Tamil You Tube

Chandrakala caught red-handed in Karthigai Deepam

பிறகு கார்த்திக் பிளான்படி லேப்டாப் வண்டியை விழா நடக்கும் இடத்திற்கு கொண்டு சென்றார். அதுமட்டுமின்றி அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டார். அதில் தனது மாமியாருக்கு விருது கொடுத்தார். இதைத் தொடர்ந்து கோயில் புதையல் நகைகளை கண்டுபிடிக்கும் வேலையில் இறங்கினார். அப்போது முத்துவேலுவை பகடைக்காயாக வைத்து சந்திரகலாவை வைத்து காய் நகற்றினார்.

55
Karthikeyan traps Chandrakala video evidence
Image Credit : Zee Tamil You Tube

Karthikeyan traps Chandrakala video evidence

அதன்படி, கோயில் நகைகளை புதைக்க சொன்னவர் வீட்டிற்கு சென்று 100 சவரன் நகைகளை திரும்ப பெற்று கொண்டு வந்தார். இதையெல்லாம் அந்த ரௌடியின் மனைவி ரகசியமாக வீடியோ எடுத்து கார்த்திக்கிடம் கொடுத்துவிட்டார். அந்த வீடியோவில் சந்திரகலா இது கோயில் புதையல் நகை. முழுக்க முழுக்க என்னுடையது. எனக்கு சொந்தமானது என்று கூறியுள்ளார். அதோடு கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடு முடிந்தது. இனி அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து இன்று நடக்கும் எபிசோடில் பார்க்கலாம்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
தொலைக்காட்சி
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
கனவு நனவானது! ஆகாயத்தில் பறக்கும் மகன் - நெகிழ்ச்சியில் எதிர்நீச்சல் நடிகை! குவியும் வாழ்த்துக்கள்!
Recommended image2
ஆலிவரின் ஆட்டம் ஆரம்பம்... ஜனனியை சேஸ் பண்ணும் தேவசகாயம் - எதிர்நீச்சல் தொடர்கிறது அனல்பறக்கும் ட்விஸ்ட்
Recommended image3
லஞ்சம் வாங்கிய செந்தில்... மயிலுக்காக மாஸ்டர் பிளான் போடும் மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved