MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • கனவு நனவானது! ஆகாயத்தில் பறக்கும் மகன் - நெகிழ்ச்சியில் எதிர்நீச்சல் நடிகை! குவியும் வாழ்த்துக்கள்!

கனவு நனவானது! ஆகாயத்தில் பறக்கும் மகன் - நெகிழ்ச்சியில் எதிர்நீச்சல் நடிகை! குவியும் வாழ்த்துக்கள்!

சீரியலில் 'ரேணு' கதாபாத்திரத்தில் அமைதியான நடிப்பை வெளிப்படுத்தும் எதிர்நீச்சல் நடிகை பிரியதர்ஷினி, நிஜ வாழ்வில் ஒரு தாயாக தனது மகனின் லட்சியத்திற்காக எவ்வளவு உறுதுணையாக இருந்தார் என்பது பற்றிய தொகுப்புதான் இந்த பதிவு…

2 Min read
Author : Rsiva kumar
Published : Mar 10 2026, 01:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பிரியதர்ஷினி நீலகண்டன் மகன் கிரித்திக்
Image Credit : priyadharshinikishoreneelakndn Instagram

பிரியதர்ஷினி நீலகண்டன் மகன் கிரித்திக்

சன் டிவியில் டாப் 10 சீரியல்களில் முதல் இடத்தில் இருக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது என்னும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ரேணுகா கதாபாத்திரத்தில் ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வருபவர்தான் நம் பிரியதர்ஷினி. இவர் தன் மகனை பைலட்டாக்கி தனது கனவை அடைந்துள்ளார். இந்த மகிழ்ச்சியான தருணத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

25
பிரியதர்ஷினி:
Image Credit : priyadharshinikishoreneelakndn Instagram

பிரியதர்ஷினி:

நடிகை பிரியதர்ஷினி பாக்கியராஜ் இயக்கிய நடித்த தமிழ்த் திரைப்படம்1984ம் ஆண்டு தாவணிக்கனவுகள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து, இதயக்கோவில், உயிரே உனக்காக ஆகிய திரைப்படங்களில் சிறப்பாக நடித்து பாராட்டை பெற்றார். பின் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விழுதுகள் சீரியலில் முக்கியமான ரோலில் நடித்து சீரியலில் தனது பயணத்தை தொடங்கினார். 

அதன்பின், ரேகா ஐபிஎஸ், எத்தனை மனிதர்கள், கோலங்கள் என அடுத்தடுத்து சீரியலில் நடித்து வந்தார் பிரியதர்ஷினி. கலைஞர் தொலைக்காட்சியில் படவரிசை பத்து என்ற நிகழ்ச்சியைதொகுத்து வழங்கினார். திருமணம்: இவர் சன் டிவியில் செய்திவாசிப்பாளராக இருந்த போது எடிட்டராக இருந்த ராமகிஷோரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கிரிஷ் என்ற மகன் இருக்கிறார்.

35
நடன மங்கை:
Image Credit : priyadharshinikishoreneelakndn Instagram

நடன மங்கை:

நடிகை பிரியதர்ஷினி பரதநாட்டிய கலைஞர். நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். பரதநாட்டியத்தில் இவருக்கு தெரியாத எதுவும் இல்லை என்றே சொல்லலாம். சினிமா பிரபலங்கள் மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்பது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது இவரும் அதற்கு சலித்தவர்கள் அல்ல. மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் என்ன ஒரு ஆச்சரியமிக்க விஷயம் என்றால் மானாட மயிலாட நிகழ்ச்சியில் முதல் பரிசையும் பெற்றார் பிரியதர்ஷினி. அது மட்டுமல்லாமல் சிறு சிறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று இருக்கிறார். பல மேடைகளிலும் ஏறி பல விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது அவர் பரதநாட்டிய நடன ஆசிரியராகவும் இருந்து வருகிறார் குழந்தைகளுக்கும் கற்பித்தும் வருகிறார்.

45
நடிப்பு திறமை:
Image Credit : priyadharshinikishoreneelakndn Instagram

நடிப்பு திறமை:

பிரியதர்ஷினியின் அழகான பேச்சாலும், க்யூட்டான அழகாலும் ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்து இருக்கிறார் சில ஆண்டுகள் சினிமாத்துறையில் தலைகாட்டாமல் இருந்தார் பிரியதர்ஷினி. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் ரேணுகா கேரக்டரில் யதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருக்கும் இவர் இந்த சீரியலில் தனக்கு வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிர்ஷ்டம் என்று அண்மையில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். தற்போது தமிழ்நாட்டையே தன் வசம் வைத்துள்ளார் பிரியதர்ஷினி.

55
Priyadarshini Neelakandan Son Hrithik Pilot
Image Credit : priyadharshinikishoreneelakndn Instagram

Priyadarshini Neelakandan Son Hrithik Pilot

கனவு நிறைவேறிய தருணம்: வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியதர்ஷினி, தனது மகன் கிரிஷை பைலட்டாக்கி தனது கனவை அடைந்து உள்ளார். தனது மகன் மற்றும் கணவருடன் தனி ஹாலிகாப்டரில் ஜாலி ட்ரிப் சென்றுள்ளார். அந்த வீடியோவை பதிவிட்டுள்ள பிரியதர்ஷினி, உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் மகனே. உன்னோடு தனியாக பறக்குறேன். இந்த தருணத்தை நான் எப்பவும் மறக்கவே மாட்டேன் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் பல லைக்குகளையும் குவித்து வருகின்றனர். தன் கனவை நிறைவேற்றிய தன் மகனுக்கு என் மனமார்ந்த நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ramana Kishore (@ramanakishore_25)

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.
தமிழ் சினிமா
திரைப்படம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆலிவரின் ஆட்டம் ஆரம்பம்... ஜனனியை சேஸ் பண்ணும் தேவசகாயம் - எதிர்நீச்சல் தொடர்கிறது அனல்பறக்கும் ட்விஸ்ட்
Recommended image2
லஞ்சம் வாங்கிய செந்தில்... மயிலுக்காக மாஸ்டர் பிளான் போடும் மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
Recommended image3
பிளாப் ஆன மனோஜின் லவ் டிராமா... ரோகிணியின் சாட்டையடியால் கதறிய சந்தோஷ் - சிறகடிக்க ஆசை சீரியல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved